28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
cabbage sambar
ஆரோக்கிய உணவு

சுவையான முட்டைக்கோஸ் சாம்பார்

இதுவரை முட்டைக்கோஸ் கொண்டு பொரியல் செய்து தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு சாம்பார் செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் என்பது தெரியுமா? ஆம், முட்டைக்கோஸ் சாம்பார் வித்தியாசமான சுவையுடன் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

இங்கு முட்டைக்கோஸ் சாம்பார் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.

Cabbage Sambar Recipe
தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 100 கிராம்
நறுக்கிய முட்டைக்கோஸ் – 2 கப்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 1
பச்சை மிளகாய் – 1
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
சாம்பார் பொடி – 1-2 டீஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பு சேர்த்து 2 கப் தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து குக்கரை மூடி, 2-3 விசில் வந்ததும் இறக்க வேண்டும்.

பின் புளியை 1/2 கப் நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பிறகு அதில் முட்டைக்கோஸ் சேர்த்து, நன்கு வதக்கி, பின் வேக வைத்துள்ள பருப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து கிளறி, அடுத்து புளித் தண்ணீரை சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனைப் போக கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், முட்டைக்கோஸ் சாம்பார் ரெடி!!!

Related posts

நீண்ட வாழ்வு தரும் உணவுப் பழக்கம்

nathan

இளமையை நீண்ட நாட்கள் தக்க வைக்க அடிக்கடி இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க..சூப்பர் டிப்ஸ்…

nathan

கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!அறிந்து கொள்ளுங்கள்.

nathan

உங்களுக்கு தெரியுமா அதிகமா பன்னீர் சாப்பிட்டா இந்த பிரச்சினை எல்லாம் வருமாம்!

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களின் மாதவிடாய் வலியை குணப்படுத்தும் வாழைப்பூ..!!

nathan

உணவுக்கு பின் வெற்றிலை மெல்லுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?

nathan

உடல் எடை குறைப்பிற்கு அடிக்கடி உணவில் சுரைக்காய்.பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

கான்சர் நோயையும் குணப்படுத்த கூடிய‌ சிறந்த மருத்துவ‌ பழம்!மிஸ் பண்ணீடாதீங்க?

nathan

ஆண்கள் விளாம்பழம் சாப்பிடலாமா?

nathan