27.8 C
Chennai
Friday, Mar 13, 2026
22 61dd820185487
ஆரோக்கிய உணவு

மாவை நீண்ட காலம் கெடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

பல வகையான மாவுகளை மக்கள் அன்றாடம் உணவுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

அதிலும், முக்கியமாக கோதுமை மாவு அல்லது ஆட்டா இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

ஏனெனில் கோதுமை மாவில் செய்யப்படும் சப்பாத்தி இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது.

மேலும், மாவு விரைவில் கெட்டுப்போகுமா என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது.

முறையாக மாவை பத்திரப்படுத்தி பாதுகாப்பாக வைத்தால் மாவு நீண்ட காலத்திற்கு கெடாமல் இருப்பதோடு, அது புதிதாகவும் இருக்கும்.

அப்படி, மாவை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி பயன்படுத்துவது எப்படி என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

முதலில், மாவை காற்று புகாத பாத்திரங்களில் மாவை அறைகளில் வைக்கலாம்.

இறுக்கமான மூடி கொண்ட உலோக பாத்திரங்களில் மாவை போட்டு வைக்க வேண்டும்.

மூடி இறுக்கமாக இருப்பதால் எளிதில் பூச்சிகள் பாத்திரத்திற்குள் நுழைய முடியாது.

பின்னர், அதிக அளவு மாவை வாங்கும் போது அவற்றை பிளாஸ்டிக் பைகளில் போட்டு குளிரான பகுதிகளில் பத்திரப்படுத்தி வைக்கலாம்.

பலா் மாவு இருக்கும் பாத்திரங்களுக்குள் மஞ்சள் அல்லது இஞ்சி ஆகியவற்றைப் போட்டு அதன் மூலம் மாவில் பூச்சிகள் ஊடுருவாமல் தடுக்கின்றனர்.

மேலும், பூச்சிகளை தடுக்க பிரியாணி இலைகளைப் போட்டு வைக்கலாம். அதாவது 3 அல்லது 4 பிரியாணி இலைகளை போட்டு வைத்தால் மாவை பூச்சிகள் தாக்காது.

மேலும் மாவு இருக்கும் பாத்திரங்களைச் சுற்றி கிராம்புகளைத் தூவலாம். அதன் மூலம் பூச்சிகள் அண்டாமல் மாவை பாதுகாக்கலாம்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…நீங்கள் தினமும் சாப்பிட கூடிய இந்த காய்கனிகள் எவ்வளவு விஷத்தன்மை வாய்ந்ததுனு தெரியுமா…?

nathan

ஒரு வயசு வரை குழந்தைக்கு மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுக்காதீங்க -தெரிஞ்சிக்கங்க…

nathan

குளிர்ச்சியான தண்ணீரை குடிப்பவரா நீங்கள்? அதனால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் என்ன?

nathan

தேனை ஏன் சூடு செய்து சாப்பிடக்கூடாது என உங்களுக்கு தெரியுமா?

nathan

வீட்டில் தயாரிக்கும் தயிர் ஏன் கெட்டியாக உள்ளது? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

`அவிச்ச முட்டை, ஆம்லெட் இதுல எது நல்லது?’… முட்டை குறித்த சந்தேகங்கள்

nathan

கல்லூரிப் பெண்கள் முதல் வேலைக்குச் செல்பவர்கள் வரை என்ன சாப்பிடலாம்?

nathan

நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேப்பம்பூ ரசம் தயாரிப்பது எப்படி?

nathan

கீழாநெல்லி சாப்பிடும் முறை

nathan