தொப்பை குறைய

குனிய முடியாத அளவில் தொப்பை இருக்கா? அதைக் குறைக்க இதோ சில வழிகள்!!!

பானை போன்று உங்கள் வயிறு வீங்கியுள்ளதா? அதனால் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா? உங்கள் தொப்பையை வைத்து உங்களை கிண்டல் செய்கிறார்களா? அப்படியெனில் உடனே தொப்பையைக் குறைக்கும் முயற்சியில் இறங்குங்கள். தற்போது தொப்பையைக் குறைப்பதற்கு எண்ணற்ற வழிகள் உள்ளன. இருப்பினும் இயற்கை வழிகளைப் பின்பற்றினால் மட்டுமே, முழு நன்மைகளையும் பெற முடியும்.

அதற்கு அன்றாடம் உடற்பயிற்சிகளுடன், ஒருசில காய்கறிகளையும் உட்கொள்ள வேண்டியது அவசியம். ஆம், காய்கறிகளைக் கொண்டு உடலில் தேங்கியுள்ள கொழுப்பை ஆரோக்கியமான முறையில் கரைக்கலாம். மேலும் காய்கறிகளில் புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது. இதனால் கொழுப்புக்கள் குறைவதுடன், உடலுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்கும்.

சரி, இப்போது வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்க உதவும் அந்த காய்கறிகள் எவையென்று பார்ப்போம். அதைப் படித்து அவற்றை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே காணலாம்.

மிளகாய் கனடாவில்

மேற்கொண்ட ஆய்வில் மிளகாயில் உள்ள ஒருவித கெமிக்கல், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்புக்களை எரிப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.

குடைமிளகாய்

குடைமிளகாயிலும் கொழுப்புக்களைக் கரைக்கும் பொருள் உள்ளது. இந்த காய்கறியை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், அதிலும் முழுமையாக வேக வைக்காமல் பாதியாக வெந்த நிலையில் உட்கொண்டு வந்தால், உடலின் மெட்டபாலிச அளவு அதிகரித்து கொழுப்புக்கள் கரைக்கப்படும்.

வெங்காயம்

வெங்காயத்தில் கலோரிகள் குறைவாக உள்ளதால், தொப்பையைக் குறைக்க நினைப்போர் தங்களின் உணவில் வெங்காயத்தை சேர்த்து கொள்வது நல்லது. அதிலும் வெங்காயத்தை க்ரில் அல்லது வேக வைத்து உணவில் சேர்த்து கொண்டால், அதன் முழுமையான பலனைப் பெறலாம்.

வெள்ளரிக்காய

் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால் அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். எனவே உங்களுக்கு பசி எடுப்பது போல் இருந்தால், வெள்ளரிக்காய் ஒரு பௌல் உட்கொண்டு, தண்ணீரைக் குடியுங்கள். இதனால் உடலில் நீர்ச்சத்துக்களின் அளவு அதிகரித்து, உடலில் சேர்ந்துள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்படும்.

பச்சை இலைக் காய்கறிகள்

பசலைக்கீரை, முட்டைக்கோஸ், ப்ராக்கோலி போன்றவற்றை எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் உணவில் சேர்க்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு வேகமாக உங்கள் தொப்பையைக் குறைக்கலாம். எனவே உங்களுக்கு விரைவில் தொப்பை குறைய வேண்டுமானால், இவற்றை அன்றாடம் உட்கொண்டு வாருங்கள்.

பரங்கிக்காய்

பரங்கிக்காயில் வைட்டமின் சி ஏராளமாக நிறைந்துள்ளதால், இவை உங்களை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள உதவுவதோடு, உங்கள் தொப்பையையும் குறைக்க உதவும்.

தக்காளி

தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது. இந்த இரண்டு சத்துக்களும் நிரம்பிய தக்காளியை ஜூஸ் போட்டு அன்றாடம் குடித்து வந்தால், உங்கள் வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, விரைவில் தொப்பை குறைவதைக் காணலாம்.

பீன்ஸ்

பீன்ஸ் கூட வயிற்றில் தங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இதனை அதிகம் உணவில் சேர்த்து வந்து, அதன் பலனைப் பெறுங்கள்.

கேரட்

கேரட்டில் பீட்டா-கரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இச்சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமின்றி, தொப்பைக் குறைக்கவும் உதவும். எனவே தினமும் கேரட் அல்லது கேரட் ஜூஸ் எடுத்து வந்து, உங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ளுங்கள்.

செலரி

வெள்ளரிக்காயைப் போன்றே செலரியிலும் நீர்ச்சத்து ஏராளமாக உள்ளது. மேலும் இதில் கலோரிகளும் குறைவாக உள்ளது. எனவே வயிற்றில் உள்ள கொழுப்புக்களை கரைக்க செலரி பெரிதும் உதவியாக இருக்கும்.21 1445403893 10 celeryforimmunity

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button