30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
11 celery
ஆரோக்கிய உணவு

இரவு தூங்கும் முன் சிறிது செலரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – தெரிஞ்சிக்கங்க…

பலருக்கும் செலரி பற்றி தெரியாது. அதுமட்டுமின்றி, இதன் சுவையும் அனைவருக்கும் பிடிக்காது. செலரி என்பது ஒரு காய்கறி. இதில் ஏராளமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நன்மை விளைவிக்கும் நொதிகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான வைட்டமின் கே, வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அடங்கியுள்ளது.

முந்தைய காலத்தில் செலரி கை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. செலரி இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவி, இதய நோயில் இருந்து தடுப்பதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அதோடு செலரியில் டயட்டரி நார்ச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இதனை ஒரு கப் தினமும் சாப்பிட்டு வந்தால், செரிமானம் மேம்படுவதோடு, உடல் எடையும் குறையும். மேலும் செலரியில் நீர்ச்சத்து மற்றும் எலக்ரோலைட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடல் வறட்சியைத் தடுக்கும். மேலும் இதில் கல்லீரல், சருமம், கண்கள் மற்றும் அறிவாற்றல் திறன் போன்றவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளும் அதிகம் உள்ளது.

இப்போது இக்கட்டுரையில் ஒருவர் செலரியை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, செலரியை தவறாமல் உணவில் சேர்த்து வாருங்கள்.

எடை குறைய உதவும்

உங்களுக்கு எடையைக் குறைக்க வேண்டுமா? அப்படியானால் செலரி உங்களது இலக்கை அடைய பெரிதும் உதவியாக இருக்கும். ஒரு பெரிய தண்டு செலரியில் 100 கலோரிகள் தான் உள்ளன. ஆகவே உங்களது டயட்டில் எடையைக் குறைக்கும் உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்ள நினைத்தால், சாலட்டில் செலரிக் கீரையை சிறிது நறுக்கிப் போட்டு சேர்த்து சாப்பிடுங்கள்.

செரிமானத்திற்கு உதவும்

செலரில் கரையச்கூடிய நார்ச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது. இச்சத்து செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும். மேலும் இதில் நீர்ப்பெருக்கி பண்புகள் உள்ளதால், இதனை ஒருவர் அன்றாட உணவில் சேர்த்து வந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிட்டு, உடலில் உள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் ஒருவர் தூங்கும் முன் சிறிது செலரி சாப்பிட்டால், அது உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றும். குறிப்பாக வயிற்றுப்போக்கால் கஷ்டப்பட்டால், செலரியை சாப்பிடாதீர்கள்.

உட்காயங்களைக் குறைக்கும்

செலரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாலிபீனால்கள் போன்ற உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்கும் மற்றும் மூட்டு வலியைத் தடுக்கும் உட்பொருட்கள் ஏராளமாக உள்ளன. ஆஸ்துமா பிரச்சனை இருந்தால், செலரியை கட்டாயம் டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் இதை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கலாம். ஏனெனில் இதில் சாலிசிலிக் அதிகம் உள்ளது.

அல்கலைன் சமநிலை

அன்றாடம் செலரியை ஒருவர் சாப்பிட்டு வந்தால், உடலினுள் உள்ள அதிகப்படியான அமில அளவைக் குறைத்து, pH அளவை சமநிலையில் பராமரிக்க முடியும். இதனால் நெஞ்செரிச்சல், இரைப்பை பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

உயர் இரத்த அழுத்த பிரச்சனை குறையும்

உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளதா? அப்படியானால் தினமும் சிறிது செலரி சாப்பிடுங்கள். இதில் உள்ள ப்தலைடுகள், இரத்த ஓட்டத்தை குறைந்தது 14% மேம்படுத்தும் மற்றும் இரத்தத்தில் உள்ள மன அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைத்து, உடலினுள் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

ஒருவரது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது, உயர் இரத்த அழுத்த பிரச்சனை வரும். செலரியில் உள்ள பியூட்டில்ப்தலைடுகள், இதற்கு தனிப்பட்ட சுவை மற்றும் மணத்தை வழங்குவதோடு, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் செய்யும். ஒரு நாளைக்கு 2 தண்டு செலரியை சாப்பிட்டால், 7% கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க முடியும். ஆகவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், அன்றாட உணவில் செலரியை சேர்ப்பது மிகவும் நல்லது.

