கிராமப்புறங்களில் பெரும்பாலான வீடுகளிலும் வேப்பம் மரம் இருக்கும். அதனால் தான் கிராமப்பகுதிகளுக்கு சென்றாலேயே, நன்கு குளிர்ச்சியான மற்றும் சுத்தமான காற்றினை சுவாசிக்க முடிகிறது.
மேலும் கிராமப்புறங்களில் பற்களை துலக்க வேப்பங்குச்சியைத் தான் பயன்படுத்துவார்கள். அதுமட்டுமின்றி, அக்காலத்தில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வேப்பிலை, வேப்பம் விதை, வேப்பம் பூ, வேப்பம் பட்டை என வேப்பம் மரத்தின் அனைத்து பகுதிகளும் பயன்படுத்தப்பட்டு வந்தன.
ஆனால் இக்காலத்தில் அந்த இயற்கை வைத்தியங்களெல்லாம் மறந்து போய்விட்டன என்பதை விட நவீன மருத்துவத்தால் மறைந்து போய்விட்டன எனலாம். இருப்பினும் தமிழ் போல்ட் ஸ்கை ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேப்பம் மரத்தினை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கொடுத்துள்ளது.
இரத்தம் சுத்தமாகும்
தினமும் வேப்பிலையை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, இரத்தம் சுத்தமாகும்.
அல்சர்
அல்சர் இருப்பவர்கள், வேப்பம் மரத்தின் பட்டையை தினமும் இரண்டு வேளை என தொடர்ந்து 10 வாரங்கள் எடுத்து வந்தால், அல்சர் குணமாகும். மேலும் வேப்பம் மரத்தின் பட்டை மலேரியா மற்றும் பல சரும பிரச்சனைகளை சரிசெய்ய உதவியாக இருக்கும்.
நீரிழிவு
வேப்பிலையில் உள்ள கெமிக்கல்கள், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவை குறைக்க உதவும். அதற்கு தினமும் வெறும் வயிற்றில் வேப்பங்கொழுந்தை சிறிது வாயில் போட்டு மென்று வர வேண்டும்.
வாய் மற்றும் பல் பிரச்சனைகள்
தினமும் வேப்பங்குச்சியைக் கொண்டு பற்களை துலக்கினால், வாய் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகள் தடுக்கப்படும். குறிப்பாக ஈறுகளில் இரத்த கசிவு, சொத்தை பற்கள், வாய் துர்நாற்றம் போன்றவை குணமாகும்.
வயிற்றுப் புழுக்கள்
வேப்பம் பூக்களை நெய் சேர்த்து வதப்பி, உப்பு, புளி, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைத்து சட்னி செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்புழுக்கள் அழியும்.
ஆரோக்கியமான சருமம்
வேப்ப இலை கொண்டு தயாரிக்கப்பட்ட டீ குடிக்கும் போது, சருமத்தின் உட்பகுதியில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் காணப்படும்.
தொண்டைப்புண்
300 மில்லி தண்ணீருடன் 3 வேப்பிலையை சேர்த்து கொதிக்க வைத்து, அந்த நீரை குளிர வைத்து, அதில் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப்புண் குணமாகும்.
பருக்கள்
வேப்பிலையை காய வைத்து பொடி செய்து, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும்.
ஆஸ்துமா
வேப்ப எண்ணெயைக் கொண்டு ஆஸ்துமா அல்லது சுவாச பிரச்சனைகளை சரிசெய்யலாம். அதற்கு சில துளி வேப்ப எண்ணெயை தினமும் மூக்கில் காலை, மாலை என விட வேண்டும். இப்படி செய்வதால் சளி அனைத்தும் வெளியேறி, சுவாச பிரச்சனைகள் வராமல் இருக்கும்.
செரிமான பிரச்சனை
தினமும் 2-3 வேப்பிலையை வாயில் போட்டு மென்று வந்தால், செரிமான மண்டலம் சுத்தமாகி, செரிமா பிரச்சனை நீங்கும்.