29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
peridot
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…உங்க ராசிக்கு எந்த ராசிக்கல் போட்டா அதிர்ஷ்டம் கொட்டுமென்று தெரியுமா…?

அனைவருக்குமே அதிர்ஷ்டக்கற்கள் அணிந்தால், அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் கொட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை அவ்வாறு இல்லாவிட்டாலும், அத்தகைய கற்களை வாங்கி அணியும் முன், மனதில் ஒருவித உறுத்தல் நிச்சயம் இருக்கும். பலர் நன்கு சந்தோஷமாக, வீடு, கார் போன்றவற்றை பெற வேண்டுமென்று, பல ஜோதிடர்களை சந்தித்து, தங்கள் ராசிக்கு எந்த கற்களை அணிந்தால், வீட்டில் செல்வம் கொழிக்கும் என்று கேட்டு, ராசிக்கற்களை அணிகின்றனர்.

பொதுவாக 12 ராசிகள் உள்ளன. இந்த ராசிகள், கிரகங்களைப் பொறுத்து அதிர்ஷ்டக் கற்களை அணிந்தால் தான், அதிர்ஷ்டம் கொட்டும். ஒருவேளை தவறான ராசிக்கற்களை அணிந்தால், அது வாழ்க்கையையே மிகவும் மோசமானதாக்கிவிடும். உதாரணமாக, நீலம் மற்றும் முத்து போன்றவற்றை ஜோதிடர்களின் ஆலோசனையின்றி அணியக் கூடாது. எனவே எப்போதும் ராசிக்கற்களை அணியும் முன், ராசிக்கு எந்த கற்கள் அணிந்தால் நல்லது நடக்கும் என்பதை தெரிந்து பின்னரே அணிய வேண்டும்.

மேலும் ராசிக்கற்களை ராசிகளுக்கேற்ப அணியும் போது, பலவீனமாக இருக்கும் கிரகங்களானது நன்கு வலிமையாகி, வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றதை காணலாம். ஏனெனில் கிரகங்களானது பலவீனமாக இருந்தால், வாழ்க்கையானது நிலையின்றி செல்வதோடு, பொருளாதாரப் பிரச்சனை மற்றும் உடல் நலத்தில் பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்கக்கூடும். எனவே அத்தகைய கிரகங்களை வலிமையாக்குவதற்கு, எந்த ராசிக்கு எந்த ராசிக்கற்களை அணிந்தால் நல்லது நடக்கும் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, நம்பிக்கை இருந்தால், அதனை அணிந்து வாழ்க்கையில் முன்னேற்றதை காணுங்கள். மேலும் இந்த கற்களை அணியும் முன், ஜோதிடரின் ஆலோசனைப் பெற்று அணிவது, இன்னும் சிறந்தது.

மேஷம்: வைரம் (diamond)

ராசி மேஷமாக இருந்தால், வைரம் மற்றும் மணிக்கல் (bloodstone) அணிந்தால், அதிர்ஷ்டம் பொங்கும்.

ரிஷபம்: மரகதம் (Emerald)

ரிஷப ராசி உள்ளவர்கள், மரகதக் கல்லை அணிந்தால் மிகவும் நல்லது.

மிதுனம்: முத்து (Pearl)

மிதுன ராசி உள்ளவர்கள், முத்து அணிந்தால் சிறந்த பலனைப் பெறலாம்.

கடகம்: நீல வண்ண முத்து (Moonstone)

கடக ராசிக்காரர்கள், மின்னும் நீல வண்ண முத்தை அணிந்தால், செல்வம் கொழிக்கும்.

சிம்மம்: மாணிக்கம் (Ruby)

சிம்ம ராசிக்காரர்கள் மாணிக்கக்கல்லை அணிந்தால், அதிர்ஷ்டம் கொழிக்கும்.

கன்னி: நீலம் (Blue Sapphire)

நீலக் கல்லை கன்னி ராசிக்காரர்கள் அணிந்தால், எப்போதும் நல்லது நடக்கும்.

துலாம்: பச்சை மணிக்கல் (Peridot)

பச்சை மணிக்கல்லானது, துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ராசிக்கல்லாகும்.

விருச்சிகம்: செவ்வந்திக்கல் (Amethyst)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு, செவ்வந்திக்கல் மிகுந்த அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

தனுசு: புஷ்பராகம் (Topaz)

தனுசு ராசிக்காரர்கள், புஷ்பராகம் என்னும் அதிர்ஷ்டக்கல்லை அணிவது நல்லது. வேண்டுமெனில், மாணிக்கம் மற்றும் செவ்வந்திக்கல் போன்ற ராசிக்கற்களைக் கூட அணியலாம்.

மகரம்: ஆம்பர் (Amber)

ஆம்பர் கல்லை மகர ராசிக்காரர்கள் அணிந்தால், வீட்டில் மகிழ்ச்சியுடன், செல்வமும் கொழிக்கும்.

கும்பம்: கோமேதகம் (Garnet)

கும்ப ராசிக்காரர்கள், கோமேதக கற்களை அணிந்தால், வாழ்க்கையானது சந்தோஷமாகவும், செல்வ செழிப்புடனும் இருக்கும்.

மீனம்: நீல பச்சை நிறக்கல் (Aquamarine)

மீன ராசிக்காரர்கள், இந்த நீல பச்சை நிறக்கல்லை அணிந்தால், வலிமையிழந்து இருக்கும் கிரகங்கள் வலிமைப் பெற்று, செல்வத்தைக் கொழிக்கும்.

Related posts

இதை முயன்று பாருங்கள் கிட்னியில் உள்ள கல்லை போக்க சிறந்த வழி

nathan

இந்த 5 ராசிக்காரங்க எல்லாரையும் நம்பி ஈஸியா ஏமாந்துபோகும் முட்டாளாக இருப்பார்களாம்…

nathan

அத்திப்பழம் உடலுக்கு சிறந்த மருந்தாக திகழ்வது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்!…

sangika

இவற்றை எல்லாம் ஒரு போதும் அடக்கி விடாதீர்கள்!….

nathan

நீங்கள் எந்த பக்கம் படுத்துறங்க வேண்டும் தெரியுமா..? அப்போ கட்டாயம் இத படிங்க!

nathan

நகம் கடிக்கும் பழக்கம் இருக்கின்றதா.

nathan

வீட்டுக்குறிப்புகள் டிப்ஸ்.. டிப்ஸ்…

nathan

இந்த தவறுகள் உங்கள் குழந்தைகளை தனிமையில் அழ வைக்கும் என தெரியுமா?

nathan

இடது கையை பயன்படுத்துவது அமங்கலமான ஒன்றா?தெரிஞ்சிக்கங்க…

nathan