சிவப்பு அரிசி உணவுகள் பொதுவாகவே ஆரோக்கியம் நிறைந்த உணவுகளாகும்.
எந்த வயதினரும் அச்சமின்றி எடுத்து கொள்ளலாம்.
இன்று நாம் அரைச்ச அரிசி மாவில் நீரிழிவு நோயை விரட்டியடிக்கும் ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிவப்பரிசி – 250 கிராம்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – ஒன்று
சீரகம் – ஒரு டீஸ்பூன்
கேரட் – ஒன்று
தேங்காய்த்துருவல் – 5 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை துருவிக்கொள்ளவும்.
சிவப்பரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் போட்டு அரைத்து சிவப்பரிசி மாவு தயார் செய்துகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு அதனுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றாகப் கலந்து அதில் வெந்நீரைச் சிறிது சிறிதாக விட்டு, சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை அரை மணி நேரம் ஈர துணியால் மூடி வைக்கவும்.
பின்னர் சிறு சிறு உருண்டையாக்கி வட்டமாகத் தட்டி வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த ரொட்டியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும். இப்போது சத்தான சுவையான சிவப்பரிசி ரொட்டி ரெடி.