26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
fig juice
ஆரோக்கிய உணவு

தினமும் ஒரு டம்ளர் அத்திப்பழ ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! தெரிஞ்சிக்கங்க…

நம்மில் பலருக்கும் பார்த்ததும் சாப்பிடத் தோன்றாத ஓர் பழம் தான் அத்திப்பழம். ஆனால் பழங்காலத்தில் இந்த பழத்தை நம் முன்னோர்கள் அதிகம் சாப்பிட்டார்கள். அத்திப்பழத்தில் நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காவிட்டால், ஜூஸ் தயாரித்துக் குடியுங்கள். இதனாலும் அதன் முழு சத்துக்களையும் பெற முடியும்.

கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்த இந்த பழ ஜூஸை பெண்கள் குடிப்பது மிகவும் நல்லது. பால் பொருட்கள் பிடிக்காதவர்களுக்கு அத்திப்பழ ஜூஸ் மிகச்சிறப்பான ஓர் கால்சியம் நிறைந்த மாற்றுப் பொருளாக இருக்கும். மேலும் அத்திப்பழத்தில் கொழுப்புக்கள் மற்றும் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவு. இது உடலின் வலிமை மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் என்பதால், விளையாட்டு வீரர்களுக்கு, இந்த பழத்தின் ஜூஸ் மிகவும் சிறப்பான பானமாக இருக்கும்.

அத்திப்பழ ஜூஸ் குடிப்பதால் எவ்விட பக்க விளைவுகளும் ஏற்படாது. ஆகவே குழந்தைகளுக்கு ஏற்ற அற்புதமான ஜூஸாக இருக்கும். அதிலும் கடைகளில் விற்கப்படும் அத்திப்பழ ஜூஸை வாங்கிக் குடிப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே நற்பதமான பழங்களைக் கொண்டு தயாரித்து குடிக்க, இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். சரி, இப்போது அத்திப்பழ ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

நல்ல தூக்கத்தைக் கிடைக்கச் செய்யும்

அத்திப்பழத்தில் வைட்டமின் பி6 மற்றும் மலமிளக்கும் பண்புகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. அத்திப்பழத்தின் ஜூஸை மாலையில் அல்லது இரவில் தூங்கும் முன் குடித்தால், தூக்கமின்மை பிரச்சனை குணமாகி, இரவில் நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். ஏனெனில் இதில் ட்ரிப்டோஃபேன் உள்ளது. மேலும் தூக்கத்தைத் தூண்டும் ஒரு வகையான அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது.

மூச்சுக்குழாய் அழற்சியை சரிசெய்யும்

அத்திப்பழ ஜூஸ் மூச்சுக்குழாயில் ஏற்பட்டுள்ள அழற்சியை சுத்தம் செய்து, தொண்டையில் உள்ள சளிச் சவ்வுகளை மென்மையாக்கும் மற்றும் மூச்சுக்குழாயில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கவும் உதவும். எனவே உங்கள் மூச்சுக்குழாய் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமானால், அத்திப்பழ ஜூஸைக் குடியுங்கள்.

மலச்சிக்கலை குணமாக்கும்

அத்திப்பழ ஜூஸ் மலச்சிக்கல் பிரச்சனைளை சரிசெய்யப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்திப்பழ ஜூஸ் உடன் ஓட்ஸ் பால் சேர்த்து கலந்து உட்கொள்ள, மலச்சிக்கலுக்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதுவும் 300 மிலி ஓட்ஸ் பாலுடன், 90 மிலி அத்திப்பழ ஜூஸ் மற்றும் சிறிது அதிமதுரப் பொடி சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். அதிலும் இந்த பானத்தை காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இல்லாவிட்டால், அத்திப்பழ ஜூஸை முந்திரிப்பழ ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் குடியுங்கள். இதனால் மலச்சிக்கல் உடனே விலகும்.

சிறுநீர்ப்பை கற்களைக் கரைக்கும்

சிறுநீர்ப்பை கற்கள், கனிமச்சத்துக்களின் தேக்கத்தினால் சிறுநீர்ப்பையில் கற்களாக உருவாகும். அடர்த்தியான அத்திப்பழ ஜூஸில் நல்ல வளமான அளவில் கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதோடு இதில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் மிகவும் குறைவு. இந்த ஜூஸை ஒருவர் குடித்து வந்தால், சிறுநீர்ப்பை கற்களில் இருந்து விடுபடலாம்.

