நம்மில் பெரும்பாலோர் மன அழுத்த சூழ்நிலைகளால் தூக்கத்தை இழக்க நேரிடுகிறது. அதே நேரம் படுக்கைக்கு செல்லும் முன்னர் நாம் சாப்பிடும் அந்த நாளின் கடைசி உணவு நமது தூக்கமில்லாத இரவுகளுக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடாது.
தூங்குவதற்கு முன்னர் சாப்பிடக்கூடாத உணவுகள்
Caffeine
காபி போன்ற Caffeine கலந்து பானங்கள் மூளையில் ஒரு விளைவை ஏற்படுத்தி தூங்கவிடாமல் செய்கிறது. எனவே உங்களுக்கு தூக்கமில்லாத இரவு வேண்டாம் என்றால் இரவு உணவிற்குப் பிறகு காபியைத் தவிர்க்கவும்.
கோலா
பலரும் இரவு உணவுக்கு பின்னர் கோலா போன்ற குளர்பானங்களை குடிப்பார்கள். கோலாக்களில் சர்க்கரை மற்றும் காஃபின் உள்ளன, மேலும் அவை உங்களை உற்சாகப்படுத்தும். இது நம்மை தூங்கவிடாது, மேலும் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் எழுந்திருக்க நிலை ஏற்படும்.
காரமான உணவுகள்
காரமான உணவுகளை இரவில் சாப்பிட்டால் அது வயிற்றில் அமிலத்தின் அளவை அதிகரிக்கச் செய்யலாம், இது உங்கள் மார்பு மற்றும் வயிற்றில் எரியும் உணர்வையும், வீக்கம் மற்றும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும். எனவே உறங்குவதற்கு முன் குறைவான காரம் மற்றும் மசாலா கொண்ட உணவைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன் இரவு உணவைச் சாப்பிடுவதை உறுதி செய்யவும்.
ஐஸ் கிரீம்
ஐஸ் கிரீமை படுக்கைக்கு செல்வதற்கு சற்று முன் உட்கொள்ளும் போது அது மோசமான விளைவை ஏற்படுத்தும். ஐஸ்கிரீமில் கொழுப்பு உள்ளது, இது எளிதில் ஜீரணமாகாது. இதில் சர்க்கரையும் அதிகம் உள்ளதால் தூக்க முறைகளை சீர்குலைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.