ஆரோக்கியம் குறிப்புகள்

வாழ்க்கையில் அனைத்தையும் சமநிலையில் சமாளிப்பது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

நாம் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர் நோக்கியிருக்கிறோம். அதேபோல் பல பாஸிட்டிவ்வான விஷயங்களையும் சந்தித்து இருக்கிறோம். இருந்தாலும், வெற்றிகளையும் நன்மைகளையும் கண்டு அளவுக்கு அதிகமாக சந்தோஷமாக இருக்காமலும், தோல்விகளையும் துன்பங்களையும் கண்டு மிகவும் துவண்டு போகாமல் இருக்கவும் நாம் கற்றிருக்கிறோமா, பழகியிருக்கிறோமா? இதுதான் நம் வாழ்க்கையில் முக்கியமான விஷயம்.

இன்பத்தையும் துன்பத்தையும் தோள்களில் போட்டுக் கொண்டு வாழ்க்கையை ஒரே சமநிலையில் கொண்டு செல்கிறோமா என்பதை நமக்கு நாமே அவ்வப்போது அலசி ஆராய்ந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சில வழிமுறைகளை இப்போது நாம் பார்க்கலாம்.

முன் நோக்கிய பயணம்!

வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களில் வரும் பல இடர்ப்பாடுகளையும், நன்மைகளையும் சமமாகக் கருதிக் கொண்டு சென்றால் தான், பெரிய பெரிய இலட்சியங்களை நாம் எளிதாகவும், விரைவாகவும் சந்தித்துச் செல்ல முடியும். இது நம்முடைய வேலைகளை மட்டுமல்ல, நம் உறவுகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் எதிர்காலமும் சிறக்கும்.

உடல், மன ஆரோக்கியம்!

அதேபோல், நம் உடலையும் மனத்தையும் சமநிலையில் வைத்துக் கொண்டால் தான் நம் வாழ்க்கை சிறப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். நம்மைச் சார்ந்துள்ள குடும்பமும் ஆரோக்கியமாக இருக்கும்.

மெகா கனவுகள்!

நம் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களுக்கு இணையாக நம் கனவுகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பெரிய வீடு, பரந்த தோட்டம், பிரம்மாண்டமான கார் என்று பெரிய பெரிய கனவுகளை நனவுகளாக்க நாம் வாழ்க்கையில் கொண்டு செல்லும் சமநிலைகள் மிகவும் உதவும்.

முழுத் திறமைகள்!

வாழ்க்கையில் நம் இலட்சியத்தை அடைய நம்முடைய முழுத் திறமைகளையும் கொட்டி உழைக்க வேண்டும். அதே நேரத்தில் நம்முடைய உடல்நிலையையும் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். நம் வேலைக்கோ, தொழிலுக்கோ முக்கியத்துவம் கொடுத்தாலும், அதற்குச் சமமாக நம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button