23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
2224e0dd a70a 4ac7 9140 187ca0f44c84 S secvpf
ஆரோக்கியம் குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் வரும் ஸ்ட்ரெட்ச் மார்க்கை நீக்க இயற்கை வழிகள்

திடீரென உடல் எடை கூடுதல், அளவுக்கு அதிகமாக உடல் எடை குறைதல், பெண்மை அடைதல் அல்லது கருவுற்றல் போன்றவைகளால் சருமம் சுருங்கவோ அல்லது விரிவடையவோ செய்யும். அதன் விளைவாக சருமத்தின் பல பகுதிகளில் சிவப்பு அல்லது பழுப்பு நிற வரிகள் உண்டாகும். முக்கியமாக வயிறு, நெஞ்சு, தொடை மற்றும் கை பகுதிகளில் இதனை காணலாம். இந்த ஸ்ட்ரெட்ச் குறிகள் சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழப்பதால் உண்டாகிறது. இது அழகை பாதிப்பதால், பெண்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

இவ்வகை மார்க்குகளை நீக்க பல க்ரீம்களில் கலக்கப்பட்டுள்ள சின்தடிக் ரசாயனங்கள் சருமத்திற்கு ஆபத்தாக கூட முடியும். அதிலும் அதனை தொடர்ந்து பயன்படுத்தினால், பக்க விளைவுகள் இன்னும் மோசமாகத் தான் இருக்கும். அதனால் இவ்வகை மார்க்குகளை நீக்க சில வீட்டு சிகிச்சைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கர்ப்ப காலத்தில் தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் உடல் எடையை குறைக்கும் பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட வேண்டும். இதனால் சருமம் சுலபமாக விரிவடையவும், சுருங்கவும் செய்யும். ஆகவே எந்த ஒரு விரிவடையும் குறிகள் உண்டாகாமல் தடுக்கலாம்.

இயற்கை எண்ணெய்கள் மற்றும் பாதரச கலவைகளை பல வகையாக கலந்து மசாஜ் செய்ய வேண்டும்.

அதிலும் 30 மில்லி அளவு அவகேடோ, ஜோஜோபா, ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய், 6 சொட்டு சீமைச்சாமந்தி எண்ணெய் அல்லது 4 டீஸ்பூன் சுத்தமான ஆலிவ் எண்ணெய், 4 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து செய்த பேஸ்ட்டை பயன்படுத்தி மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கலாம். குறிப்பாக இதனை குளிக்கும் முன்பாகவோ அல்லது படுக்கும் முன்பாகவோ, இந்த கலவையை நன்றாக கலந்து ஸ்ட்ரெட்ச் குறிகளின் மீது தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

சீரான முறையில்

இதனை மெதுவாக மசாஜ் செய்தால், இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் சருமத்தில் ஸ்ட்ரெட்ச் குறிகள் நீங்கும்.

வைட்டமின் ஈ உள்ள எண்ணெயை பயன்படுத்தியும் ஸ்ட்ரெட்ச் குறிகளை நீக்கலாம். வைட்டமின் ஈ, கொலாஜென் பைபர்களை தயாரிக்க ஊக்குவிப்பதாக இருப்பதால் பாதிப்படைந்த சரும திசுக்கள் மீண்டும் வளர்ச்சி பெற உதவும். மேலும் ஸ்ட்ரெட்ச் குறிகள் உண்டான இடங்களில் குறிகளை நீக்கவும் உதவும்.

ஸ்ட்ரெட்ச் குறிகள் அரிப்பை ஏற்படுத்தும். அதனால் இது குணமாகும் காலமும் அதிகரிக்கும். ஸ்ட்ரெட்ச் குறிகள் ஏற்படுத்தும் அரிப்பை உடனடியாக நீக்க, அதன் மேல் தேங்காய் எண்ணெயை தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின்பு குளிக்க வேண்டும். இதனை

தொடர்ச்சியாக 2 வாரங்கள் செய்து வந்தால், ஸ்ட்ரெட்ச் குறிகளை தடுத்து, அதனை நீக்கவும் செய்யும். பாதாமில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. அதனால் பாதாமை அதிகம் சாப்பிடலாம் அல்லது ஸ்ட்ரெட்ச் குறிகள் உள்ள இடத்தில் பாதாம் எண்ணெயை தடவலாம். இது கொலாஜென் மற்றும் எலாஸ்டிக் பைபர்கள் உருவாகச் செய்யும். இந்த இரண்டு புரதமும், ஆரோக்கியமான சருமத்தை பெற உறுதுணையாக இருக்கும். குறிப்பாக இது கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான சிகிச்சையாக விளங்குகிறது. மேலும் தாய்க்கும், கருவிற்கும் சிறந்த ஊட்டச்சத்தாகவும் விளங்கும். முக்கியமாக மூளை வளர்ச்சிக்கு அத்தியாவசிய மூலமாக விளங்குகிறது.

சைக்கிள் ஓட்டுவது, படுத்து எழுந்திருப்பது போன்ற வயிறு சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், தசைகள் வலுவடைந்து உடல் எடையும் குறையும். அதனால் ஸ்ட்ரெட்ச் குறிகள் உண்டாவதும் தடுக்கப்படும். யோகா செய்யும் போது சில மூச்சு பயிற்சி அல்லது ப்ராணயாமத்தில் ஈடுபட்டாலும் கூட, சருமத்தின் நெகிழ்வு தன்மையை மேம்படுத்தி ஸ்ட்ரெட்ச் குறிகளை நீக்கலாம்.
2224e0dd a70a 4ac7 9140 187ca0f44c84 S secvpf

Related posts

ஏசி’யிலேயே இருப்பவரா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ஃபாஸ்ட் புட் உணவு உண்பதை ஏன் முற்றிலும் தவிர்க்க வேண்டும்?

nathan

உங்களுக்கு தெரியுமா நிலவேம்பு கஷாயத்தின் மகத்துவங்கள் என்ன தெரியுமா?

nathan

உங்கள் உயரம் கூடவோ, குறையவோ நீங்கள் பிறந்த மாதம் காரணமாக இருக்கலாம்

nathan

இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காதாம்…

nathan

பிறரை பார்த்து பொறாமை கொள்ளாத ராசி எது தெரியுமா?

nathan

குழந்தைகளிடம் சொல்லக்கூடாத, பேசக் கூடாத சில விஷயங்கள்

nathan

heath tips.. தொப்புளில் எண்ணெய் வைத்தால் உண்டாகும் நல்ல குணங்கள்

nathan

காலை உணவு சாப்பிடும்போது இந்த தவறுகளை தெரியாமகூட செஞ்சுராதீங்க…

nathan