கோடைக் காலத்தில் சூரிய வெப்பத்தின் காரணமாக ஏற்படும் அபாய நோய்களில் முதன்மை இடம் வகிப்பது இந்த வெப்ப மயக்கம். அதிகமாக, வெயிலில் வேலை செய்பவர்களுக்கு இந்த வெப்ப மயக்கம் ஏற்படுகிறது.
பலரும் இதை சாதாரண மயக்கம், அதிக வேலை மற்றும் அலைச்சல்களின் காரணமாக ஏற்படுவதாகக் கருதுகின்றனர். ஆனால், இது சில சமயங்களில் உயிரை பறிக்கும் அளவு அபாயமான நோய் என்பது குறித்து யாருக்கும் தெரிவதில்லை.
வியர்வை
மிக அதிகமாக வியர்வை வெளிபடுதல். சிலருக்கு ஏதோ குளித்தது போல வியர்வை வரும். இது தான் வெப்ப மயக்கத்திற்கான முதல் அறிகுறி.
தலைவலி
வெப்ப மயக்கத்திற்கு அடுத்த அறிகுறியாக கூறப்படுவது அதிகப்படியான தலைவலி.
உடலின் வெட்ப நிலை
உங்கள் உடலின் வெட்பநிலை அளவிற்கு மீறி அதிகமாக இருந்தால் அது வெப்ப மயக்கத்தின் அறிகுறியாகும்.
சருமம்
சருமம் மிகவும் சிவந்து காணப்படும். இந்த அறிகுறி தான் உங்களுக்கு வெப்ப மயக்கம் ஏற்படுப்போவதை உறுதிப்படுத்தும்.
இதயத் துடிப்பு
கோடைக் காலத்தில் இதயத் துடிப்பு அதிகரிப்பதும் கூட வெப்ப மயக்கத்தின் அறிகுறிதான்.
குமட்டல்
சில நேரங்களில் வாந்தி அல்லது குமட்டல் ஏற்படும்.
மூச்சு விடுவதில் சிரமம்
வெயிலில் செல்லும் போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதும் வெப்ப மயக்கத்தின் அறிகுறி தான்.