31.7 C
Chennai
Saturday, Jun 1, 2024
6 pushups2
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…புஷ்-அப் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

புஷ்-அப் செய்வதால் வலிமை கிடைக்கும். புஷ்-அப் செய்வதால் கிடைக்கும் முதல் உடல் நல பயன் இது தான். புஷ்-அப் செய்வதென்றால் முதலில் உங்கள் உடலை இரு கைகள் மற்றும் கால்களின் மீது சமநிலைப்படுத்தி, தரையின் மீது உடலை மட்ட நிலையில் வைக்க வேண்டும். உங்கள் கைகளை கொண்டு மேலேயும் கீழேயும் செல்லலாம். இதனால் உடலின் பல்வேறு உறுப்புகள் வலுவடையும். நீங்கள் இது வரை புஷ்-அப் செய்ததில்லை என்றால் சில வீடியோக்களை பாருங்கள். இந்த திடப்படுத்தும் உடற்பயிற்சி பல்வேறு காரணங்களுக்காக நன்மையை அளிக்கும். அவைகளைப் பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.

 

மிகப்பெரிய பாடி பில்டர்கள் கூட தங்கள் உடற்பயிற்சியை புஷ்-அப் முதல் தான் தொடங்குவார்கள். சொல்லப்போனால் இது தான் மிக அடிப்படையான உடற்பயிற்சியாகும். அதே போல் மிக முக்கியமான உடற்பயிற்சியும் கூட. இதனை கொஞ்ச வாரங்களுக்கு செய்தாலே போதும், உங்கள் நெஞ்சு மற்றும் ட்ரைசெப்ஸ் பகுதிகளில் கண்டிப்பாக சில மாற்றங்களை காண்பீர்கள்.

 

நீங்கள் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டுமானால், உங்கள் அன்றாட வாழ்க்கையில் புஷ்-அப் செய்யுங்கள். புஷ்-அப் செய்வதால் கிடைக்கும் பல உடல்நல பயன்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள். உங்களுக்கு வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனை இருந்தால், உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு மருத்துவரை அணுகுங்கள்.

இலவசம்

புஷ்-அப் செய்வதற்கு உங்கள் கைகளில் இருந்து ஒரு பைசா கூட செலவு செய்ய தேவையில்லை. அதற்கு எந்த ஒரு கருவியும் தேவையில்லை. ஜிம்மில் சேருவதற்கு உறுப்பினர் கட்டணம் என கூட எதுவும் தேவையில்லை. உங்களுக்கு பயிற்சியாளர் கூட தேவையில்லை. இந்த பயிற்சியில் ஈடுபட யாருடைய வழிகாட்டலும் தேவையில்லை. புஷ்-அப் செய்வதால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

பல்வேறு தசைகளின் ஈடுபாடு

புஷ்-அப் செய்வதால் உடலின் மேற்பகுதியில் உள்ள பல தசைகள் முனைப்புடன் வேலை செய்யும். ட்ரைசெப்ஸ், நெஞ்சு மற்றும் உங்கள் தோள்பட்டைகள் போன்ற பகுதிகள் அனைத்தும் இதனால் ஈடுபடும். புஷ்-அப் செய்வதால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்று.

வேறுபாடுகள்

புஷ்-அப் செய்யும் ஸ்டைல்களை நீங்கள் பல விதத்தில் மாற்றலாம். இதனால் பல நன்மைகளும் கிட்டும். ஒவ்வொரு ஸ்டைலிலும் பல்வேறு பகுதிகள் முனைப்புடன் செயல்படுவதால், பல்வேறு பயன்கள் கிடைக்கும். அதனால் புஷ்-அப் ஸ்டைல்களை மாற்றுங்கள். அதே போல் அதன் தீவிரத்தையும் மாற்றுங்கள். புஷ்-அப் செய்வதால் உங்கள் நெஞ்சுக்கு கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்று.

இதயகுழலிய பயன்கள்

இந்த உடற்பயிற்சி கொழுப்பை குறைக்கவும் தசைகளை வளர்க்கவும் உதவும். கார்டியோ உடற்பயிற்சிகளை போல் இதனையும் சீரான முறையில் செய்யலாம். புத்-அப் செய்வதால் கிடைக்கும் இதயகுழலிய பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

மைய வலிமை

உங்கள் மைய தசைகளை வலிமைப்படுத்தவும் கூட இது மிக சிறந்த உடற்பயிற்சியாகும். புஷ்-அப் செய்யும் போது உங்கள் வயிற்று பகுதியில் உள்ள தசைகள் வலுவடையும்.

எலும்பு திணிவு

புஷ்-அப் உடற்பயிற்சியை சீராக செய்து வந்தால், உங்களின் தோள்பட்டை, கைகள், முழங்கைகள் மற்றும் மணிக்கட்டுகள் போன்றவைகள் வலுவடையும். புஷ்-அப் செய்து வந்தால், குறிப்பிட்ட வயதுக்கு பிறகும் கூட உங்கள் எலும்புகளும் வலிமையுடன் இருக்கும்.

மெட்டபாலிசம்

புஷ்-அப் செய்வதால் மெட்டபாலிசம் துரிதமாகும். இதனால் கொழுப்பு சிறப்பான முறையில் குறையும். புஷ்-அப் செய்வதால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

Related posts

சூடு தனிய சித்த மருந்துகள்

nathan

சளித் தொல்லை, ஜீரணசக்திக்கு மூலிகைப்பொடி

nathan

டெங்கு காய்ச்சல் – வைத்தியர் பொ.மனோகரன்

nathan

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி விடுதலைத் தரும் பழங்கள்!

nathan

சர்க்கரை நோயாளிகள் பாதாம் சாப்பிடலாமா? அப்ப இத படிங்க!

nathan

ரத்த அழுத்தம்

nathan

தற்கொலை எண்ணம் வரக்காரணம் என்ன?

nathan

உங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்!

nathan

அக்குள் அரிப்பு பயங்கரமா இருக்கா? இயற்கை தீர்வுகள்!

nathan