மருத்துவ குறிப்பு

கர்ப்ப காலத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டா உயிருக்கு ஆபத்து இல்லாம எப்படி நிறுத்துவது?தெரிஞ்சிக்கங்க…

கர்ப்ப காலத்தின் ஆரம்பக் கட்டங்களில் பல பெண்களுக்கு பிறப்புறுப்பில் திடீரென இரத்த போக்கை உண்டாவதுண்டு . இது சாதாரண விஷயமாக இருந்தாலும் தொடர்ச்சியான இரத்தப்போக்கு இருந்தால் அதை கவனிப்பது மிகவும் முக்கியம். இந்த இரத்தப்போக்கின் போது வலி, காய்ச்சல், மயக்கம், தலைசுற்றல், வயிறு பிடிப்பு போன்ற பிரச்சினைகள் கூட ஏற்படலாம். எனவே மருத்துவரை காண்பதும் இரத்த போக்கை கட்டுப்படுத்துவதும் மிகவும் முக்கியம்.

இரத்தப்போக்கின் தன்மையும் நிறமும்

இரத்தப்போக்கின் அளவை கண்டறிதல் மிகவும் முக்கியம். ஒவ்வொரு முறையும் உங்களுக்கு எந்த அளவு இரத்தப்போக்கு ஏற்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். அதேபோல் இரத்தப்போக்கு வலியுடன் இருக்கிறதா அல்லது இல்லையா, தொடர்ச்சியான அல்லது விட்டுவிட்டு ஏற்படுகிறதா, அதன் நிறம் சிவப்பா, ப்ரவுன், கருப்பா என்று இவற்றையும் கண்காணிக்க வேண்டும். மேலும் இரத்தப்போக்கு ஏற்படும் போது கட்டியாக வெளிவருகிறதா எதாவது திசுக்கள் வெளிவருகிறதா என்று பார்ப்பதுடன், அதில் சந்தேகம் இருந்தால் சேகரித்து மருத்துவரின் ஆலோசனையை பெறுவதும் நல்லது.

நாப்கின் எண்ணிக்கை

நீங்கள் இரத்தப்போக்கு காலங்களில் காலையில் 8 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 8 மணி வரை எத்தனை நாப்கின் பேடுகளை பயன்படுத்துகிறீர்கள் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள். இந்த மதிப்பீடுகள் எல்லாம் மருத்துவர்கள் உங்கள் பிரச்சினையை ஆராய உதவியாக இருக்கும்.

ஓய்வு

இந்த மாதிரி கர்ப்ப கால இரத்தப்போக்கின் போது கண்டிப்பாக ஓய்வு எடுப்பது முக்கியம். படுக்கையில் ஓய்வு எடுப்பதன் மூலம் இதை கட்டுப்படுத்தலாம். அப்படியும் நிற்கவில்லை என்றால் மறுபடியும் மருத்துவரை அணுகிக் கொள்வது நல்லது.

கனவேலை கூடாது

மருத்துவர்கள் இந்த மாதிரியான நேரங்களில் அதிக வேலை மற்றும் கனவேலை கூடாது என்கின்றனர். கனமான பொருட்களை தூக்குதல், படியேறுதல், ஓடுதல், சைக்கிளிங் போன்றவை கூடாது. ஏனெனில் இந்த மாதிரியான வேலைகள் உங்கள் கர்ப்ப பையில் இரத்தக்கசிவை ஏற்படுத்துவதோடு நஞ்சுக் கொடியில் உள்ள மென்மையான இரத்த நாளங்களையும் முறித்து விடும். எனவே சிறுதளவு இரத்த கசிவு ஏற்பட்டாலும் வேலைகள் கூடாது.

உடலுறவு கூடாது

கர்ப்ப கால இரத்த போக்கின் போது உடலுறவு கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் உடலுறவில் ஈடுபட்டால் இரத்தக் கசிவு அதிகமாக வாய்ப்புள்ளது என்கின்றனர். எனவே இரத்த போக்கு நிற்கும் வரை அல்லது 2-4 வாரங்களாவது பாதுகாப்பாக இருப்பது நல்லது.

டேம்போன்ஸ்

இந்த இரத்த போக்கின் போது குறிப்பாக டேம்போன்ஸ்(இரத்தத்தை உறிஞ்சும் பிளக்) போன்றதை பயன்படுத்தாதீர்கள். மேலும் அந்த பகுதியில் தண்ணீரை கொண்டு ஸ்ப்ரே செய்வதோ வேகமாக கழுவதோ கூடாது. ஏனெனில் இதனால் யோனி பகுதியில் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

நீர்ச்சத்து

அதிகமான இரத்த போக்கு உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்துகளையும் குறைத்து விடும். எனவே ஒரு நாளைக்கு 8 கப் தண்ணீர் வரை நீங்கள் குடிக்க வேண்டும். போதுமான நீர்ச்சத்துடன் இருந்தால் தான் உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். வெறுமனே தண்ணீர் மட்டும் குடிக்க வேண்டுமா என்று அலுத்துக்கொண்டால் அவ்வப்போது பழச்சாறுகளையும் எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு தெம்பையும் தரும்.

