26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
5 7thingsyoushouldthrowawayforbetterhealth
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்க உடம்பு நல்லா இருக்கனும்னா இதெல்லா கண்ண மூடிட்டு தூர தூக்கி எரிஞ்சிடுங்க!!!தெரிஞ்சிக்கங்க…

நம்மிடைய நல்ல பழக்கங்களுக்கு நிகராய் தீயப் பழக்கங்களும் நிரம்பிக் கிடக்கின்றன. அதிலும், பெரும்பாலானோர் அவர்கள் செய்துக் கொண்டிருக்கும் செயல்களினால் ஏற்படும் எதிர்வினை விளைவுகள் பற்றி தெரியாமலேயே செய்து வருகின்றனர்.

உதாரணமாக, ஃபிரிஜ்ஜில் நீண்ட நாள் வைத்த உணவுகளை பயன்படுத்துவது, பிளாஸ்டிக் உபகரணங்களில் உணவினை அடைத்து வைப்பது, பாத்திரம் தேய்க்கும் ஸ்பான்ஜினை வெகு நாட்கள் பயன்படுத்துவது என உங்களது அன்றாட வாழ்வியல் சார்ந்த பல பழக்கவழக்கங்கள் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

இனி, ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் உங்களிடம் இருந்து தூக்கி எரிய வேண்டியவைப் பற்றிப் பார்க்கலாம்…

பிளாஸ்டிக் உபகரணங்கள்

பைசெஃபெனால் – ஏ (Bisphenol A)

நீங்கள் பயன்படுத்தும் அனைத்து பிளாஸ்டிக் உபகரனங்களில்லும் பைசெஃபெனால் – ஏ எனும் நச்சுப் பொருளின் கலப்பு இருக்கிறது. இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கக்கூடிய நச்சு ஆகும். நாள்பட வருட கணக்கில் நீங்கள் உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் உபகரணங்களில் அடைத்து சாப்பிடுவதனால் ஆண்மைக் குறைவில் இருந்து புற்றுநோய் வரையிலான பாதிப்புகள் ஏற்படும் வாய்புகள் அதிகமாக இருகின்றது.

ஏர் ஃபிரஷ்னர்

உங்கள் வீட்டிலும், அலுவலகத்திலும் உபயோகப்படுத்தும் ஏர் ஃபிரஷ்னர் சுவாசக் கோளாறுகளில் இருந்து, இனப்பெருக்கப் பிரச்னை வரை ஏற்பட காரணமாய் இருக்கின்றது. அதிலும், விளம்பரங்களில் கூறுவதை போன்ற, நீண்ட நேரம் நல்ல நறுமணம் தரும் வல்லமையுடைய ஏர் ஃபிரஷ்னர்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

ஆன்டி-பாக்டீரியல் சோப்பு
நீங்கள் நினைப்பதை போல ஆன்டி-பாக்டீரியல் சோப்பு கிருமிகளைக் கொள்ளும் திறன் கொண்டவை அல்ல என்று உலக உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை கூறியுள்ளது. அவை சாதரணமான விளைவுகளை ஏற்படுத்தும் தன்மையை மட்டுமே கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. மற்றும் இவற்றில் பயன்படுத்தப்படும் இராசயனங்கள் உண்மையில் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

டயட் சோடா

டயட் சோடா குடிக்கலாம், இது உடல் நலத்திற்கு நல்லது என்று விளம்பரம் செய்யப்படுகின்றன. ஆனால், அதில் கலப்பு செய்யப்பட்டிருக்கும் செயற்கை இனிப்பூட்டிகள் உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை பாதிக்கிறது மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட காரணமாய் இருக்கிறது.

டூத் பிரஷ்

குறைத்து இரண்டு மாதத்திற்கு ஒருமுறை உங்களது டூத் பிரஷை மாற்றி விடுங்கள். அதில் இருக்கும் பிரிஷில்ஸ் பாக்டீரியா பாதிக்கப்புகளை உண்டாக்கும்.

