28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
1601 735x400 1
ஆரோக்கிய உணவு

தினமும் நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் அறிந்திருப்போம்.

ஆனால் அந்த நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி சிலருக்கு தெரியாது. சரி வாங்க தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..

 

நன்மைகள்:-

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து இரத்த சோகை நீங்கும். தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம் இதய தசைகள் வலிமையடைந்து இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

கண் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும். பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் சரிசெய்யலாம்.

சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அதுமட்டுமின்றி தொண்டையில் புண்ணும் வரும். அத்தகையவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கிய சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு தொண்டைப் புண்ணும் குணமாகும்.

சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகம் இருக்கும். அத்தகைய பெண்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம்.

Related posts

உடல் சோர்வு அதிகம் உள்ளதா? உணவை தவறாமல் சாப்பிடுங்க!

nathan

உடலில் சதை போட்டு எடையை விரைவாக அதிகரிக்க…. அற்புதமான எளிய தீர்வு

nathan

தெரிஞ்சிக்கங்க… எந்த உணவுகளை வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டும்

nathan

கருத்தரிப்பதில் பிரச்சனைக் கொண்டவரா?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

விஷப்பெட்டியாக மாறிவிட்ட ஃப்ரிட்ஜ்!

nathan

இதை மட்டும் இரவில் சாப்பிடுங்க…! : உடல் எடை அதுவாக குறையும்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த அற்புத காயை வைத்தே நீரிழிவு நோயை விரட்டியடிக்கலாம்!

nathan

சுவையான ரிப்பன் பக்கோடா

nathan

ரத்தத்தில் கொழுப்பு சேராமல் தடுக்கும் காய்ந்த திராட்சை

nathan