நாம் எப்போதும் எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளக்கூடியவர்களில் நல்ல நண்பர்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். நம்மைச் சுற்றி நாம் மகிழும் வண்ணம் எதையாவது செய்து கொண்டு நம்மை முடிவில்லா உற்சாகமூட்டக்கூடிய இவர்களது செயல்கள் காலப்போக்கில் மேலும் அதிகரிப்பதாகவே இருக்கும். இப்போது நாம் நல்ல நட்பின் அடையாளங்களைப் பற்றி பார்க்கவிருக்கிறோம்.
இவற்றை நல்ல நண்பர்கள் பற்றிய உண்மையான விஷயங்களாகவும் எடுத்துக் கொள்ளலாம். எல்லாரும் நல்ல நண்பர்கள் என நாம் சொல்வதில்லை. நல்ல நண்பர்கள் என்ற அடையாளத்தைப் பெற வித்தியாசமாக வரையறுக்கத்தக்க குணாதிசயங்கள் அவசியம்.
இதை மனதில் கொண்டு அருமையான நண்பர்களின் குணங்களை இப்போது நாம் பார்க்கலாம். இந்த அம்சங்களை நல்ல நட்பில் மட்டுமே நீங்கள் காண முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நல்ல நட்பின் எட்டு அம்சங்கள் உங்களுக்காக இதோ…!
மன்னித்தல்
சில சமயங்களில் நீங்கள் அவர் மீது கோபம் கொண்டு கத்தியிருக்கலாம். நீங்கள் பயன்படுத்திய கடுஞ்சொற்கள் ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கலாம். ஆனால், அதை சற்றும் பொருட்படுத்தாமல் உங்களை உடனேயே மன்னிக்கும் குணத்தை ஒரு நல்ல நண்பனிடத்தில் மட்டுமே எதிர்பார்க்க முடியும்.
உங்களுக்குப் பிடித்த எதையும் செய்ய அவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை
நாம் பெரும்பாலும் பல சூழ்நிலைகளுக்கு மத்தியில் தான் நமது முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் நமக்கு மிகவும் பிடித்த செயலைச் செய்ய நல்ல நண்பன் எப்போதுமே துணையாக இருப்பார். குறிப்பாக உங்களுக்குப் பிடித்தமானதைச் செய்ய நீங்கள் விருப்பப்படுவீர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள்.
நீங்கள் பாதை தவறினால் அவர்கள் கலங்குவார்கள்
உங்களின் நல்ல நண்பன் நீங்கள் விருப்பப்பட்ட செயலில் பாதை தவறும் போதோ அல்லது உங்கள் கவனம் சிதறும் போதோ கலங்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் உங்களுக்கு ஒருபோதும் இல்லை என்று சொல்லமாட்டார்கள்
நீங்கள் பிரச்சனையிலோ அல்லது உதவி தேவைப்படும் சூழலிலோ இருந்தால், உங்கள் நல்ல நண்பன் உங்களுக்கு உதவ மாட்டேன் என்று சொல்லமாட்டார் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இறுதியில் பிரச்சனை சிறியதோ அல்லது பெரியதோ, அவர்கள் உங்களுடன் நிச்சயம் இருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
பணக் கஷ்டமா? நோ ப்ராப்ளம்
நல்ல நட்பின் இன்னொரு அருமையான அம்சம், ஒருமுறை அல்ல எத்தனை முறை நிதி நெருக்கடி ஏற்பட்டாலும் அதை சரிகட்ட நீங்கள் எதிர்பார்ப்பது உங்கள் நல்ல நண்பனை மட்டுமே.
உங்களின் திறமையை வெளிப்படுத்த உதவும் நல்ல நட்பு
நல்ல மனிதர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பார்கள். அதில் ஒரு நல்ல நண்பனும் அடக்கம். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்கள் உங்களின் நல்ல குணங்களையும், திறமையையும் வெளிகொணர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
உங்களை எடைபோட முயற்சிக்கமாட்டர்கள்
நல்ல நண்பர்கள் எப்போதும் உங்களை எடைபோட முயலமாட்டார்கள். உங்கள் வாழ்க்கையில் சில பேரிடம் மட்டுமே நீங்கள் இந்த அம்சத்தைக் காண முடியும். கண்டிப்பாக உங்கள் நண்பன் அதில் ஒருவராக இருப்பார்.
நீங்கள் சொல்வது அத்தனையும் காது கொடுத்துக் கேட்க தயாராக இருப்பார்கள்
நீங்கள் சொல்வது அத்தனையும் காது கொடுத்துக் கேட்க தயாராக இருப்பார்கள்
நீங்கள் சொல்வது எவ்வளவு கொடுமையான முற்றிலும் பயனற்ற விஷயமாக இருந்தாலும் சரி, உங்கள் நல்ல நண்பன் அதை பொறுமையாகக் கேட்பார்.
என்ன? நல்ல நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிஞ்சிகிட்டீங்களா? அப்புறமென்ன.. கூடா நட்பு கேடாய் முடியும் என்பதையும் மனதில் கொண்டு நல்ல நண்பர்களை இனம் காணுங்கள்.