28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
eatingunhealthyfoods
ஆரோக்கியம் குறிப்புகள்

வேகமாக குண்டாக்கும் உணவுகள் எவையென்று தெரியுமா?

நீங்கள் ஆரோக்கியமானவராகவும், அழகிய உடலமைப்பிலும் இருப்பதற்கு உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளீர்களா? அப்படியெனில் உங்களுக்கு கண்டிப்பாக சில டயட் டிப்ஸ்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். அதுவும் உடல் எடையை வேகமாக குறைப்பதற்கான டயட் டிப்ஸை தான் பலரும் தெரிந்து கொள்ள விரும்புவோம். என்ன சரிதானே?

இதுவரை நீங்கள் படித்த பல உடல் எடை குறைப்பு குறித்த டிப்ஸ்களில், ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்க ஒருசில குறிப்பிட்ட செயல்களை செய்ய சொல்வார்கள் அல்லது ஒருசில உணவுகளை சாப்பிட சொல்வார்கள்.

Inflammatory Foods That Cause Weight Gain
அதேப் போல் ஒருசில உணவுகளையும் தவிர்க்க சொல்வார்கள். அதில் எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிக எண்ணெய், நெய் மற்றும் வெண்ணெய் நிறைந்த உணவுகள், சீஸ் நிறைந்த உணவுகள், குறிப்பிட்ட வகையான இறைச்சிகள், இனிப்புகள் போன்றவற்றை எடையைக் குறைக்க வேண்டுமானால் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இது அனைவருக்குமே தெரிந்தது தான்.

ஆனால் நாம் எதிர்பார்க்காத குறிப்பிட்ட சில உணவுகள் நம் உடலினுள் அழற்சியை ஏற்படுத்தி, உடலில் குறிப்பிட்ட வகையான ஹார்மோன்களை வெளியிட்டு, உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்பது தெரியுமா? உங்களுக்கு அந்த உணவுகள் எவையென்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். அதைப் படித்து அவற்றை உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

பால் பொருட்கள்

பால், வெண்ணெய், நெய் மற்றும் தயிர் போன்றவை மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் தான். ஆனால் இவை அழற்சியை உண்டாக்கும் உணவு வகைகளுள் ஒன்று. அதுவும் இந்த உணவுகள் செரிமான மண்டலத்தினுள் சென்ற பின், அதில் உள்ள புரோட்டீன் மற்றும் கொழுப்பு பொருட்கள் செரிமானமாவதற்கு கடினமாக இருப்பதால், அவை செரிமான மண்டலத்தில் அழற்சியை ஏற்படுத்தும்.

இந்த அழற்சியினால் உடலினுள் உடல் பருமன் மற்றும் செரிமான பிரச்சனைகளுடன் தொடர்புடைய ஹார்மோன்கள் வெளியிடப்படும். மேலும் பால் பொருட்களில் உள்ள அதிகப்படியான கலோரிகளும், ஒருவரது உடல் பருமனை அதிகரிக்கும்.

செயற்கை இனிப்புகள்

எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்பவர்கள், தங்களது உணவுகள் மற்றும் பானங்களில், சர்க்கரை கொழுப்புக்களாக உடலில் தேங்கும் என்று, செயற்கை சுவையூட்டிகளை சேர்த்து உட்கொள்வார்கள். ஆனால் செயற்கை சுவையூட்டிகள் தான் இருப்பதிலேயே மிகவும் மோசமானது மற்றும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டுபண்ணக் கூடியதும் கூட. அதில் ஒன்று தான் உடல் பருமனை அதிகரிப்பது.

பன்றி இறைச்சி

பலருக்கும் பன்றி இறைச்சி என்றால் கொள்ளைப் பிரியமாக இருக்கும். பன்றி இறைச்சியில் கொழுப்புச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. இது உடல் பருமனை அதிகரிக்கும். எனவே எடையைக் குறைப்போர் இந்த பன்றி இறைச்சி பக்கமே செல்லக்கூடாது. மேலும் பன்றி இறைச்சியில் இருக்கும் அதிகளவிலான கொழுப்பு, செரிமான மண்டலத்தினுள் அழற்சியை உண்டாக்கி, உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

வெள்ளை பிரட்

வெள்ளை பிரட் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல எனவும், ப்ரௌன் பிரட்டை விட இதில் ஸ்டார்ச் அளவு அதிகமாக இருப்பதும் அனைவருக்குமே தெரியும். ஆனால் வெள்ளை பிரட் உடலினுள் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்குவதோடு மட்டுமின்றி, உடல் பருமனுக்கு வழிவகுக்கும் மற்றும் இதில் உள்ள க்ளுட்டன் பொருள், உடலினுள் அழற்சியை உண்டாக்கி, உடல் பருமனுக்கு காரணமான ஹார்மோன்களை வெளியிடச் செய்யும்.

