உலர் திராட்சையானது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. தினமும் உலர்ந்த திராட்சை சாப்பிட்டால் மலசிக்கல் பிரச்சினை தீரும்.
உலர் திராட்சையை சர்க்கரை நோயாளிகளும் தாராளமாக சாப்பிடலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்தும் இருப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கவும் திராட்சை உதவுகிறது.
உலர் திராட்சையில் தாமிர சத்துக்கள் உள்ளதால் ரத்தத்தில் உள்ள சுவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதை சாப்பிடுவதால் எலும்பு மஜ்ஜைகள் வலுப்பெறும்.
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய துடிப்பு சீராகும். தினமும் படுக்கச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு 5 காய்ந்த திராட்சையை பாலில் போட்டு காய்ச்சியோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் சுகமான தூக்கம் வரும்.
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்க்கொண்டால் இரத்தசோகை குணமடையும்.