25.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
21 61cc03
மருத்துவ குறிப்பு

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… வெந்நீரில் குளிப்பதால் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன?

பொதுவாக குளிர் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதற்கு பதிலாக பலரும் வெந்நீரில் குளிக்கிறார்கள். ஆனால், சிலரோ கோடைக்காலத்தில் கூட சோர்வை நீக்க வெந்நீரில் குளிப்பதும் உண்டு.

தொடர்ந்து வெந்நீரில் குளிப்பதால் சில பக்க விளைவுகள் ஏற்படும். பக்க விளைவுகள் மிகவும் சூடான நீரில் குளிப்பது ஆண்களின் பாலின ஆரோக்கியத்தை பாதித்து, அவர்களுக்கு குழந்தையின்மை பிரச்சனையை ஏற்படுத்தும் என்று பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வெந்நீரில் குளிப்பதால், விந்தணுக்களின் எண்ணிக்கையும், விந்தணுக்களின் தரமும் குறைவதால் பாலின ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். கூந்தலில் கெரட்டின் புரதம் உள்ளது. இது முடியை வலுவிழக்காமலும் உடையாமலும் பாதுகாக்கிறது.

ஆனால் வெந்நீரில் குளித்தால், முடி வலுவிழந்து உடையும். இதன் காரணமாக முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இது ஆண்களுக்கு வழுக்கையையும் உண்டாக்கும். தொடர்ந்து வெந்நிரீல் குளிப்பதால் தோல் வறட்சி மற்றும் தோலில் அரிப்பு போன்றவை ஏற்படலாம்.

ஏனெனில், வெந்நீர் அழுக்கு மற்றும் தூசியுடன் சருமத்தை பாதுகாக்கும் ஈரப்பதத்தையும் நீக்குகிறது. இதன் காரணமாக, தோல் வறண்டு போகத் தொடங்குகிறது.

மேலும், இதனால் அரிப்பும் ஏற்படலாம். மேலும், வெந்நீர் சருமத்தின் ஈரப்பதத்தை மட்டுமின்றி கண்களின் ஈரப்பதத்தையும் பாதிக்கிறது. இதனால் கண்களில் வறட்சி ஏற்பட்டு, கண்களில் அரிப்பு பிரச்சனை ஏற்படும்.

இது தவிர வெந்நீரில் குளித்தால் கண் சிவத்தல் பிரச்சனையும் வரலாம். வெந்நீரில் குளிப்பதால் சருமம் வறண்டு போவது மட்டுமின்றி, முகப்பரு பிரச்சனையும் அதிகரிக்கும்.

அதிகப்படியான வெந்நீர் முகப்பரு பிரச்சனைகளை அதிகரிக்கும். அப்படி வெந்நீரின் பாதிப்பை குறைக்க வேண்டும் என்றால், நீங்கள் மிதமான சூடு உள்ள அல்லது வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

Related posts

தொப்புள் கொடியைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள்!!!தெரிந்துகொள்வோமா?

nathan

மர்ம காய்ச்சல் -ஆயுர்வேத தீர்வு

nathan

டாப் 7 ஆன்டிஆக்ஸிடன்ட் மூலிகைகள்!

nathan

எலுமிச்சையும் பூண்டும் கொண்டு இதயத்தை காத்திடுங்கள்!!

nathan

பெண்களின் கருப்பையை பலமாக்கும் தண்ணீர் விட்டான்

nathan

மனநல பாதிப்பை போக்கும் மருதாணிப்பூ!

nathan

தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பால் தரும் பெண்கள் குளிர்பானங்கள் குடிக்கலாமா?

nathan

எண்ணெயும் கொலஸ்ட்ராலும்: வெளிச்சத்துக்கு வந்த மருத்துவ அரசியல்!

nathan

சிந்தனைகளை செதுக்குங்கள்… வெற்றி நிச்சயம்

nathan