பொதுவாக தயிரை அல்லது குழம்பு செய்து சாப்பிடுவோம். ஆனால் அதனைக் கொண்டு ரசம் செய்து சாப்பிடலாம் என்பது தெரியுமா? ஆம், தயிரைக் கொண்டு அருமையான சுவையில் ரசம் செய்யலாம். இந்த ரசம் வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் வித்தியாசமாக சாப்பிட நினைப்போருக்கு இது ஒரு சிறப்பான ரெசிபி.
இங்கு தயிர் ரசத்தை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.
Curd Rasam Recipe
தேவையான பொருட்கள்:
புளித்த தயிர் – 1 கப்
தண்ணீர் – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு…
மல்ல – 1 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
வரமிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் புளித்த தயிரை தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து, பின் கலந்து வைத்துள்ள தயிர் கலவையை அத்துடன் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கினால், தயிர் ரசம் ரெடி!!!