29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
weight loss 15 1513321826
ஆரோக்கியம் குறிப்புகள்

உடல் எடையினை குறைப்பதற்கு சிரமப்படுபவரா நீங்கள்?உங்களுக்குதான் இந்த விஷயம்

இன்றைய தலைமுறையினர் தங்களது உடல் எடையைக் குறிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தற்போதைய உடலுழைப்பு இல்லாத மற்றும் வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களாலும், ஏராளமான இளைஞர்கள் உடல் பருமன் பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள்.

உடல் பருமன் பிரச்சனையை ஒருவர் சந்திக்க ஆரம்பித்துவிட்டால், அதைத் தொடர்ந்து இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் தானாக வந்துவிடும்.

உடல் எடையை சரியான அளவில் பராமரிக்கலாம். உடல் எடையைக் (Weight Loss) குறைக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அதில் முதன்மையான ஒன்று கலோரிகளை எரிக்கும் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டியது. எனவே நாம் நமது உடல் எடையைக் குறைக்கத் தூண்டும் உணவுகளின் விவரத்தை இங்கே காண்போம்.

பசலைக்கீரை: எடையைக் குறைக்க நினைப்போர் அடிக்கடி தங்களது உணவில் பசலைக்கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த கீரையை உட்கொண்டால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடலின் வலிமையும் மேம்படும்.

வாழைப்பழம்: வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. இந்த சுவையான வாழைப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, ஆய்வின் படி, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை உட்கொள்வதால் எடை அதிகரிக்கும் அபாயத்தை 30%குறைக்கலாம். வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவது செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

இளநீர்: நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது, ​​நீரேற்றத்துடன் இருப்பது முக்கியம், மேலும் இளநீர் குடிப்பது உங்கள் திரவ உட்கொள்ளலை அதிகரிக்க மற்றும் ஊட்டச்சத்து ஊக்கத்தை பெற ஒரு சிறந்த வழியாகும். இந்த இயற்கை பானத்தில் மெக்னீசியம், கால்சியம், உப்பு, மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன.

சர்க்கரைவள்ளி கிழங்கு: சர்க்கரைவள்ளி கிழங்கில் பைபர் அதிகம் இருப்பதால் வயிறு நிரம்புவது போல் தோன்றும். நார்ச்சத்து, விரைவில் செரிமானம் ஆகாமல் தடுத்துவிடும். அதனால் உடலில் கொழுப்பு சத்தை சேர்க்க தூண்டும்.இன்சுலின் சுரப்பது தடுக்கப்படுகிறது. இதனால் எடை அதிகரிக்காது.

புரோக்கோலி: புரோக்கோலியில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் கால்சியம் உள்ளது. இதில் உள்ள சல்போரோஃபேன் என்ற தாவர சத்து, நமது உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை சுரக்க வைக்கிறது. இந்த ஹார்மோன், உடலில் தங்கியுள்ள கொழுப்புகளை கரைப்பதோடு மட்டுமல்லாது, கொழுப்பை கரைக்கும் நிகழ்வை துரிப்படுத்துகிறது. புரோக்கோலியில் அதிகளவில் உள்ள வைட்டமின் சி, நமது உடலின் மன அழுத்தத்தை குறைத்து, உடல் எடை குறைப்பிற்கு வழிவகுக்கிறது.

கேரட்: கேரட், அதிகளவு நார்ச்சத்து மற்றும் மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள சூப்பர் உணவு ஆகும். கேரட், நமது உடலில் பித்த நீர் சுரப்பை துரிதப்படுத்தி, உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.

​பச்சை பட்டாணி: பச்சை பட்டாணியில் எளிதில் கரையவல்ல நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. குறைந்த கொழுப்பு மற்றும் புரதம், உடலில் தங்கியுள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. பச்சை பட்டாணியில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம், இதய பாதிப்புகளில் இருந்து நம்மை காக்கின்றன. இது இனிப்புச்சுவை மிக்கதாக இருந்தாலும், உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Related posts

உங்களுக்கு தெரியுமா பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சனைகள் வரும்…

nathan

கொதிக்க வைத்த தண்ணீரை, மீண்டும் கொதிக்க வைத்து குடிப்பதன் விளைவுகள்

sangika

உடல் வெப்பம் அதிகரிக்கிறதா? சிறுநீரைப் பார்த்துக் கண்டுபிடியுங்கள்

nathan

ஆச்சரியப்படுத்தும் தகவல்கள்! காதலின் ஈர்ப்பினால் இப்படியும் நடக்குமா?

nathan

உங்களுக்கு தெரியுமா நமது ஆரோக்கியம் நம் நாக்கில்… உங்கள் நாக்கு உங்களின் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்லும்..!!

nathan

பிராணாயாமம் பயிற்சிக்கு கடைபிடிக்க வேண்டியவை

nathan

தெரிஞ்சிக்கங்க…மனமானது சோர்ந்து போயிருக்கும் போது செய்ய வேண்டிய விஷயங்கள்!!!

nathan

காலையில் கண் விழித்ததும் உள்ளங்கையைப் பார்த்தால் நல்லது நடக்கும்!

nathan

ஆண்களின் பொறுமையை இழக்கச் செய்யும் பெண்களின் செயல்கள்!!! இனியாவது திருந்துங்கள்….

nathan