30.8 C
Chennai
Sunday, May 11, 2025
miraculoushealthbenefitsofputting
Other News

உங்களுக்கு தெரியுமா மூட்டு வலியை துரத்தி அடிக்கும் முட்டைகோஸ் மருத்துவம்

இன்றைய இளம் தலைமுறையினர் காய்கறிகள் என்றாலே அலரி ஓடுகின்றனர்.உணவில் காய்கறிகள் இருந்தால் அதை ஓரம் கட்டிவிட்டு சப்பிடுவோரே அதிகம்.

அந்த காய்கறிகளே நமக்கு மருந்தாக பயன்படுகிறது என்பது பலருக்கும் தெரியாத ஒரு உண்மையாகும்.அப்படி மருந்தாக பயன்படும் காய்கறிகளில் ஒன்றுதான் முட்டைகோஸ்.

முட்டைகோஸை நாம் சாப்பிடுவதன் மூலம் மூட்டுவலி, கால் வீக்கம்,கால் குடைச்சல்,கால் சுளுக்கு,முட்டி தேய்மானம், போன்ற பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது

 

முட்டைக்கோஸ் இலை வகையைச் சார்ந்த ஒரு தாவரம் ஆகும்.இதில் நார்சத்து,இரும்பு சத்து அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது.அதனால்தான் மருத்துவத்தில் முட்டைகோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.

முட்டைகோஸின் இலைகள் சுளுக்கு, கட்டி, வீக்கம், புண்கள் போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தபடுகிறது. விளையாட்டில் ஏற்படும் காயங்களுக்கும், `ஆர்த்ரிட்டிஸ்’ எனப்படும் மூட்டுவலி தொடர்பான பிரச்னைகளுக்கும் முட்டைக்கோஸ் மருந்தாக பயன்படுகிறது.

 

பல வருடங்களாகவே மூட்டுகளில் ஏற்படும் வலிகளைப் போக்கவும், வீக்கங்களைக் குறைக்கவுமான இயற்கை சிகிச்சைக்கு முட்டைக்கோஸ் பயன்பட்டு வருகிறது.

சில முட்டைக்கோஸ் இலைகளை எடுத்து, நன்றாகக் கழுவி ஒரு பிளாஸ்டிக் கவரில் போடவும். இதை அப்படியே ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீஸரில் வைத்துவிடவும்.

ஃப்ரீஸரில் வைத்திருக்கும் முட்டைக்கோஸ் இலைகள் ஜில்லென்று ஆகவேண்டும்; அதே நேரம் அதன் வளைதன்மை மாறாமலும் இருக்க வேண்டும்.

வலி வரும்போது அல்லது வலி வருவதாக உணரும்போது, ஃப்ரீஸரில் வைத்திருக்கும் முட்டைக்கோஸின் இலைகளை எடுக்கவும். வலியுள்ள இடத்தில் அந்த இலைகளை வைத்து, ஒரு துணியால் கட்டவும். வெதுவெதுப்பாக இருக்கும் தோல்பகுதி சில்லென்று ஆகும்வரை அப்படியே வைத்திருக்கவும்.

இப்போது முட்டைகோஸில் உள்ள ரசாயனங்கள் தோல் வழியாக ஊடுருவி, மூட்டுகளில் சேர்ந்திருக்கும் வலிக்கான காரணிகளை கரைந்துபோகச் செய்யும். அல்லது குறைந்தபட்சம் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கச் செய்யும்.

மூட்டுகளில் வீக்கம் உள்ளவர்கள் ஃப்ரீஸரில் வைத்திருக்கும் முட்டைக்கோஸ் இலைகளை எடுக்கவும். வீங்கிய இடத்தில் இலைகளை வைத்து, துணியால் கட்டுப்போடவும். அப்படியே ஒரு சேரில் அமர்ந்து, வலியுள்ள பாதத்தை மட்டும் 30 நிமிடங்களுக்கு உயர்த்திப் பிடிக்கவும். முட்டைக்கோஸுக்கு நீரை ஈர்க்கும் சக்தி உண்டு. இது, மூட்டில் உள்ள அதிகப்படியான திரவத்தை எடுத்து, வீக்கத்தைக் குறைத்துவிடும்.

இந்த முறையை மேற்கொள்ளும்போது முட்டைக்கோஸின் இலை வைத்திருக்கும் இடத்தில் எரிச்சலோ, அரிப்போ, வீக்கமோ ஏற்பட்டால், உடனே அதை அகற்றிவிட வேண்டும். அந்தப் பிரச்னை தொடர்ந்தால் நிச்சயம் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

Related posts

முன்னழகை அப்பட்டமாக காட்டும் எஸ்தர் அணில்!! புகைப்படங்கள்

nathan

weight loss fruits in tamil : உடல் எடை குறைக்க உதவும் பழங்கள்

nathan

நயன்தாராவின் படத்தில் நடித்த பிக் பாஸ் பூர்ணிமா!

nathan

AR.ரஹ்மானின் இளம்வயது புகைப்படங்கள் இதோ

nathan

11 கிலோ தங்க நகைகள் – கும்பமேளாவில் கவனத்தை ஈர்க்கும் சாமியார்கள்!!

nathan

பிறந்த குழந்தையை கொன்றுவிட்டு நாடமாடிய தாய்

nathan

பேஸ்புக்கில் அந்தரங்க புகைப்படங்கள்..!இளம்பெண், காதலன் தற்கொலை!

nathan

படுக்கைக்கு அழைத்த “பக்தி” நடிகர்!

nathan

ரஜினியுடன் இருக்கும் இந்த குழந்தை யார் என்று தெரியுதா?

nathan