23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
2 15
மருத்துவ குறிப்பு

பேக்டீரியா தொற்றினை தவிர்க்க அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டியவை! தெரிஞ்சிக்கங்க…

நோயெதிர்ப்பு சக்தி சற்று குறைவாக இருந்தால் உடனேயே நமக்கு பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படக்கூடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருமே இது போன்ற பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். அதனை சற்று கவனிக்காமல் விட்டால் உடனேயே வைரஸ் காய்ச்சல் உட்பட அடுத்த கட்டத்திற்கு தள்ளிடும்.

ஒன்று உங்களது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் பாக்டீரியா தொற்று ஏற்பட்ட உடனேயே அதனை கவனித்து உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். பொதுவாக இது போன்ற பாக்டீரியாக்களை அழிக்க ஆண்ட்டிபயோட்டிக் மருந்துகளை கொடுப்பார்கள். மருந்துகளை எடுத்துக் கொள்வதை விட வீட்டிலிருந்தபடியே பாக்டீரியா தொற்றுகளை அழிக்க என்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும், அல்லது உங்கள் உணவில் எதை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பாருங்கள்.

முதலில் பாக்டீரியா குறித்த சில அடிப்படைத் தகவல்களையும் தொற்று ஏற்பட்டால் என்ன மாதிரியான அறிகுறிகள் தெரிந்திடும் என்று தெரிந்து கொள்ளலாம்.

பாக்டீரியா :

பாக்டீரியா என்பது மைக்ரோஸ்கோப்பினால் பார்க்க முடிந்த ஓர் உயிரினம் ஆகும். இது எல்லா இடங்களிலும் இருக்கும். இங்கு மட்டும் வசிக்கும் என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லாமல் எல்லாவிதமான சூழலிலும் தாக்கு பிடிக்கக்கூடியது. செடிகள், விலங்குகள்,மனிதர்கள் என எல்லாரிடத்திலும் இருக்கக்கூடியது.

பொதுவாக பாக்டீரியா என்று சொன்னாலே தீங்கு விளைவிக்கக்கூடியது என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறது. உண்மையில் இயற்கைக்கு இந்த பாக்டீரியா பல வகைகளில் உதவி செய்கிறது, ஒரு செடி தன்னுடைய செடிகள் வளர்வதிலிருந்து நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதற்கும் பாக்டீரியா தேவை.

பாதுகாப்பு :

பொதுவாக எல்லா பாக்டீரியாவுமே உங்களுக்கு தீங்கு விளைவிக்ககூடியது அல்ல, சில பாக்டீரியாக்கள் உங்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும். அதே போல பாக்டீரியா உடலின் இந்தந்த பாகங்களை மட்டும் தாக்கும் என்று சொல்ல முடியாது, உடலின் எந்த பாகங்களையும் இது தாக்கக்கூடும்.

வகைகள் :

பாக்டீயாவை அதன் வடிவங்களைக் கொண்டு மூன்று வகைகளாக பிரித்திருக்கிறார்கள். முதலில் பேசிலி எனப்படுக்கூடிய ஒரு வகை இது கம்பி வடிவத்தில் இருக்கும், இரண்டாவதாக சொல்லப்படக்கூடிய கோகி எனும் வகை வட்ட வடிவத்தில் இருக்கும். மூன்றாவது ஸ்பிரிலா,

பாக்டீரியாவை கிராம் பாசிடிவ் அல்லது கிராம் நெகட்டிவ் என்பார்கள். கிராம் பாசிடிவ் என்று சொல்லப்படக்கூடிய பாக்டீரியாவில் மிகவும் கடினமான புறச்சுவர்கள் கொண்டிருக்கும், கிராம் நெகட்டிவ் வகை பாக்டீரியாவில் அப்படி கடினமான சுவர்கள் இருக்காது.

