27 C
Chennai
Thursday, Nov 14, 2024
8 cover apple
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் மருத்துவரிடம் செல்ல அவசியமே இல்லை என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் ஆப்பிள் சாப்பிடும் போது அதன் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா? தெரிந்தாலும், அதிக சுத்தம் என்ற பெயரில், தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவோம்.

 

ஆனால் ஆப்பிளிலேயே அதன் தோலில் தான் சத்துக்களே உள்ளன என்பது தெரியுமா? எனவே ஆப்பிளை சாப்பிடும் முன், அதனை நன்கு சுத்தமாக கழுவி விட்டு, தோலை நீக்காமல் சாப்பிடுங்கள். இங்கு ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொண்டு, அவர்களுக்கு ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரியப்படுத்துங்கள்.

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுவாச பிரச்சனைகள்

ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால், சுவாச பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதற்கு ஆப்பிளின் தோலில் உள்ள க்யூயர்சிடின் என்னும் பொருள் தான் காரணம். இது தான் நுரையீரலை சீராக செயல்பட வைக்கிறது.

ஞாபக மறதி நீங்கும்

ஆப்பிளின் தோலில் உள்ள க்யூயர்சிடின், மூளைச் செல்கள் பாதிப்படைவதையும், ஞாபக மறதி ஏற்படுவதையும் தடுத்து, ஆர்வத்தை அதிகரித்து, ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகள் ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடுடன் இருக்கும். ஆப்பிளின் தோலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஸ்டார்ச்சை உடைத்து சர்க்கரையாக மாற்றும் நொதிகளின் செயல்பாட்டை குறைத்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதைத் தடுக்கும்.

கண் பிரச்சனைகள்

ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் கண் புரை ஏற்படும் அபாயம் குறையும். முக்கியமாக கண்களின் ஆரோக்கியம் மேம்படும். எனவே கண்களில் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிடுங்கள்.

சிறுநீரக கற்கள்

ஆப்பிளின் தோலில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கும். உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், கற்கள் உருவாகும். அத்தகைய கொலஸ்ட்ராலை நார்ச்சத்துக்கள் நீக்கும் என்பதால் ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவது நல்லது.

வாய் ஆரோக்கியம்

ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால், பல் சொத்தை ஏற்படுவது தடுக்கப்படும். எனவே தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால், பல் சொத்தை ஏற்படுவது தடுக்கப்பட்டு, பற்கள் வெள்ளையாகவும், வாயில் எச்சிலின் உற்பத்தி அதிகரித்து வாய் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.

இரத்த சோகை

கர்ப்பிணிகள் ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால், ஆப்பிள் தோலில் உள்ள ஃபோலிக் ஆசிட் மற்றும் இரும்புச்சத்தினால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, ஆப்பிளின் தோலில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்றவையும் வளமாக நிறைந்துள்ளது. எனவே இரத்த சோகை உள்ளவர்கள், ஆப்பிளை தினமும் தோலுடன் சாப்பிட்டு வருவது நல்லது.

எலும்புகளுக்கு நல்லது

ஆப்பிளின் தோலில் கால்சியம் இருப்பதால், இதனை தோலுடன் சாப்பிட்டால், எலும்புகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். முக்கியமாக மூட்டு வலி உள்ளவர்கள் ஆப்பிளை சாப்பிடுவது சிறந்தது.

எடை குறைவு

ஆப்பிளின் தோலில் அர்சோலிக் என்னும் அமிலம் உள்ளது. இது உடல் எடையைக் குறைக்க உதவும். ஆகவே எடையைக் குறைக்க நினைப்போர் ஆப்பிளை தோல் நீக்காமல் அப்படியே சாப்பிட வேண்டும்.

நோய்களில் இருந்து பாதுகாப்பு

ஆப்பிளின் தோலில் ப்ளேவோனாய்டுகள், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன் போன்றவை உள்ளது. இதனால் உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோய்களின் தாக்கம் குறையும்.

புற்றுநோய்

ஆப்பிளின் தோலில் ட்ரிட்டர்பீனாய்டு என்னும் பொருள் நிறைந்துள்ளது. இவை புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக்கூடியது. எனவே ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டு வந்தால், கல்லீரல், மார்பகம், குடல் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுக்கலாம்.

ஆரோக்கியம் இதயம் மற்றும் இரையக குடலியல் பிரிவு

ஆப்பிளின் தோலில் கரையக்கூடிய மற்றம் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே ஆப்பிளை தோலுடன் உட்கொள்வதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்துக்களால், உயர் கொலஸ்ட்ராலால் ஏற்படும் மாரடைப்பு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

Related posts

பெண்களின் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச் சத்துகளில் கால்சியம் முக்கியமானது

nathan

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் அதி சக்திவாய்ந்த பானம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான கத்திரிக்காய் மசாலா

nathan

பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது தெரியுமா?அவசியம் படிக்க..

nathan

உங்களுக்கு தெரியுமா தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி சாப்பிடலாமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பெண்களுக்கு ஏற்படும் அபாயகரமான வியாதி களை தொடக்கத்திலேயே முறிந்து போக இத செய்யுங்கள்!….

sangika

தெரிந்து கொள்ளுங்கள்! சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய சாப்பிடக்கூடாத உணவுமுறைகள் என்ன…?

nathan

காலை வேளையில் குடிப்பதற்கு ஏற்ற சில ஆரோக்கிய பானங்கள்!!!

nathan