30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
21 61af641
ஆரோக்கியம் குறிப்புகள்

சுவையான கம்பு அல்வா…

கம்பில் வித்தியாசமான சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கம்பு – 1 கப்
நெய் – தேவையான அளவு
நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு
உப்பு – சிறிதளவு முந்திரி
திராட்சை – சிறிதளவு
ஏலக்காய் பொடி – சிறிதளவு

செய்முறை
கம்பை நான்கு, ஐந்து மணி நேரம் நன்கு ஊறவைத்து அரைத்து அதை வடிகட்டி பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதுபோல் இரண்டு மூன்று முறை அரைத்து அதை வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளலாம். அதில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதே வாணலியில் வடிகட்டி வைத்திருக்கும் பாலை ஊற்றி கைவிடாமல் கிளற வேண்டும். பச்சை வாசனை போன பிறகு அது திரண்டு வரும். அந்த நேரத்தில் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.

நாட்டுச் சர்க்கரை சேர்ந்தவுடன் மறுபடியும் இளக ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கைவிடாமல் கிளற வேண்டும்.

அது கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டியாகும் பொழுது அத்துடன் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த திராட்சை, முந்திரியையும் போட்டுக் கிளறி இறக்கவும்.

அல்வாவானது வாணலியில் ஒட்டாமல் நன்றாகச் சேர்ந்து திரண்டு வரும் போது இறக்கி மற்றொரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும். சூப்பரான கம்பு அல்வா ரெடி.

கம்பை அதிக நேரம் நன்கு ஊறவைத்து அரைத்தால் அதிலிருந்து பால் அதிகமாகக் கிடைக்கும்.

Related posts

குழந்தை வயிற்றுப்போக்கு நிற்க வீட்டு வைத்தியம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆடை வடிவமைப்பு தொழிலில் அதிக லாபம்

nathan

ஹெல்த் ஸ்பெஷல்.. மார்புச்சளிக்கு சிறந்த மருத்துவம்

nathan

நீங்களே காலையில் வேகமாக எழும் நபராக மாற வேண்டுமா?

nathan

வேர்க்கடலை. ஏழைகளின் அசைவ உணவு!

nathan

இந்த பயிற்சியை செய்து வருபவருக்கு வயாகரா போன்ற மருந்து தேவைப்படாது…

nathan

ஊசி மூலம் செலுத்தி வளர்ந்த கோழியைச் சாப்பிட்டால் என்னவாகும்

nathan

நீராவி குளியல் உடலுக்கு தரும் தீமைகள் – தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் இத்தனை கிளாஸ் தண்ணீர் குடிச்சா உங்க எடையை சீக்கிரம் குறைச்சிடலாம் ?

nathan