25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
535 2 chickpeas
ஆரோக்கிய உணவு

கொண்டைக்கடலை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

சப்பாத்திக்கு பலரும் விரும்பி சாப்பிடுவது கொண்டைக்கடலை மசாலா என்னும் சன்னா மசாலா. இது ஒரு வட இந்திய உணவுப் பொருள். தற்போது நம் வீட்டில் உள்ளோரும் இந்த கொண்டைக்கடலை மசாலாவின் சுவைக்கு அடிமையாகிவிட்டனர்.

இதற்கு கொண்டைக்கடலை தான் காரணம். அத்தகைய கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. மேலும் இது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்க பெரிமும் உதவி புரிகிறது.

இங்கு அந்த கொண்டைக்கடலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

எடையை குறைக்க உதவும்

கொண்டைக்கடலையில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே எடையைக் குறைக்க நினைப்போர் இதனை தங்களின் உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.

நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும்

கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்

கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வைத் தடுக்கும்

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு உள்ள பெண்கள், கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், அந்த பிரச்சனை குணமாகும். மேலும் இது பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடும். மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் உதவும்.

இரத்த சோகை

இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள் கொண்டைக்கடலை எனலாம். ஏனெனில் இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் தான் காரணம்.

செரிமான பிரச்சனைகள்

கொண்டைக்கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான பிரச்சனைகள் அகலும். முக்கியமாக மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை உட்கொண்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இதய ஆரோக்கியம்

கொண்டைக்கடலையை தொடர்ந்து எடுத்து வந்தால், இதய நோய் வருவதைத் தடுக்கலாம் என்று ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு கொண்டைக்கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச் செய்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.

Related posts

கட்டாயம் தவிர்க்க வேண்டிய உப்பு அதிகம் நிறைந்த உணவுப் பொருட்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சை ஜூஸ் குடிப்பதன் மூலமாக நாமடையும் ஆரோக்கிய பயன்கள்!!!

nathan

சுவையான உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் கிரேவி

nathan

உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாக்கும் பழம்

nathan

அடேங்கப்பா! ஆரஞ்சு பழத்தை விட விதையில் இவ்வளவு சத்தா?

nathan

இடுப்பைச் சுற்றியிருக்கும் கொழுப்பை கரைக்கும் உணவுகள்.சூப்பர் டிப்ஸ்

nathan

நரம்பு மண்டல பாதிப்பை கட்டுப்படுத்தும் சுக்கு கஷாயம்

nathan

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை

nathan

பிரேக் ஃபாஸ்ட் !

nathan