இஞ்சி நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் அற்புத உணவு பொருள்.
இஞ்சி பெரும்பாலும் மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மசாலாவாக கருதப்படுகிறது.
இது கறி, தேநீர் மற்றும் குக்கீகளில் கூட சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது.
இதில் சக்தி வாய்ந்த மருத்துவ குணங்கள் கொண்ட ஜிஞ்சரால் உள்ளது. குமட்டல் மற்றும் காலை நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே, நீங்களும் காலை நேரத்தில் மந்தமாகவும், ஆற்றல் குறைவாகவும் இருப்பவராக இருந்தால், உங்கள் காலை உணவில் இஞ்சியைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தினமும் காலை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மை குறித்து பார்க்கலாம்.
தினமும் காலை உணவில் இஞ்சி சேர்ப்பதால் மலச்சிக்கல் முழுமையாக நீங்கிவிடும்.
மலச்சிக்கல் நீங்கி விட்டால் இதன் மூலம் ரத்தம் சுத்தமடையும்.
வாதம் பித்தம் சிலேத்துமம் சமநிலையில் இருக்கும்.
ரத்தம் சுத்தமாவதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
இதன் மூலம் சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
இஞ்சியால் இளமையும் ஆரோக்கியமும் மிக எளிதாக கிடைத்துவிடும்.
மேலும் இஞ்சி கற்பத்தை சாப்பிட்டு வந்தால் வாத குணத்தின் செயல்பாடு எப்பொழுதும் சமநிலையில் இருக்கும்.
உங்கள் காலை உணவில் இஞ்சியைச் சேர்ப்பதற்கான பொதுவான வழி தேநீர். ஒரு கப் காரமான மசாலா தேநீரில் இஞ்சி சேர்த்து அருந்துங்கள்.
இஞ்சி ஜூஸூம் உங்கள் காலை வேளையை சிறப்பாக்கும் உணவாகும்.