24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
amil News tamil news Biriyani Bread Biryani SECVPF
சமையல் குறிப்புகள்

சுவையான பிரெட் பிரியாணி – செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சுவையான பிரட்டில் பிரியாணி எப்படி செய்யலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ பிரெட் – 10 நெய் – 150 மில்லி அளவு வெங்காயம் – 4 தக்காளி – 3 இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் பட்டை- 4 பிரியாணி இலை – 5 கிராம்பு- 5, ஏலக்காய் – 5 மிளகாய்த் தூள் – 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 5 தயிர் – 1 டம்ளர் எலுமிச்சை பழம் – 1 கொத்தமல்லி தழை- கைப்பிடியளவு புதினா – கைப்பிடியளவு எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்;

முதலில் வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். அடுத்ததாக தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

பின்னர், பிரெட்டை துண்டுகளாக வெட்டி நெய்யில் வறுத்து வைக்கவும். இதனையடுத்து, குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் போட்டு தாளித்து அத்துடன் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கிய வெங்காயத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.

மேலும், தக்காளி நன்றாக குழைய வெந்ததும் கொத்தமல்லி, புதினா இலை, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் போட்டு வதக்கவும்.

அடுத்து உப்பு, பிரெட், எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வேகவிட்டு, அரிசியைப் போட்டு அதனைவிட இரண்டு மடங்கு தண்ணீர்விட்டு குக்கரை மூடி 2 விசில் 10 நிமிடம் மிதமான தீயில் அடுப்பை வைத்து இறக்கவும். இப்போது சுவையான பிரட் பிரியாணி ரெடி.

Related posts

சூப்பரான முட்டை நூடுல்ஸ்

nathan

சுவையான காளான் குருமா

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்

nathan

சுவையான சில்லி பன்னீர் கிரேவி

nathan

பீர்க்கங்காய் பொரியல்

nathan

முட்டை ஆம்லெட் குழம்பு

nathan

தொண்டை வலி ? உடனடி நிவாரணத்திற்கு இந்த 10 எளிய வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கவும்

nathan

சுவையான சுண்டைக்காய் வத்தக் குழம்பு

nathan

தக்காளி குழம்பு

nathan