ஃபிரிஜ்ஜில் நீண்ட நாள் வைத்த உணவுகள்
நீங்கள் நினைக்கலாம் ஃபிரிஜ்ஜில் வைத்தால் உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்று. ஆனால், நீங்கள் ஃபிரிஜ்ஜில் இருந்து வெளியில் எடுத்த சில நிமிடங்களில் அது கெட்டுப் போய் விடும். இது பலருக்கு தெரிவதில்லை. நீண்ட நாட்கள் ஃபிரிஜ்ஜில் வைத்த உணவுகளை சாப்பிடுவதனால் வயிற்று உபாதைகளும், செரிமானப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. முக்கியமாக ஃபுட் பாய்சன் ஏற்படும் வைப்புகள் அதிகமாக இருக்கின்றது.

பழைய அழகு சாதனப் பொருட்கள்

பெரும்பாலும் உங்களது பழைய அழகு சாதனப் பொருட்கள் எதுவாக இருந்தாலும், எத்தனை விலை உயர்ததாக இருந்தாலும், தூக்கி எறிந்துவிடுங்கள். இதனால், சருமப் பிரச்சனைகள் வெகுவாக ஏற்படலாம்.

மசாலா பொருள்கள்

நாள்பட்ட பழைய மசாலாப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம். அதில், சத்துக்கள் அழிந்திருக்கும் என்பது மட்டுமில்லாது நுண்கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இது உங்கள் உடல்நலத்தை பாதிக்க கூடியது.

ஏ.சி ஃபில்டர்ஸ்

உங்கள் வீட்டு ஏ.சியில் இருக்கும் ஃபில்டர்களை இரு வாரங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்வது அவசியம், மற்றும் ச்செரான இடைவேளையில் அதை புதிதாக மாற்ற வேண்டும். இல்லையெனில் ஏ.சி. வழியாக நிறைய நச்சுக் கிருமிகள் பரவும் அபாயங்கள் இருக்கின்றன.

பழைய உள்ளாடை

ஆண்கள், மற்றும் பெண்கள் இருபாலரும் தங்களது உள்ளாடைகளில் கவனம் செலுத்துதல் அவசியம். ஏனெனில் இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் உங்கள் பிறப்புறுப்பை பாதிக்கக் கூடியவை ஆகும். குறைந்தது 4-6 மாதங்களுக்கு ஒரு முறை உள்ளாடைகளை புதிதாக வாங்குவது அவசியம்.

பழைய ஸ்பான்ஜ்
பாத்திரம் கழுவ நீங்கள் பயன்படுத்தும் ஸ்பான்ஜினை அவ்வப்போது புதிதாக மாற்றிட வேண்டும். சிலர் அது மக்கி சாம்பல் ஆகும் வரை பயன்படுத்துவர், இதனால் கிருமிகளின் தாக்கம் தான் அதிகரிக்கும்.

Related posts

உங்க ராசிப்படி உங்களுக்கு இழைக்கப்படுற துரோகத்தை நீங்க எப்படி சமாளிப்பீங்க தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

குளிக்கறப்ப காதுல நிறைய தண்ணி புகுந்திடுச்சா? சூப்பர் டிப்ஸ்….

nathan

கட்டாயம் இதை படியுங்கள் தைராய்டு குறைபாடுகளை போக்குவதில் உதவும் ஆசனங்கள்!!

nathan

அழுவதனால் பல நன்மைகள் இருக்கின்றன தெரியுமா?

sangika

குழந்தை பிறந்ததிலிருந்து நிம்மதியா தூங்க முடியலையா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

மருதாணியின் மகத்தான பலன்கள்!…

nathan

குங்குமப் பூவிற்கும் பெண்களுக்கும் அப்படி என்னதான் ஒற்றுமை..!

nathan

குழந்தைகளின் உணவு முறையால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு

nathan

தாய்ப்பாலை சேமித்து வைத்து, தேவையான நேரத்தில் குழந்தைக்குப் புகட்டலாம். தாய்ப்பாலை எப்படி சேமிப்பது?

nathan