கண் ஆரோக்கியம் மேம்படும்

ஒரு தண்டு செலரியில் ஒரு நாளைக்கு வேண்டிய வைட்டமின் சி-யில் 10% உள்ளது. வைட்டமின் சி கண்களைப் பாதுகாக்கும் மற்றும் வயதான காலத்தில் ஏற்படும் பார்வை கோளாறைத் தடுக்கும். மேலும் செலரியில் அதிகளவிலான பாலிஃபீனால் என்னும் பைட்டோநியூட்ரியண்ட்டுகள் உள்ளது. இவையும் கண்களுக்கு மிகவும் நல்லது.

மன அழுத்தம் குறையும்

செலரியில் மக்னீசியம் அதிகம் உள்ளது. பொதுவாக மக்னீசியம் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளித்து, மனதை அமைதியுடன் வைத்துக் கொள்ளும். உங்களுக்கு இரவில் தூக்கம் வருவதில்லையா? அப்படியானால், இரவு தூங்கும் முன் சிறிது செலரியை சாப்பிடுங்கள். இதனால் உடனடியாக நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம்.

புற்றுநோயைத் தடுக்கும்

செலரியில் ப்ளேவோனாய்டுகள் மற்றும் லுடியோலின் வளமான அளவில் உள்ளது. இவை புற்றுநோயை எதிர்த்துப் போராடும். குறிப்பாக கணையம் மற்றும் குடல் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும். அதிலும் செலரியை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது மார்பகங்களில் உருவாகும் புற்றுநோய் செல்களைத் தடுத்து அழித்து, மார்பக புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கும்.

செக்ஸ் வாழ்க்கை மேம்படும்

செலரியை சாப்பிடும் போது, உடலினுள் ஆண்ட்ரோஸ்டனோன் மற்றும் ஆண்ட்ரோஸ்டெனால் இரண்டு செக்ஸ் பெரோமோன்கள் வெளியிடப்படும். ஆகவே உங்கள் பாலுணர்ச்சியைத் தூண்டப்பட்டு பாலியல் வாழ்க்கை சிறக்க வேண்டுமானால், தினமும் சிறிது செலரியை உணவில் சேர்த்து வாருங்கள்.

நல்ல சோடியம் நிறைந்தது

செலரியில் சோடியம் நிறைந்துள்ளது. சோடியம் என்றதும் அன்றாடம் சேர்க்கும் உப்பில் இருக்கும் சோடியம் அல்ல. இதில் இருக்கும் சோடியம் முற்றிலும் ஆர்கானிக், இயற்கை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துபவையாகும். ஆகவே அன்றாட உணவில் சிறிது செலரியை சேர்ப்பது, உடல் ஆரோக்கியத்திற்கு முற்றிலும் நல்லது.

கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்

செலரியை ஒருவர் அன்றாடம் உட்கொண்டு வந்தால், அது உடலில் குறிப்பாக கல்லீரலில் தேங்கும் கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும். அதோடு கல்லீரலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை ஊக்குவித்து, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆகவே கல்லீரல் நோய் இருப்பவர்கள், அன்றாட உணவில் செலரியை சேர்த்து வந்தால், கல்லீரல் பிச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

சிறுநீரக பாதைத் தொற்றுகள்

செலரி யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் மற்றும் சிறுநீரின் உற்பத்தியை தூண்டும். அதோடு செரிமான பாதை மற்றும் இனப்பெருக்க உறுப்புக்களில் உள்ள பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்துப் போராடும். எப்படி கிரான்பெர்ரிப் பழங்கள் சிறுநீரக பாதை தொற்றுகளை எதிர்த்துப் போராடுமோ, அதேப் போல் செலரியும், சிறுநீரக பாதைத் தொற்றுக்களைப் போராட உதவும். மேலும் சிறுநீர்ப்பை கோளாறுகள், சிறுநீரக பிரச்சனைகள் போன்றவற்றையும் தடுக்க உதவும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…அரிசியை ஏன் ஊறவைத்து சாப்பிடவேண்டும்?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… உங்கள் எடையைக் குறைக்க அற்புதமான சில வழிகள்!!!

nathan

பச்சை வாழைப்பழம் தரும் பலவித நன்மைகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தக்காளியை ப்ரிட்ஜில் சேமித்து வைப்பவரா நீங்கள்?…

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! இந்த உணவுகளை தூக்கி குப்பையில் வீசுங்கள்!

nathan

அன்றாடம் இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் உங்கள் உடலில் அற்புதமான மாற்றம் நிகழும்..!!

nathan

கனிமச்சத்துக்களை கொண்டுள்ள பூசணி விதைகள் !!

nathan

கருப்பு அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்

nathan

அடிக்கடி நண்டு உணவுகள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan