32.8 C
Chennai
Thursday, Jul 3, 2025
Parkinsons Law 2
ஆரோக்கியம் குறிப்புகள்

நீங்கள் ஒரு வேலையை தள்ளிப்போடுவதற்கு இதுதான் காரணம்!தெரிஞ்சிக்கங்க…

ஒரு வேலையை அல்லது பணியைச் செய்ய காலம் தாழ்த்துவதற்குக் காரணம் அதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது தான் என்று புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலம் தாழ்த்துவது என்பது எல்லோருக்கும் இருக்கும் பழக்கங்களில் ஒன்று தான். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மனநிலை சரியில்லாமலோ அல்லது எதிர்பார்த்த ´அவுட்புட்´ வரவில்லை என்றாலே ´நாளைக்குச் செய்துகொள்ளலாம்´ என்று அந்த வேலையை தள்ளிவைப்பதுண்டு.

இன்று ஒருவரை சந்திக்கச் செல்ல வேண்டும் என்ற நிலையில் சூழ்நிலை மோசமாக இருந்தால் அதை அடுத்த நாளுக்கு ஒத்திவைப்பதுண்டு.

ஒருவேளை அந்த வேலைக்கு காலக்கெடு இருந்தால் அதற்குள் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இந்நிலையில், காலம் தாழ்த்துவதற்கும் காலக்கெடு நிர்ணயிப்பதற்கும் உள்ள தொடர்பு குறித்து நியூசிலாந்து ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சில முடிவுகள் தெரியவந்துள்ளன.

விருப்பமில்லாத காரணத்தினால் இன்று செய்ய வேண்டிய ஒன்றை நாளைக்கோ அல்லது காலக்கெடு முடியும் வரையிலோ தள்ளிப்போடுவதற்குக் காரணம் காலக்கெடு நிர்ணயிக்கப்படுவதுதான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அதாவது ஒரு பணியைத் தள்ளிபோடுவதற்கு, காலக்கெடு அல்லது குறுகிய காலக்கெடு (short deadline) வைப்பதுதான் காரணம் என்றும் ஒரு வேலையை விரைந்து முடிக்க காலக்கெடு உதவாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின் முடிவுகள் ´எக்கனாமிக் என்கொயரி´ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

ஒடாகோ பிசினஸ் ஸ்கூல் – பொருளாதாரத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்டீபன் நோல்ஸ் மற்றும் அவரது இணை ஆசிரியர்கள் இந்த முடிவை தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலக்கெடு – அதாவது ஒரு வருடம், பல மாதங்கள் என்று காலக்கெடு நிர்ணயிக்கும்போது, ´இன்னும் நேரமிருக்கிறது´ என்று வேலையை தள்ளிப்போடுவது, அவ்வாறே கடைசி நேரத்தில் வேலையை முடிக்க முற்படும்போது வேலை அரைகுறையாக முடிய வாய்ப்புள்ளது.

அதுவே காலக்கெடு இன்றி இருக்கும்போது மனிதர்களின் மனநிலை வேறுபடுகிறது. எந்தவொரு அழுத்தமும் இல்லாத சூழ்நிலையில் பணி விரைவாகவும் சிறப்பாகவும் முடிக்கப்படுகிறது. சிறப்பான முடிவுகளுக்கு குறைந்த காலக்கெடுவை நிர்ணயிக்கலாம். அதாவது, ஒரு பணியைச் செய்ய ஒரு வாரம், அதிகபட்சம் ஒரு மாதம் என காலக்கெடுவை நிர்ணயித்தாலும் வேலைகள் சரியாக முடிக்கப்படும் என்று ஆய்வு கூறுகிறது.

இதற்காக மாணவர்களுக்கு ஒரு கணக்கெடுப்பு வேலை கொடுக்கப்பட்டது. காலக்கெடு இல்லாதபோது கணக்கெடுப்புகள் விகிதம் அதிகமாகவும் காலக்கெடு நிர்ணயிக்கும்போது மிகவும் குறைவாகவும் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

எனவே, நீங்களும் காலக்கெடு இன்றியோ அல்லது குறைவான காலக்கெடுவுடனோ ஒரு வேலையைச் செய்து பாருங்கள்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆடைகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan

நமது உடல்நலத்தை மேம்படுத்த பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!!!

nathan

ஆச்சரியப்படுத்தும் தகவல்கள்! காதலின் ஈர்ப்பினால் இப்படியும் நடக்குமா?

nathan

காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர்

nathan

நம் வாழ்க்கையில் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாத 6 கெட்ட பழக்கங்கள்!!தெரிந்துகொள்வோமா?

nathan

வேப்பிலையின் தீமைகள்

nathan

இந்த பெண்ணை திருமணம் செய்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் -பொருத்தம் பார்ப்பது எப்படி?

nathan

மன ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான வழிகள் -தெரிந்துகொள்வோமா?

nathan

madras eye symptoms in tamil – மட்ராஸ் கண் அறிகுறிகள்

nathan