25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
Curd is good for the stomach SECVPF
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…தயிரை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

உலக அளவில் மிகவும் பிரபலமான ஒரு உணவுப் பொருள் தான் தயிர். இந்த தயிரை பலவாறு மக்கள் சாப்பிடுவார்கள். அதில் பொதுவானது தயிர் சாதம். குறிப்பாக தென்னிந்தியா மக்கள் மதிய வேளையில் உணவின் போது இறுதியாக தயிர் சாதத்தை சாப்பிடுவார்கள்.

இத்தகைய தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளது. எனவே இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். பால் கொண்டு தயிர் தயாரிக்கப்படுவதால், இதிலும் பாலுக்கு இணையான சத்துக்கள் நிறைந்துள்ளது.

இங்கு அந்த தயிரை உணவில் சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, இன்றிருந்து தயிரை உணவில் சேர்த்து வாருங்கள். குறிப்பாக கோடைக்காலத்தில் தயிரை மறக்காமல் சாப்பிடுங்கள்.

செரிமானத்தை அதிகரிக்கும்
தயிரில் உள்ள அதிகப்படியான சத்துக்களால், செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமின்றி, இது மற்ற உணவுகளின் மூலம் கிடைக்கும் சத்துக்களை உறிஞ்ச உதவி புரியும். மேலும் காரமான உணவுகளினால் ஏற்படும் வயிற்று எரிச்சலை தணிக்கவும் செய்யும்.

இதயத்திற்கு நல்லது

இன்றைய காலத்தில் இளம் வயதிலேயே இதய நோயால் அதிக மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் தயிரை உணவில் சேர்த்து வந்தால், உயர் இரத்த அழுத்தம் குறைத்து, கொலஸ்ட்ராலின் அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்து, இதய நோயின் பாதிப்பைக் குறைக்கலாம்.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை

லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களால் பால் பொருட்களை உட்கொள்ள முடியாது. அப்படியே உட்கொண்டாலும், சருமத்தில் அரிப்பு, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும். ஆகவே இத்தகையவர்களுக்கு கால்சியம் குறைபாடு அதிகம் ஏற்படும். இத்தகைய குறைபாட்டை தவிர்க்க, தயிரை எடுத்துக் கொள்ளலாம். இதனால் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாவினால், நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைந்து, இதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட் நோய்த்தொற்றில் இருந்து விடுபடலாம்.

பற்கள் மற்றும் எலும்புகளுக்கு நல்லது

எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் மிகவும் இன்றியமையாதது. இத்தகைய பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் தயிரில் இருப்பதால், இதனை எடுத்து வந்தால், எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக நாள்பட்ட மூட்டு வலி ஏற்படுவது குறையும்.

எடை குறைவு

எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டினால், ஒருசில ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படுவார்கள். இதனால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். இப்படி ஏற்படுவதால் டென்சன், உடல் பருமன், கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படும். ஆகவே தயிரை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், இந்த பிரச்சனைகள் வருவதைத் தயிரில் உள்ள கால்சியம் தடுக்கும்.

மன அழுத்தம்
மன அழுத்தத்தில் இருக்கும் போது, தயிர் சாதம் சாப்பிட்டால் மனம் ரிலாக்ஸ் ஆகி, உணர்ச்சிகள் மற்றும் வலி கட்டுப்படுத்தப்பட்டு, நல்ல ரிலாக்ஸ் கிடைக்கும்.

பொடுகுத் தொல்லை
தயிரில் லாக்டிக் ஆசிட் என்னும் பொடுகைப் போக்கும் பொருள் உள்ளது. ஆகவே இதனை உட்கொள்வதுடன், ஸ்கால்ப்பில் படும்படி தேய்த்து 1 மணிநேரம் ஊற வைத்து அலசினால், பொடுகுத் தொல்லை நீங்கும்.

Related posts

ஆண்களுக்கும் – பெண்களுக்கும் அருமருந்து.!!வாழைப்பூவில் உள்ள மகத்துவங்கள்.!

nathan

உங்களுக்கு தெரியுமா ஹார்மோன் இம்பேலன்ஸ் எனப்படுகிற கோளாறுகளை ஓட ஓட விரட்ட வைப்பது, மஞ்சள்

nathan

முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?

nathan

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வைரஸ் தொற்றைத் தடுக்கலாம்!

nathan

முருங்கைக்கீரை சூப்

nathan

சூப்பரான ரோஸ் மில்க் செய்வது எப்படி..!

nathan

உலர் ஆப்ரிகாட் பழங்களில் உள்ள சத்துக்கள்

nathan

சூப்பரான கேரட் சப்பாத்தி!

nathan

காலதாமதமாக உணவருந்துதல், முறையற்ற உணவு முறை அல்சர் ஏற்படுவதற்கான முக்கிய காரணம்

nathan