வைரஸ் :

சிலர் பாக்டீரியா மற்றும் வைரஸ் ஒன்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறு . இவை இரண்டுக்குமே நோய் பரப்பும் ஆற்றல் உள்ளது. பாக்டீரியா வைரஸை விட பெரிதாக இருக்கும் அதை விட பாக்டீரியா பல்கிப் பெருகும் , வைரஸ் தன்னைத்தானே உற்பத்தி செய்து கொள்ளாது.

வைரஸ் தன்னைத் தானே உற்பத்தி செய்து கொள்வதற்கு பதிலாக தான் தாக்குகிற செல் மூலமாக அதன் டிஎன்ஏவை குலைத்து முடக்கிவிடும்.

அறிகுறிகள் :

நம் உடலில் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்பட்டால் தாக்கப்பட்ட இடத்தை பொருத்து அதன் அறிகுறிகள் இருக்கும். சில நேரங்களில் அறிகுறிகள் மிகச் சாதரணமாக தோன்றிடும், வழக்கமாக இப்படி இருப்பது தானே…. என்று நினைத்து நாம் கவனம் செலுத்தவில்லை என்றால் பெரிய நோய்க்கு அதுவே காரணமாக அமைந்திடும்.

மூக்கு ஒழுகுதல், தலைவலி, இருமல்,மூக்கடைப்பு, சோர்வாக உணர்வது ஆகியவை ஏற்படும். இவை சரியாகாமல் நீடிக்கும் நாட்களை வைத்தே உங்கள் உடலில் ஏற்பட்டிருக்கக்கூடிய பாக்டீரியா தொற்றின் தீவிரத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

கற்றாழை :

பல்வேறு உடல் உபாதைகளுக்கு கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. இவற்றில் ஆண்ட்டிபயோட்டிக்ஸ் அதிகமாக இருக்கிறது. கற்றாழை ஜெல் சருமத்திற்கு மிகவும் நல்லது. இவற்றில் 90 சதவீதம் வரை கிராம் பாசிடிவ் வகை பாக்டீரியாக்களை கொண்டிருக்கிறது. இந்த வகை பாக்டீரியாக்கள் உடலுக்கு தீங்கினை ஏற்படுத்தாது.

சருமத்தில் ஏற்பட்டிருக்கிற கொப்புளங்கள், பரு, கருவளையம், கரும்புள்ளி ஆகியவற்றிற்கு கற்றாழை மிகச் சிறந்த மருந்தாக இருந்திடும், சருமத்திற்கு மட்டுமல்ல உடலினுள்ளே ஏற்பட்டிருக்கக்கூடிய பாக்டீரியா தொற்றினை தவிர்க்க கற்றாழை சாறு பருகலாம்.

தேன் :

உடலில் ஏற்பட்டிருக்கக்கூடிய பல்வேறு விதமான பாக்டீரியாக்களை எதிர்த்து சண்டையிடும். சருமத்தில் ஏற்பட்டிருக்கும் பாக்டீரியா தொற்றுக்கு நீங்கள் தேனை பயன்படுத்தலாம். அதே போல இருமல்,சோர்வு போன்ற அறிகுறிகள் தெரிந்தால் சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் :

வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஒரு சமையல் பொருள். இது உங்களது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சளுடன் தண்ணீரைக் குலைத்து சருமத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய கொப்புளங்கள் உள்ள இடத்தில் தடவலாம். வயிற்று வலி, செரிமானக்கோளாறு இருந்தால் முதலில் சூடான நீரில் மஞ்சள் கலந்து இரண்டு நாட்களுக்கு குடித்திடுங்கள். அதன் பிறகு தண்ணீருக்கு பதிலாக பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாம்.

தயிர் :

தயிரில் ஏற்கனவே சில பாக்டீரியாக்கள் இருக்கும், ஆனால் இவை நன்மையளிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் தான், உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவும், அதனால் தான் தினமும் உணவில் கடைசியா தயிர் சாதத்தை சாப்பிடுகிறோம்.

ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆரோக்கியம், சருமம்,தலைமுடி என எல்லாவற்றிற்கும் உதவக்கூடியது இது. பாக்டீரியா தொற்றினை நீக்கவும் மிக உதவிகரமாக இருந்திடும். பாக்டீரியா தொற்றிற்கு பெஸ்ட் சாய்ஸ் என்றால் இதனைக் குறிப்பிடலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் நேரடியாக இதனைக் கொண்டு கழுவலாம்.

உங்களது சருமம் மிகவும் சென்ஸ்டிவ்வானது என்றால் தண்ணீரில் கலந்து பயன்படுத்துங்கள். உள் உறுப்புகளில் பாதிப்பு என்றால் சூடான நீரில் இரண்டு ஸ்பூன் வினிகரை கலந்து குடித்திடுங்கள்.

எலுமிச்சை :

செரிமானக்கோளாறு, அல்லது நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்பட்டால் எலுமிச்சை பெஸ்ட் சாய்ஸ். பாக்டீரியாவினால் ஏற்பட்டிருக்கக்கூடிய மஸ்கஸை இது உடனடியாக நீக்கிடும். அதோடு இதிலிருக்கும் அமிலத்தன்மை பாக்டீரியாவை அழிக்க பெரிதும் உதவிடுகிறது.

இஞ்சி :

சமையலில் பயன்படுத்துக்கூடிய இன்று, பழங்கால மருத்துவத்தில் இஞ்சி கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் என்பதால் சாதரணமாகவே இதனை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். தினமும் இஞ்சி டீ தயாரித்து குடியுங்கள். ஒரு ஸ்பூன் அளவு தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிய இஞ்சியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கிளாஸ் தண்ணீரில் அதனைப் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் நன்றாக கொதித்ததும் இறக்கி விடலாம்.

அதன் பிறகு, அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.

தேங்காய் எண்ணெய் :

தலைமுடிக்கு பயன்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெயில் ஆண்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆண்ட்டி வைரல் துகல்கள் நிறைவே இருக்கிறது. பாக்டீரியா தொற்றினை தவிர்க்க பயன்படுத்தக்கூடிய மிக எளிமையான பொருட்களில் இதுவும் ஒன்று. இதே போல எசன்சியல் ஆயிலில் எனப்படக்கூடிய டி ட்ரீ ஆயிலயும் பயன்படுத்தலாம்.

வெந்தயம் :

இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்திடும். இதனால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருந்தால் அது தானாக குறைய இது உதவியாக இருக்கும். வெந்தயத்தினை ஊற வைத்த நீரைக் குடிக்கலாம். அல்லது தண்ணீரில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தினை போட்டு கொதிக்க வைத்திடுங்கள், அந்த தண்ணீரை எடுத்துக் குடிக்கலாம்

பூண்டு :

அன்றாட சமையலில் பயன்படுத்தக்கூடிய பூண்டில் நிறைய ஆண்டிபயாடிக் துகள்கள் நிறைந்திருக்கிறது. இதனை அன்றாட சமையலில் தொடந்து சேர்த்து வர பாக்டீரியா தொற்றிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.

Related posts

மருத்துவர் கூறும் தகவல்கள்! பல் துலக்கும்போது நீங்க செய்யும் இந்த சிறு தவறு எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு இதுவும் காரணமா?

nathan

கல்லீரலில் பிரச்சனை எதுவும் வரக்கூடாதா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா ஆயுர்வேத முறைப்படி நீர் அருந்துவதற்கான சரியான வழிமுறை!!!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேப்பிலையின் சில முக்கிய நன்மைகள்!!!

nathan

கருக்குழாய் அடைப்பும் நவீன சிகிச்சைகளும்

nathan

பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 5 உண்மைகள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்! தாங்க முடியாத கால் வலியை நொடியில் குணப்படுத்தும் முன்னோர்களின் அற்புத மருத்துவம்..!

nathan

நீங்கள் சைனஸால அவதிப்படறீங்களா? அப்ப இத படிங்க!

nathan