29.1 C
Chennai
Sunday, Aug 10, 2025
153500
ஆரோக்கிய உணவு

கொண்டைக்கடலையில் இவ்வளவு மருத்துவ பயன் இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

கொண்டைக்கடலை நம் நாட்டில் பரவலாக உபயோகபடுத்தபடும் ஒரு சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள். கடவுளுக்கு படைக்கபடும் உணவுபொருட்களில் பெரும்பாலும் இது படையலாகப் படைக்கப்படுகிறது.

இது பசியைப் போக்கி ஆற்றலை வழங்குவதுடன் உடல்நலனையும் மேம்படுத்துகிறது. ஆதலால்தான் இதனை நம் முன்னோர்கள் விரத வழிபாட்டில் பயன்படுத்தியுள்ளனர்.

கொண்டைக்கடலையிலிருந்து நாம் பயன்படுத்தும் உடைத்தகடலை, உப்புகடலை, கடலைப்பருப்பு ஆகியவை பெறப்படுகின்றன. இவை பொதுவாக வெள்ளை, கறுப்பு, மற்றும் பச்சை நிறங்களில் காணப்படுகின்றன.
சர்க்கரை நோயை கட்டுபடுத்தும்

 

கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள், புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது. அதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க இவை உதவி செய்கிறது.

இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்

 

கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள் ஆகும். ஏனெனில் இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

புற்றுநோய் வராமல் தடுக்கும்

கொண்டைக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படாது. கொண்டைக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு. மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் கொண்டைக்கடலை உதவும்.

உடல் எடை குறையும்

கொண்டைக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடை குறைக்க நினைத்தால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். உங்களுக்கு அவ்வப்போது ஏற்படும் பசியை போக்கி நீண்ட நேரம் பசி ஏற்படாமல் தடுக்கும்.

சிறுநீர் பிரச்சினைகள் தீரும்

கொண்டைக்கடலையை வறுத்து பொடி செய்து தினமும் இருமுறை உட்கொண்டு வந்தால் வயிற்று பொருமல், சிறுநீர் சரிவர வெளிப்படாமல் சொட்டு சொட்டாக போதல், சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.

எலும்புகள் உறுதியடையும்

எலும்புகளின் உறுதிக்கு வைட்டமின், தாதுக்கள், கால்சியம், மக்னீஷியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் கே போன்றவை தேவை. இவை அனைத்தும் கொண்டைக்கடலையில் அபரிமிதமாக உள்ளது. எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் கொண்டைகடலையை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.

Related posts

கறிவேப்பிலையை இப்படி உணவில் சேர்த்தால் பல வகை நன்மைகள் கிடைக்குமாம்!

nathan

நீங்கள் சைவ உணவை மட்டும் உண்பவர்களாக இருந்தால் கட்டாயம் இத படிங்க!

sangika

குளிர் கால உணவு முறைகள்

nathan

சுவையான சத்தான பேபி கார்ன் சூப்

nathan

இந்த உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

எருமைப் பால்! பசும் பால்- இரண்டில் எது குடிப்பது நல்லது?

nathan

ரத்த ஓட்டத்தை சீராக்கும் வாழைப்பூ

nathan

சூப்பர் டிப்ஸ்.. சமையலில் சில செய்யக்கூடாத தவறுகள் என்ன தெரியுமா…?

nathan

விட்டமின் சி நிறைந்த இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

nathan