23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
21 60814b
சமையல் குறிப்புகள்

ரேஷன் அரிசியில் மொறு மொறுப்பான தோசை

கடைகளில் சுடும் தோசையைவிட வீட்டில் சுடும் தோசை மொறு மொறுப்பாக வராது. அதற்கு காரணம் பெரும்பாலும் நம் வீடுகளில் வாங்கும் ரேஷன் பச்சரிசியை நாம் பயன்படுத்துவது கிடையாது. இப்பதிவில் பச்சரிசியை பயன்படுத்தி எப்படி ஹோட்டல் ஸ்டைலில் மொறு மொறுப்பான தோசை மாவை தயார் செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

ரேஷன் பச்சரிசி – 2 டம்ளர், உளுந்து – 1/4 டம்ளர், கடலைப் பருப்பு – 1/4 டம்ளர், அவல் – 1/2 டம்ளர், வெந்தயம் – 1/2 ஸ்பூன்.

செய்முறை விளக்கம்

ஒரு பாத்திரத்தில் ரேசன் பச்சரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, வெந்தயம், இந்த 4 பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். ரேசன் பச்சரிசி சில சமயங்களில் சுத்தமாக நமக்கு கிடைக்காது. அதை முன்பே நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த நான்கு பொருட்களையும் கைகளால் அலசி 4 முறை கழுவிய பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி 5 மணி நேரம் ஊறவைத்து விடுங்கள். அடுத்ததாக மாவு அரைப்பதற்கு 1/2 மணி நேரம் முன்பு அவலை தண்ணீரில் போட்டு ஊற வைத்தால் போதும்.

இப்போது ஊறி இருக்கும் இந்த எல்லா பொருட்களையும் கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜாரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பின்னர், ரொம்பவும் மொழுமொழுவென மாவை அரைக்கக் கூடாது. ரொம்பவும் கொரகொரப்பாகவும் அரைக்க கூடாது. சிறிய ரவை பதத்தில் லேசான நறநறபுடன் அரைத்துக் கொண்டால் போதும். அடுத்து அரைத்த மாவை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளுங்கள்.

இந்த மாவில் உப்பு போட்டு உங்க கையை கொண்டு நன்றாக கரைத்து மூடி போட்டு வைத்து விடவேண்டும். குறைந்தது 6 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரம் வரை எப்போதும் போல இந்த மாவு புளித்து வரட்டும்.

மறுநாள் காலை மாவை நன்றாக கரண்டியை வைத்து கலக்கி விட்டு, மாவு கட்டியாக இருக்கும் பட்சத்தில் தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் மாவு ரெடி… இப்போது தோசை கல்லை நன்கு சுத்தம் செய்து மிதமான சூட்டில் மாவை ஊற்றி மெதுவாக வார்த்து அருமையாக தோசை பொன்னிறமாக வரும்.. இந்த தோசைக்கு எல்லா சட்னியும் சுவையை அள்ளித்தரும்.

Related posts

மாலை வேளையில் முட்டை கொத்து பாஸ்தா

nathan

பீர்க்கங்காய் சாம்பார்

nathan

அவலை இவ்வாறும் செய்து சாப்பிடலாம்…..

sangika

சூடான உருளைக்கிழங்கு அவல் உப்புமா

nathan

சூப்பரான பருப்பு ரசம்

nathan

மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பது நல்லதா? கெட்டதா? என்று தெரியுமா?

nathan

சுவையான பெங்களூரு ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி

nathan

பன்னீர் சீஸ் டோஸ்ட்

nathan

எந்தெந்த பொருள்களை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது தெரியுமா…?தெரிந்துகொள்வோமா?

nathan