34.5 C
Chennai
Monday, Jun 22, 2026
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உடல் எடை குறைப்பில் செய்யும் தவறுகள்

உடல் எடையை குறைப்பதற்காக தீவிரமாக முயற்சி செய்வதும் பலன் இல்லாமல் கவலைப்படுபவர்கள் அதிகம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்படுகிறார்கள். எடையை குறைத்து தொப்பை இல்லாத ஜீரோ சைஸ் வயிறு என்பது பலரது கனவாக இருக்கிறது. இந்த நோக்கத்தில் பல முயற்சிகளை மேற்கொள்ளும் போது நம்மை அறியாமலே ஒரு சில தவறுகளை செய்கிறோம். அதுவே எடை குறையாமல் இருப்பதற்கு காரணமாக அமைகிறது.

முதலில் மனது தயாரானதும், எடைக்குறைப்புக்கு உடல் தயாராகுவதற்கு சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் தான் உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க முடியும். உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது செய்யும் பொதுவான தவறுகள் பற்றியும் சரி செய்யும் விதம் பற்றியும் இங்கே பார்க்கலாம்.

சிலர் உண்ணும் உணவை குறைப்பதற்காக வழக்கமாக சாப்பிடும் அளவில் நான்கில் ஒரு பங்கு சாப்பிடுவார்கள். இதனால் பசி அதிகரித்து அவதிப்படுவார்கள். ஒரு கட்டத்தில் கட்டுப்பாடு இல்லாமல் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். அதனால் பிடித்த உணவை அதிகம் உண்ணாமலும் அதிகம் தவிர்க்காமலும் அளவாக சாப்பிடுங்கள். சிலர் உடல் எடையை குறைப்பதற்காக பழச்சாறு அருந்துவார்கள். ஆனால் பழச்சாறுகள் உடல் எடையை குறைப்பதற்கு உதவுவதை காட்டிலும் அதிக அளவு பசியை தூண்டிவிடும்.

உடல் எடையை வேகமாக குறைப்பதற்காக தொடர்ந்து அதிவேக உடற்பயிற்சியில் ஈடுபடுவ்தும் தவறு. இது உடல் எடை குறைப்புக்கு பதிலாக சோர்வை உண்டாக்கும். மாடிப்படிகளில் ஏறி இறங்குதல், குனிந்து நிமிர்தல், தோப்புக்கரணம் போடுதல் என தினசரி அரைமணி நேரம் எளிமையான பயிற்சிகள் செய்தாலே போதும்.

துரித கொழுப்பு உணவுகளை உடனடியாக தவிர்க்கலாம். உடல் எடையை குறைப்பதற்காக சிலர் உணவை குறைத்துவிட்டு நொறுக்கி தீனிகள் சாப்பிட்டு வயிற்றை நிரப்புவார்கள். இதுவும் எடை குறையாமல் இருப்பதற்கு காரணமாகும்.

உணவுக்கட்டுப்பாட்டை ஓரிரு நாட்கள் பின்பற்றிய பிறகு இடையில் இரண்டு நாட்கள் பின்பற்றாமல் இருந்து மீண்டும் தொடர்வது எந்த பலனையும் கொடுக்காது.

எடையை குறைப்பதற்கு கருத்தில் கொள்ள வேண்டிய பிற விஷயங்கள்

7 முதல் 8 மணி நேர உறக்கம் அவசியம். இரவு உணவு அளவாக இருக்க வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருக்காமல் அவ்வப்போது எழுந்து நடக்கலாம்.

Related posts

கர்ப்ப காலத்தில் வயிற்று சுருக்கங்கள் எதனால் ஏற்படுகிறது

nathan

பற்களை கடிக்கும் பழக்கம் இருக்கா ? சாதாரண பழக்கம் என்று நினைக்க வேண்டாம் …….

nathan

உங்கள் வீட்டை கண்ணாடியைக் கொண்டு அலங்கரிப்பது எப்படி?

nathan

வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா? எப்படி செய்யலாம்?

nathan

fatty liver grade 1 in tamil – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சிரமமே இல்லாத பிரசவத்திற்கு பழங்கால இந்தியர்கள் கையாண்ட இரகசிய சூட்சமங்கள்!

nathan

அதிகமான டென்சன் சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்யுமாம் – அதிர்ச்சி தகவல்!

nathan

தெரிஞ்சிக்கங்க…பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!!

nathan

நின்று கொண்டே வேலை செய்வதால் ஏற்படும் வேதனை

nathan