23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
mil 1 1
ஆரோக்கிய உணவு

வாழைத்தண்டு ஆச்சரியங்கள்! சர்க்கரை நோயை தடுக்கும்! உடலின் நச்சுக் கழிவுகள் வெளியேறும்…

தற்போதைய காலக்கட்டத்தில் இளம் வயதினர் மற்றும் குழந்தைகள் வாழைத்தண்டு சாப்பிடுவதை அவ்வளவாக விரும்புவதில்லை.

இதில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரியாது.

அப்படி உணரும் பட்சத்தில் நிச்சயமாக வாழைத்தண்டு சாப்பிடுவதை தவிர்க்க மாட்டோம்.

வாழைத்தண்டு சாறினையோ அல்லது பொரியலாகவோ கூட்டாகவோ உணவில் தொடர்ந்து ஏதேனும் ஒரு வடிவில் எடுத்துக் கொண்டே வந்தீர்கள் என்றால், உங்கள் உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக் கழிவுகள் வெளியேறும்.

வாழைத்தண்டு சாறினை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால், விரைவில் சிறுநீரகக் கற்கள் கரைந்து விடும் அல்லது சிறுநீரின் வழியே வெளியேறிவிடும் என்பது நமக்குத் தெரியும். சிலர் துவர்ப்பு அதிகம் இருப்பதால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்வார்கள். அப்படி குடிக்கும் வாழைத்தண்டு ஜூஸில் இரண்டு பச்சை ஏலக்காயை தட்டிப் போட்டுக் கொள்ள வேண்டும். இப்படி குடிக்கும்போது கற்கள் உள்ளிருக்கும்போதும், வெளியேறும்போது ஏற்படுகின்ற வலி கட்டுப்படும்.

வாழைத்தண்டு சாறு குடிப்பதன் மூலமும் உடல் எடையைக் குறைக்க முடியும். வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது மிகவும் நல்ல பலன்களைத் தரும்.

ஜீரணக் கோளாறால் அவதிப்படுகிறவர்கள் வாழைத்தண்டினை சமைத்தோ சாறாகவோ சாப்பிட்டு வர, விரைவில் பலன் உண்டாகும்.

வாழைத்தண்டு சர்க்கரை நோய்களுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். நம்முடைய உடலில் சுரக்கின்ற இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதிலுள்ள சுவர்ப்பு சுவை தான் சர்கு்கரை நோய்க்கான இயற்கை மருந்துாக அமைகிறது. சிறுநீரகம் பழுதடையாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், முதலில் நம்முடைய உடலின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

Related posts

சுவையான திருநெல்வேலி சொதி

nathan

சூப்பரான கீமா டிக்கி

nathan

கலப்பட சர்க்கரையை கண்டுப்பிடிக்க சூப்பர் டிப்ஸ்….

nathan

பூண்டில் கஞ்சி செய்து தினமும் குடித்துவர, உடல் எடை மிக வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.

nathan

ஜாக்கிரதை…உயிரை பறிக்கும் விஷமாக மாறும் கருவாடு! யாரும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்?

nathan

பூண்டு, வெங்காயம் அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்?தெரிஞ்சிக்கங்க…

nathan

சளியை துரத்தும் தூதுவளை துவையல்!

nathan

சரும ஆரோக்கியத்தை மீட்க செயற்கை க்ரீம்கள் வேண்டாம் இந்த பழங்களே போதுமாம்…! தெரிஞ்சிக்கங்க…

nathan

வீட்டிலேயே இதுபோன்ற ஆரோக்கியம் நிறைந்த உணவு பொருட்களை கொண்டு பிரட் தயாரிக்கலாம்.

nathan