26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
3 junk food
ஆரோக்கிய உணவு

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும்? தெரிஞ்சிக்கங்க…

தற்போது இருக்கும் நவீன உலகில் மில்லியன் கணக்கான மக்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றி வருகின்றனர். ஒருவர் தான் பின்பற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக வளர்சிதை மாற்ற நோய்கள், மூட்டு மற்றும் எலும்பு கோளாறுகள், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், அதிக எடை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

மேலும் இதையெல்லாம் தவிர்க்க நாம் நிச்சயமாக பின்பற்ற வேண்டிய சில பழக்கவழக்கங்கள் உள்ளன. அவற்றை முறையாக பின்பற்றாத காரணத்தால் நம் உடல்நலம் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்புகள் மெது மெதுவாக பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. ஒன்அபவ் (OneAbove) என்ற ஹெல்த்கேர் டிவைஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நேஹா மிட்டல், புகைபிடிப்பது உள்ளிட்ட நமது வாழ்க்கை முறையை பாதிக்கும் பழக்கங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

நீங்கள் உண்ணும் அன்றாட உணவில் போதுமான அளவு காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது செரிமான பிரச்சனைகள் உட்பட பிற உடல்நலப் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை திரும்பப் பெறலாம். இதற்கு காய்கறிகள் உதவும்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல்: அலுவலகத்தில் நாள் முழுவதும் இருக்கையில் அமர்ந்திருப்பது அதிகளவில் புகைபிடிப்பதற்கு சமம். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, வேலைக்காகவோ அல்லது வாகனம் ஓட்டுவதற்காகவோ, அது நுரையீரல், மார்பகம் மற்றும் பெருங்குடல் போன்ற பல்வேறு புற்றுநோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. ஒவ்வொரு இரண்டு அல்லது இரண்டு மணி நேரத்திற்கும் சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்துவிட்டு உங்கள் வேலையைத் தொடரவும்.

தூக்கத்தில் சமரசம்: வாழ்க்கையில் முன்னேற ஒருவொரு மனிதனுக்கும் உழைப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அவரது உடல்நலனை பேண தூக்கம் மிக முக்கியம். சரியாக தூங்காமல் தூக்கத்தில் சமரசம் செய்து கொள்வது என்பது மிகவும் ஆபத்தான பழக்கங்களில் ஒன்று. நீங்கள் ஒரு இரவு சரியாக தூங்கவில்லை என்றால் அடுத்த நாள் உங்களுக்கு ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் கிறக்கம் இவற்றை கவனித்துள்ளீர்களா?

உடலுக்கு தேவையான ஓய்வு கொடுக்கும் அளவிற்கு நம் தூங்காமல், குறைவான நேரம் மற்றும் தரமில்லா தூக்க பழக்கத்தை மேற்கொள்வதால் நோயெதிர்ப்பு மண்டலம், சுவாசம் மற்றும் செரிமான அமைப்பு உள்ளிட்டவற்றில் நாளடைவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே நம் உடல் இயற்கையான வேகத்தில் புத்துயிர் பெறுவதை உறுதிப்படுத்த தினமும் குறைந்தபட்சம் 6 மணிநேரமாவது தூங்க வேண்டும்.

விலங்கு-புரத உணவுகளை அதிகமாக சாப்பிடுவது: சீஸ் மற்றும் இறைச்சி போன்ற புரதங்கள் அதிகம் இருக்கும் உணவுகளை நிறைய உண்பதால், IGF1 என்ற ஹார்மோன் காரணமாக ஏற்படும் புற்றுநோய் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த ஆபத்து காரணியை அதிகமாக எடுத்து கொள்ளும் ஒருவர் புகைப்பழக்கம் இல்லாதவராக இருந்தாலும் கூட, அவர் புகைபிடிப்பதற்கு சமமான பாதிப்புகளை உடலில் ஏற்படுத்துகிறது. எனவே இத்தகைய புரதங்களை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க, பீன்ஸ் போன்ற தாவர புரதங்களை உங்கள் உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.

தனிமையில் மட்டுமே விரும்புவது: அதிகம் நேரம் தனிமையில் இருக்க விரும்பும் நபர்களுக்கு இதயம் சார்ந்த பாதிப்புக்கள் ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும். கவலை, உணர்ச்சி தொந்தரவுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் போதை போன்ற கூடுதல் நோய்கள் இப்பழக்கத்தால் ஏற்படுகிறது. குறைந்தபட்சம் உங்கள் பேச்சை கேட்கும் மற்றும் உங்கள் நலனில் அக்கறை காட்டும் சில நல்ல நட்புகளை வளர்க்க முயற்சி செய்யுங்கள்.

Related posts

ருசியான குலாப் ஜாமூன் செய்ய வேண்டுமா…!

nathan

ஆண்களின் விந்தணு வீரியத்தன்மையை அதிகரிக்கும் தக்காளி சூப்

nathan

உங்களுக்கு தெரியுமா தேங்காய் எண்ணெயில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்துகொள்வோமா!.

nathan

ஆரோக்கியமான தின்பண்டங்களுக்கான யோசனைகள்

nathan

1 பழம்… 14 பலன்கள்… பிரமிக்கவைக்கும் மாதுளை!

nathan

கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!!!

nathan

மணத்தக்காளிக்காய்

nathan

சுவையான ஸ்ட்ராபெர்ரி புதினா ஜூஸ்

nathan

தெரிஞ்சிக்கங்க…இரத்த அழுத்த குறைவு உள்ளவர்களுக்கான சிறப்பான சில உணவுகள்!!!

nathan