விழிப்புணர்வு

இந்த கர்ப்ப கால இரத்தப்போக்கு என்பது இயல்பான விஷயம். கர்ப்பத்தின் முதல் பகுதியில் (12 வது வாரத்தில்) ஏற்படுகிறது. 20-30% பெண்கள் இந்த பிரச்சினைகளை சந்திக்கின்றனர். கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடற்கூறு மாற்றத்தால் இது ஏற்படுகிறது. அதேசமயம் இவ்வாறு அடிக்கடி நடந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

கருச்சிதைவு

அதிகமான இரத்த போக்கு, வலி போன்றவை ஏற்பட்டால் மட்டுமே நாம் பயப்பட வேண்டியதிருக்கும். சில பேருக்கு குழந்தை கருப்பையில் வளராமல் கருமுட்டை குழாயில் வளருவதால் (எக்டோபிக் கருவுறுதல்), கருப்பையில் அசாதாரண திசுக்களின் வளர்ச்சி, கருச்சிதைவு போன்றவைகளும் இரத்த போக்கை ஏற்படுத்தும்.

கருப்பை கட்டிகள்

50% பெண்கள் 20 வது கர்ப்ப வாரத்திற்குள் கருச்சிதைவால் அவதிப்படுகின்றனர். கர்ப்ப காலத்தின் இரண்டாம் அல்லது மூன்றாவது பகுதியில் இரத்த போக்கு ஏற்பட்டால் நஞ்சுக்கொடி பிரச்சினை, முந்தைய பிரசவ அறுவை சிகிச்சை, குறை பிரசவம் போன்றவற்றை குறிக்கும். இதைத் தவிர கருப்பையில் கட்டிகள், உடலுறுவால் கருப்பையின் சுவர்களில் ஏற்பட்ட காயங்கள், அசாதாரண செல்களின் வளர்ச்சி, கர்ப்ப வாய் புற்று நோய் போன்றவையும் இரத்த போக்கிற்கு காரணமாகின்றன.

பிரசவ தேதி

நீங்கள் கருவுற்ற தேதியையும் எப்போது இருந்து இரத்த போக்கு ஏற்படுகிறது என்பதையும் குறித்து வைத்து கொள்ளுங்கள். உங்கள் பிரசவ தேதியை அறிய 9 மதங்களையும் உங்கள் கடைசி மாதவிடாய் தேதியிலிருந்து 7 நாட்களையும் கூட்டிக் கொள்ளுங்கள். உங்கள் இறுதி மாதவிடாய் தேதி ஜனவரி 1, பிரசவ தேதி அக்டோபர் 8 ஆக இருக்கும்.

உங்கள் பிரசவ தேதியை ஒட்டி இரத்த போக்கு ஏற்பட்டால் பிரசவ செயல் ஆரம்பம் ஆகி விட்டது என்று அர்த்தம் . எனவே உங்கள் மருத்துவரிடம் இது குறித்து ஆலோசிப்பது நல்லது.

மருத்துவ உதவி

கர்ப்ப கால இரத்த போக்கையும் அதன் அறிகுறிகளையும் அலட்சியமாக விடாதீர்கள். அதை சரியான நேரத்தில் கணக்கிட்டு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம். இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லது.

குறைந்த இரத்தப்போக்கு

லேசான அல்லது ப்ரவுன் கலரில் வலியில்லாமல் ஒன்று இரண்டு நாட்கள் மட்டும் இரத்த போக்கு இருந்தால் கவலை கொள்ள தேவையில்லை. கரு வளர்வதால் ஏற்படுகிறது. எனவே ஒன்று இரண்டு நாட்களுக்கு எந்த வேலையும் செய்யாமல் முழுமையாக ஓய்வில் இருங்கள். அதிக இரத்த போக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

வலி

வலி அல்லது வயிறு பிடிப்பு ஏற்பட்டால் கருப்பையிலிருந்து குழந்தை வெளியேறுவதற்கான பிரசவ வலியாக கூட இருக்கும். எனவே உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த வலியானது விட்டு விட்டு ஆரம்பித்து பிறகு தொடர்ச்சியாக இரத்தம் கலந்த மியூக்கஸ் திரவம் வெளியேற்றத்துடன் அமையும்.

மயக்கம் அல்லது சோர்வு

ரத்தப்போக்கு உண்டாகும் சமயங்களில் மயக்கம் அல்லது சோர்வு இருந்தால் அது உங்களுக்கே தெரியாமல் அதிக இரத்தம் வெளியேறி இருப்பதற்கான அறிகுறிகளாகும். எனவே இந்த மாதிரியான நேரங்களிலும் மருத்துவரை உடனடியாக நாடுங்கள்.

காய்ச்சல்

உங்கள் உடல் வெப்பநிலை அடிக்கடி பரிசோதியுங்கள். காய்ச்சல் போன்றவற்றால் உண்டாகும் நோய்த்தொற்றால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை இது காட்டுகிறது. எனவே உடனே மருத்துவரை சந்தித்து உடல் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கான ஆலோசனையைப் பெற்றிடுங்கள்.

திசுக்கள்

இரத்தத்தில் திசுக்கள் வெளியேறினால் உடனே மருத்துவரை அணுகுங்கள். இதுவும் கருச்சிதைவிற்கான அறிகுறியாகும். எனவே உங்கள் கர்ப்ப கால இரத்த போக்கை போதுமான விழிப்புணர்வுடன் இருந்து கண் காணியுங்கள். இதை சாதாரணமானது தானே என்று அஜாக்கிரதையாக இருந்தீர்கள் என்றால் அது உயிருக்கே பெரும் ஆபத்தாகப் போய் முடிந்துவிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button