இதை செய்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்!- வீடியோ
குழந்தை என்பது ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் கிடைக்கும் ஒரு மிகப்பெரிய வரமாகும். எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்தால், அந்த காரியம் வெற்றியடையும். அதே போல உங்களது வாழ்க்கையில் குழந்தை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ விரும்பினீர்கள் என்றால், கர்ப்பமாவதற்கு முன்னால் நீங்கள் ஒரு சில விஷயங்களை செய்ய வேண்டியுள்ளது. இவற்றை எல்லாம் செய்தால் உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதோடு, கர்ப்ப காலத்தில் சில பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்கலாம்.
மருத்துவரை சந்தித்தல்
நீங்கள் கர்ப்பமாவதற்கு முன்பு மருத்துவரை சந்தித்து ஒரு கவுண்சிலிங் எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலமாக நீங்கள் குழந்தை பெற மனதளவில் தயாராகலாம்.
மாதவிடாய் பிரச்சனை
உங்களது மாதவிடாய் ஒழுங்கான முறையில் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே நீங்கள் உங்களது மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை மருத்துவரின் ஆலோசனைப் படி சரி செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றை சரி செய்து கொள்ள வேண்டியது முக்கியமாகும். இதனால் உங்களுடைய கர்ப்பமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதோடு கர்ப்ப காலத்தில் வரும் 99% பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை
நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது அவசியமாகும். உங்களது அன்றாட உணவுகளில், காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் பொருட்கள் கட்டாயமாக இருக்க வேண்டியது அவசியமாகும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.
உடற்பயிற்சி
கர்ப்பமாக இருக்கும் போது மட்டுமல்ல, கர்ப்பமாவதற்கு முன்னர் இருந்தே நீங்கள் தினசரி 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். இதனால் ஆரோக்கியமான குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்று எடுக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
போலிக் ஆசிட்
நீங்கள் உங்களுடைய மருத்துவரின் பரிந்துரையுடன் போலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிடலாம். நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது வலிநிவாரணி மாத்திரைகளை எடுக்க கூடாது. இது பற்றி மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்ளுங்கள்.
போதை பழக்கங்கள்
மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்கள் இருந்தால், அதனை கர்ப்பமாவதற்கு 6 மாதங்கள் முன்னராகவே கைவிட்டு விட வேண்டியது அவசியமாகும்.
இரத்தசோகை
பெண்கள் பலருக்கு இரத்தம் குறைவான அளவு தான் உள்ளது. உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை பெரும்பாலோனோர் கர்ப்பமான பிறகு தான் அறிந்து கொள்கின்றனர். ஆனால் அவர்களால் சத்தான உணவுகளை கர்ப்ப காலத்தில் சாப்பிட முடிவதில்லை. எனவே முன்கூட்டியே இரத்த பரிசோதனை செய்து உங்களது ஹீமோகுளோபின் அளவை தெரிந்து கொண்டு, சத்தான உணவுகளை சாப்பிட்டு, இரத்ததின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.
மாதுளை
நீங்கள் விரைவாக கர்ப்பமடைய மாதுளை சாப்பிடலாம். மாதுளை சாப்பிடுவதால், கர்ப்ப பைக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் ஆண்கள் மாதுளை சாப்பிடுவதால் விந்தணுக்களின் தரம் அதிகரிக்கும். இது கரு ஆரோக்கியமாக பிறப்பதற்கு உதவும்.
பச்சைக்காய்கறிகள்
பிரஷ் ஆன பச்சைக்காய்கறிகளில் ஃபோலிக் ஆசிட் மற்றும் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. எனவே கர்ப்பமடையும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இது கர்ப்பப்பையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.