27 C
Chennai
Thursday, Nov 14, 2024
22 61f4173ddae
சமையல் குறிப்புகள்

சூப்பரான முட்டை ப்ரைடு ரைஸ்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முட்டை ஃப்ரைடு ரைஸ் என்றால் அதீத ப்ரியம் இருக்கும். ஹோட்டலில் செய்யப்படும் சுவைபிடித்துபோனாதால் அங்கே தான் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் அதே சுவையில் எப்படி வீட்டில் இருந்தப்படி செய்யலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி – 1 கப் வெங்காயம் – 2 கேரட் – 1 பீன்ஸ் – 50 கிராம் வெங்காயத்தாள் – 1 குடை மிளகாய் – 1 இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி முட்டை – 3 சில்லி சாஸ் – 1 மேஜை கரண்டி சோயா சாஸ் – 1 மேசைக் கரண்டி மிளகு தூள் -1 மேஜை கரண்டி நெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்

முதலில் வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். அடுத்ததாக கேரட், பீன்ஸ், குடை மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர், சாதம் உதிரியாக வேக வைத்து ஆற வைத்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து பொரித்து கொள்ளவும். மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் பாதி வெங்காயத் தாளை சேர்த்து வதக்கி பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதன் பின் கேரட், பீன்ஸ் சேர்த்து கலர் மாறாமல் வதக்கவும்.

அடுத்து அதில் குடைமிளகாயை போட்டு வதக்கவும். அனைத்தும் வெந்ததும் அதில் உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு மூடி வைத்து வேக வைக்கவும்.

காய்கள் நன்றாக வெந்த பின் ஆற வைத்த சாதம், பொரித்த முட்டை சேர்த்து நன்றாக கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும். அவ்வளவுதான் சூப்பரான முட்டை ஃப்ரைடு ரைஸ் ரெடி.

Related posts

சுவையான பனீர் டிக்கா! தயார் செய்வது எப்படி?

nathan

தேங்காய் பால் புளிக்குழம்பு

nathan

சூப்பரான சேமியா வெஜிடபிள் இட்லி

nathan

சூப்பரான சத்தான தக்காளி கோதுமை தோசை..

sangika

வெள்ளரி சாலட்டை இவ்வாறு செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு!…

sangika

சுவையான மிளகு வடை ரெடி….

sangika

சுவையான அரைச்சுவிட்ட வத்தக் குழம்பு

nathan

சுவையான தேங்காய்பால் தக்காளி சாதம் – சுவையாக செய்வது எப்படி?

nathan

சமைக்கும் போது இவற்றை மறந்திடாதீர்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்த கூடியவை….

sangika