25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
black tea benifits
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…பிளாக் டீ குடிப்பதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

பொதுவாக தேநீரில் “கிரீன் டீ, பிளாக் டீ” போன்ற பல வகைகள் இருக்கின்றன. அதில் “பிளாக் டீ” தான் மிகவும் பிரபல்யம் வாய்ந்தது. பிளாக் டீ என்பது கருப்பு தேயிலையை இரசாயன கலவையில் ஆக்சிஜனுடன் இணைக்கப்படும்போது தயாரிக்கப்படுவது.

பிளாக் டீயில் 10% பாலிபீனால்கள் உள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு வழங்குகின்றது.

குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இது ஒரு சிறந்த பானமாக விளங்குகின்றது.

 

அதுமட்டுமின்றி இது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றது.

 

அந்தவகையில் தினமும் பிளாக் டீ குடிப்பதனால் வேறு என்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

 

பிளாக் டீ குடலில் உள்ள நுண்ணுயிரியின் உதவியுடன், நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் எடை இழப்பிற்கும் பங்களிக்கும்.
பிளாக் டீயில் கலோரிகள் மிகவும் குறைவு. ஒரு கோப்பை பிளாக் டீயில் 2 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளன. மேலும் உள்ளுறுப்புகளில் தேங்கும் கொழுப்புகளைத் தடுக்க உதவுகிறது.

உங்கள் எடை இழப்புக்கா டயட் உணவில் பிளாக் டீயை சேர்த்துக் கொள்ள விரும்பினால் சர்க்கரை அல்லது பிற பொருட்களை சேர்க்க கூடாது. பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத பிளாக் டீ உங்களின் உடல் எடையைக் குறைக்கச் செய்யும்.
பிளாக் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும். மேலும் தொப்பையில் உள்ள கொழுப்புகள் குறையும்.

இளம் சூடான பதத்தில் பிளாக் டீ அருந்தி வந்தால் கடுமையான வயிற்று போக்கு ஏற்படுவது நிற்கும். வயிற்று போக்கு ஏற்பட்ட சமயத்தில் உடல் இழந்த சக்திகளை மீண்டும் பெற உதவும். செரிமான உறுப்புகளின் செயல்பாட்டை பழைய நிலைக்கு கொண்டுவரும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சிறந்த ஒரு பானமாக பிளாக் டீ இருக்கிறது.

கடுமையான மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வந்தால் தினமும் மலம்கழிக்கும் நிலை உண்டாகி மலச்சிக்கல் தீரும்.

Related posts

தினமும் ஏன் ஆப்பிள் சாப்பிட வேண்டும்..?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா செவ்வாழையில் உள்ள சத்துக்கள் என்ன?

nathan

உடலுக்கு வலுகொடுக்கும், முப்பருப்பு வடை.!

nathan

ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமளிக்கும் தமிழர்களின் 6 பானங்கள்

nathan

இரவு உணவிற்குப் பிறகு நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்கள்

nathan

mudavattukal kilangu in tamil – முடவாட்டுக்கால் கிழங்கு சூப்…

nathan

வீட்டில் தயாரிக்கும் தயிர் ஏன் கெட்டியாக உள்ளது? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

திராட்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

கர்ப்பிணிகளுக்கு உகந்த, கால்சியம் நிறைந்த தேங்காய் – பீட்ரூட் ஜூஸ்

nathan