தசைகளின் வளர்ச்சிக்கு உதவும்

அத்திப்பழ ஜூஸில் கார்போஹைட்ரேட் மற்றும் நேச்சுரல் சர்க்கரை அதிகம். ஆகவே இது பாடி பில்டர் போன்ற உடலைப் பெற உதவும். பொதுவாக பாடிபில்டர் போன்ற கட்டுடலைப் பெற நினைப்போர், புரோட்டீன் ஷேக்குகளை வாங்கிக் குடிப்பார்கள். ஆனால் அத்திப்பழ ஜூஸ் இதற்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும். ஆகவே உங்களுக்கு தசைகள் நன்கு வளர்ச்சி பெற்று, பாடி பில்டர் போன்று உடல் வேண்டுமானால், அன்றாட உடற்பயிற்சிக்குப் பின் அத்திப்பழ ஜூஸைக் குடியுங்கள்.

அதிகப்படியான கலோரிகளை எரிக்கும்

உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளீர்களா? அப்படியெனில் அத்திப்பழ ஜூஸை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் அதிகளவிலான நார்ச்சத்து உள்ளது. இதனைக் குடித்தால், உடலில் உள்ள தேவையில்லாத கலோரிகள் எரிக்கப்படுவதோடு, உடலுக்கு வேண்டிய அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். எனவே உங்கள் எடையைக் குறைக்க அத்திப்பழ ஜூஸ் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதை மறவாதீர்கள்.

தாய்ப்பாலுக்கு சிறந்த மாற்று

நற்பதமான அத்திப்பழ ஜூஸை ஆறு மாத குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இது தாய்ப்பாலுக்கு சிறந்த மாற்றாக இருக்கும். எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது தாய்ப்பால் சுரக்காத பெண்கள், தங்களது குழந்தைகளுக்கு அத்திப்பழ ஜூஸைக் குடிக்க கொடுக்கலாம்.

மாகுலர் திசு சிதைவு தடுக்கப்படும்

அத்திப்பழ ஜூஸை ஒருவர் அன்றாடம் குடித்து வந்தால், முதுமைக் காலத்தில் வரும் மாகுலர் திசு சிதைவு ஏற்படுவது தடுக்கப்படும். எனவே உங்கள் கண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், அத்திப்பழ ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள்.

தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும்

அத்திப்பழத்தில் குறிப்பிட்ட வைட்டமின்களான வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ மற்றும் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும் கனிமச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. முக்கியமாக இதில் உள்ள மக்னீசியம், தவைமுடியை வேகமாக வளரத் தூண்டும். எனவே உங்களுக்கு தலைமுடி வேகமாகவும், நீளமாகவும் வளர வேண்டுமானால், தினமும் ஒரு டம்ளர் அத்திப்பழ ஜூஸைக் குடியுங்கள்.

முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும்

அத்திப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்பட்டு, சருமத்தைப் பாதிக்கும் ப்ரீ-ராடிக்கல்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும். இதன் விளைவாக முதுமைத் தோற்றத்திற்கான அறிகுறிகள் தடுக்கப்படும். உங்கள் இளமையைத் தக்க வைக்கும் ஒரு எளிய வழி என்றால், அது தினமும் ஒரு டம்ளர் அத்திப்பழ ஜூஸ் குடிப்பதே ஆகும்.

இதர நன்மைகள்

அத்திப்பழ ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடிப்பதால் வேறுசில நன்மைகளும் கிடைக்கும். அதில் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பது, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக்குவது மற்றும் மூல நோயை குணமாக்குவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

Related posts

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வேப்பம்பூ சூப்

nathan

மணத்தக்காளி கடைசல்

nathan

உங்களுக்கு தெரியுமா வெந்தய டீ குடித்தால் இவ்வளவு நன்மையா?

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம்! நோயில்லாத வாழ்வை உங்கள் குழந்தைகளுக்கு தர விரும்பினால் இந்த உணவுமுறைக்கு மாறுங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…மலச்சிக்கல், வயிற்றுப் புழு, மற்றும் “மரு” போன்றவற்றிக்கு உடனடி தீர்வு இதோ…!!

nathan

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்!!

nathan

கொழுப்பு சதை மிகுந்த மீன்களை சாப்பிடுவதால் மாரடைப்பினை தடுக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

nathan

கொழுப்பை குறைத்து, நச்சுக்களை அழிக்கும் ஆரோக்கியமிக்க அவகேடா

nathan

தாமரை தண்டில் இவ்வளவு நன்மையா?அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan