29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
chicken
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா பிராய்லர் கோழி சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள்!!!

சிக்கன் ஆரோக்கியமான ஒரு உணவுப் பொருள். ஆகவே தற்போது சிக்கன் சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் பிராய்லர் சிக்கன் சாப்பிடுபவர்கள் தான் அதிகம். ஏனெனில் நகரப் பகுதிகளில் நாட்டுக்கோழி கிடைப்பது அரிதாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும் வாங்க முடியாத அளவில் கண்டபடி விலையை சொல்கிறார்கள். ஆகவே மக்கள் நாட்டுக்கோழியை தவிர்த்து, பிராய்லர் கோழியை வாங்கி சாப்பிடுகின்றனர்.

ஆனால் பிராய்லர் கோழி மிகவும் ஆரோக்கியமற்றது. அது தெரிந்தும் பலரும் தினமும் ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லிக் கொண்டு சிக்கன் வாங்கி சாப்பிடுகிறார்கள். அப்படி தினமும் பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால், அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக பிராய்லர் சிக்கனில் உள்ள கிருமிகள் மற்றும் வித்தியாசமான பாக்டீரியாக்கள், ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதிக்கிறது.

நியூயார்க்கை சேர்ந்த உடல்நல நிபுணர்கள், தற்போது பிராய்லர் கோழியில் கிருமிகள் அதிகம் இருப்பதால், அதனை சாப்பிடுவதை தவிர்க்குமாறு சொல்கின்றனர். இங்கு பிராய்லர் கோழியை உட்கொள்வதால் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தீவிரமான வயிற்றுப்போக்கு

சால்மோனெல்லா என்னும் பாக்டீரியா பிராய்லர் சிக்கனில் அதிகம் உள்ளது. இதனால் புட் பாய்சன் ஏற்படும் அபாயம் உள்ளது. பிராய்லர் சிக்கனில் உள்ள இந்த பாக்டீரியாவானது வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும்.

சிறுநீரக பாதை நோய்த்தொற்று

பிராய்லர் கோழியில் ஈகோலை என்னும் பாக்டீயாவும் உள்ளது. இவையும் ஒருவகையான புட் பாய்சனை ஏற்படுத்தக்கூடியவை. அதுமட்டுமின்றி, இவை சிறுநீரக பாதையில் கடுமையான நோய்த்தொற்றுக்களையும் ஏற்படுத்தும். ஆகவே இதனை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

மோசமான நோய்கள்

பிராய்லர் கோழியின் எடையை அதிகரிக்க, அதில் ஆர்சனிக் என்னும் மெட்டல் சேர்க்கப்படுகிறது. இந்த மெட்டல் உடலினுள் சென்றால், அது புற்றுநோய் மற்றும் இதர தீவிரமான நோய்களை ஏற்படுத்தும்.

மெட்டபாலிசத்தில் மாற்றம்

பிராய்லர் சிக்கனில் உள்ள அதிகப்படியான ஆன்டி-பயாடிக்ஸ், ஹார்மோன்கள் வளர்ச்சியை அதிகமாக்குகிறது. மேலும் இந்த கெமிக்கல், உடலின் மெட்டபாலிசத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, இதனால் பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பறவைக் காய்ச்சல்

முக்கியமாக உயிரைப் பறிக்கும் பறவைக் காய்ச்சல் கூட பிராய்லர் கோழியின் மூலம் தான் பரவும். ஆகவே பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

Related posts

உணவருந்தியவுடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது தானா?…

nathan

அலட்ச்சியம் வேண்டாம்… கர்ப்பிணி நூடுல்ஸ் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

தண்ணீர் பாட்டில் வாங்கும் போது நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

nathan

சுவையான சேமியா உப்புமா

nathan

உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும் அற்புத ஜூஸ்!

nathan

அழகையும் ஆரோக்கியத்தையும் தக்கவைத்துக்கொள்ள உண்ணும் உணவுகளும் முக்கியம்!

sangika

சூப்பரான புடலங்காய் கூட்டு

nathan

பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது தெரியுமா?அவசியம் படிக்க..

nathan