ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…உங்கள் வாழ்க்கையில் இருந்து சிலரை வெளியேற்றுவதற்கான 10 முக்கியமான காரணங்கள்!!!

ஏற்கனவே உங்களுக்கு தெரியாமல் இருந்தால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்; உறவை பராமரிப்பது எந்தளவிற்கு முக்கியமோ அதே போல் சிலரை உங்கள் வாழ்க்கையை விட்டு வெளியேற்றுவதும் முக்கியமானதாகும். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், முக்கியமாக இல்லாத சிலர் உங்கள் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் பயன்பட மாட்டார் என்பதை நீங்கள் உணர்வீர்கள். அப்படிப்பட்ட சிலரை உங்கள் வாழ்க்கையை விட்டு வெளியேற்ற பல காரணங்கள் உள்ளது. அப்படிப்பட்ட நபர்களுடன் உங்கள் வாழ்வில் நடந்த பல விதமான மறக்க முடியாத நிகழ்வுகளை பகிர்ந்திருந்தாலும் கூட, ஒரு கட்டத்தில் அவர்களை உங்கள் வாழ்க்கையை விட்டு வெளியேற்றுவது மிக முக்கியம் தான்.

அவர்கள் உங்களுக்கு எத்தனை நாட்கள் பழக்கம் என்பதெல்லாம் உங்கள் உறவை வாழ வைக்காது. உங்களுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காத ஒரு சுமையை எத்தனை நாட்களுக்கு தான் தூக்கி சுமப்பீர்கள். அதனால் அந்த உறவை முடித்துக் கொள்வதே அதற்குண்டான ஒரே வழியாகும்.

சிலரை உங்கள் வாழ்க்கையை விட்டு வெளியேற்றுவதற்கான காரணத்தைப் பற்றி தான் பார்க்க போகிறோமே தவிர, நம் கவனம் வெளியற்றுவதன் மீதல்ல. உங்கள் வாழ்க்கையை விட்டு சிலரை வெளியற்றுவதற்கான காரணங்களின் மீது தான் நம் முக்கியத்துவம் அமைந்துள்ளது. நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் கண்டிப்பாக இந்த காரணங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

சரி, அந்த காரணங்களைப் பற்றி இப்போது பார்க்கலாமா? இதோ சிலரை உங்கள் வாழ்க்கையை விட்டு வெளியேற்றுவதற்கான 10 காரணங்கள். இது இரண்டு பாலினருக்கும் பொருந்தும்; வெளியேற்றப்படுவது ஆணாகவும் இருக்கலாம் அல்லது பெண்ணாகவும் இருக்கலாம்.

இனியும் எல்லாம் பழசை போல் இருப்பதில்லை

இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எல்லாம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தெளிவாகச் சொல்ல முடியாத சில முட்டுக்கட்டைகள் உங்கள் உறவில் ஏற்படலாம். இப்படிப்பட்ட நேரத்தில் அவர்களை விட்டு விலகுவதே நல்லதாகும்.

விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பற்றாக்குறை

ஒரு கட்டத்தில் விசுவாசம் மற்றும் நம்பிக்கை பற்றாக்குறைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இது வெறுமனே உறவுகளில் மட்டும் என்றில்லை. ஒரு ஆணை அல்லது பெண்ணை விட்டு விலகுவதற்கான காரணங்களில் இதையும் கூட முக்கிய காரணமாக கூறலாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

வருங்காலத்தைப் பற்றிய தெளிவு இல்லாமை

முன்னதாக கூறப்பட்ட விசுவாச பற்றாக்குறைக்கும் இந்த காரணத்திற்கும் சம்பந்தம் உள்ளது. சில நேரம், சிலரிடம் இருந்து நாம் சிலவற்றை எதிர்ப்பார்க்கையில், இந்த உறவு எதை நோக்கி செல்கிறது என்பது நமக்கே தெளிவாக இருப்பதில்லை.

உங்களை பாதிக்கிறதா?

உங்கள் நண்பர் அல்லது துணையுடனான உங்கள் உறவினால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை சரி பாருங்கள். உங்கள் அறிவுக்கே எட்டாமல், அந்த உறவு உங்களுக்கு பாதிப்பை உண்டாக்கலாம். எப்போதுமே மதிப்பீடுகள் செய்து கொள்ளுங்கள். உங்கள் உறவு உங்களை பாதித்து வந்தால், அவர்களை விட்டு வெளியேறுவதற்கு இதுவும் கூட ஒரு காரணமாகும்.

அவளோ அல்லது அவனோ உங்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்றால்

உங்கள் அனைத்து குறிக்கோள்களின் மீதும், வாழ்க்கையில் நீங்கள் சாதிக்க நினைக்கும் பிற விஷயங்களின் மீதும் நம்பிக்கை வைக்காதவர்கள் உங்களுக்கு முக்கியமானவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எப்போதுமே நீங்கள் தான் தியாகம் செய்ய வேண்டியுள்ளதா?

எந்த ஒரு உறவிலும், அது உங்கள் காதலியாகட்டும் அல்லது காதலனாகட்டும் அல்லது சொந்தங்களாக இருக்கட்டும் அல்லது நண்பர்களாக இருக்கட்டும்; இரண்டு பேரும் பொறுப்புகளையும், தியாகங்களையும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் மட்டுமே அதனை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அவர்களின் உறவை தொடர்வதில் எந்த ஒரு நன்மையையும் கிடையாது.

நீங்கள் நினைப்பதை உங்காளால் தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லையா?

அப்படியானால் இந்த உறவு நீடிப்பதில் அர்த்தமில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும், என்ன உணர்கிறீர்கள் என்பதையும், உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் எந்த ஒரு பயனும் இருக்க போவதில்லை.

உங்கள் கருத்துக்கள் மதிக்கப்படவில்லையா?

இதோ, சிலரை உங்கள் வாழ்க்கையில் இருந்து வெளியேற்றுவதற்கான மற்றொரு காரணம். உங்கள் உறவில் உங்கள் துணையிடம் மட்டும் தான் இந்த காரணம் பொருந்தும் என்றல்ல.

அந்த நபர் மாற விரும்பவில்லையா?

நீங்கள் மாற விரும்பினாலும், அந்த மற்றொரு நபர் மாற விரும்பவில்லையா? அவர் அதே போக்கில், தான் விரும்பியதை போல் தான் நடந்து கொள்கிறாரா? அப்படியனால் இந்நேரத்திற்கு அவரை நீங்கள் வெளியேற்றியிருக்க வேண்டாமா?

உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை தன்மையை புகுத்துகிறாரா?

உங்கள் துணை அல்லது நண்பர்கள் அல்லது உறவினர்களுடனான உறவு உங்களுக்கு எவ்வித பயனை அளிக்கிறது என்பது கவனியுங்கள். ஒரு வேளை, அதில் அளவுக்கு அதிகமான எதிர்மறை தன்மை தெரிந்தால், அந்த உறவை விட்டு நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button