தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை- 1 கப்
இட்லி அரிசி- 1/4 கப்
உளுந்து- 1/4 கப்
வெந்தயம்- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
உளுந்தை தனியாகவும், கோதுமைரவை, அரிசி, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக கலந்தும் 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
முதலில் உளுந்தை அரைக்கவும்.
உளுந்து பொங்க பொங்க அரைந்ததும் ஊறவைத்த மற்ற பொருட்களை சேர்த்து அரைக்கவும்.
நன்றாக அரைந்ததும் உப்பு கலந்து நான்கு மணிநேரம் புளிக்க விடவும். (சாதாரண இட்லி மாவை விட விரைவில் பொங்கி விடும். சீக்கிரமே புளித்தும் போகும்)
பின்னர் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விடவும்.
தேவைப்படும் போது இட்லிகளாக செய்யலாம். மிகவும் சாஃப்ட்டாக இருக்கும்.
இட்லி பிடிக்காதவர்கள் சாதாரண தோசை போலவே செய்யலாம்.
எல்லாவகை சட்னி, சாம்பாரோடு சுவையாக இருக்கும்.
ரவையை ஊறவைக்கும் போசு அது மூழ்கும் வரை தண்ணிர் ஊற்றினால் போதும். இல்லையென்றால் மீதமுள்ள தண்ணீரில் விட்டமின்கள் கரைந்து வீணாக போய்விடும்.இந்த மாவு அதிக நாட்களுக்கு இருக்காது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மூன்று நாட்களுக்குள் முடித்து விடவேண்டும். இல்லை என்றால் ரொம்ப புளித்து விடும். இட்லியாக ஊற்றும் போது இட்லி தட்டில் துணி போட்டு ஊற்றினால் சூடாகவே எடுக்க வரும்.