வெஜிடேபிள் ஆயில்

பெரும்பாலான வீடுகளில் அன்றாட சமையலில் பயன்படுத்தும் எண்ணெய் தான் வெஜிடேபிள் ஆயில். குறிப்பாக இந்தியாவில் தான் இந்த எண்ணெய் அதிகமான வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆய்வுகளில் வெஜிடேபிள் ஆயிலைக் கொண்டு சமைத்த உணவை உட்கொண்டால், அது உடலில் அழற்சியை உண்டாக்குவதாகவும். அதில் உள்ள ஆரோக்கியமற்ற கொழுப்பு அமிலங்கள், செரிமானமாவது கடினமாக இருப்பதால், இது உடல் பருமனுக்கு வழிவகுப்பதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே இந்த எண்ணெயை உங்கள் சமையலில் பயன்படுத்தாதீர்கள்.

ஃபாஸ்ட் புட்

உறைய வைக்கப்பட்ட உணவுகள், பிட்சா, பர்கர், ப்ரைஸ் போன்றவை தான் ஃபாஸ்ட் புட் உணவுகள். ஏனெனில் இவற்றில் பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால், இது உடலினுள் அழற்சியை உண்டாக்கி, இதய பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றுடன், உடல் பருமனுக்கும் வழிவகுத்துவிடும். எனவே இந்த உணவுகளில் இருந்து விலகியே இருங்கள்.

பேக்கிங் உணவுகள்

உங்களுக்கு பேக் செய்யப்பட்ட உணவுகளான கேக், மஃப்பின்கள், குக்கீஸ் போன்றவை மிகவும் விருப்பமானது என்றால், கட்டாயம் இவற்றை தினமும் ஒருமுறையாவது சுவைத்துவிடுவீர்கள். ஆனால் உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், உடல் பருமனை உண்டாக்கும் அழற்சியை ஏற்படுத்தும் பேக்கிங் உணவுகளில் இருந்து விலகி இருங்கள். மேலும் இந்த உணவுகளில் உள்ள அதிகளவிலான ட்ரான்ஸ் கொழுப்புக்கள், செரிமான பிரச்சனைகளை உண்டாக்குவதோடு, சர்க்கரை நோயாலும் அவஸ்தைப்படச் செய்யும்.

ஆல்கஹால்

ஆல்கஹால் என்பது பானம், இது ஒரு உணவல்ல. ஆனால் இது உடலினுள் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் அழற்சியை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? ஆல்கஹாலை தயாரிக்கும் முறை தான், இதைப் பருகியவர்களின் உடலில் அழற்சியை ஏற்படுத்துவதற்கு காரணம். அதுவும் இந்த பானம் மனித உடலினுள் உடனடியாக அழற்சியை ஏற்படுத்தும். ஆகவே உங்கள் எடையைக் குறைக்க ஆசைப்பட்டால், இந்த ஆல்கஹாலை சுவைத்துப் பார்க்கக் கூட நினைக்காதீர்கள்.

மயோனைஸ்

இன்று மயோனைஸ் பல்வேறு உணவுப் பதார்தங்களான சாண்விட்ச் முதல் பிட்சா வரை அனைத்திலும் சுவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் மயோனைஸ் அவ்வளவு சுவைமிக்க ஓர் உணவுப் பொருள். இருப்பினும் மயோனைஸில் உள்ள ஏராளமான பதப்படுத்தும் உட்பொருட்கள் மற்றும் எண்ணெய்கள், உடலில் அழற்சியை ஏற்படுத்தி, ஒருவரை விரைவில் குண்டாக்கிவிடும் அளவில் மோசமான ஓர் உணவுப் பொருள்.

Related posts

வீட்டில் கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?

nathan

வெந்நீரே… வெந்நீரே..

nathan

சமையலில் செய்யக்கூடாதவை !

nathan

உங்கள் அம்மா தான் உலகிலேயே அழகு என்பதற்கான 19 காரணங்கள்!”அம்மான்னா சும்மா இல்லைடா”…

nathan

உங்கள் இளமையைப் பாதுகாக்க

nathan

வயதாவதை தள்ளிப் போடும் சூர்யா நமஸ்காரம்.. பார்வையாளர்களையும் செய்யத் தூண்டும் கரீனா கபூரின் சூரிய நமஸ்கார பயிற்சி!

nathan

வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்

nathan

குழந்தைகளின் வயிற்றுப் போக்கு

nathan

உணவில் துவர்ப்பு சுவையை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்……!

nathan