27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
21 618fffe2a
சமையல் குறிப்புகள்

முட்டை உடையாமல் பதமாக வேக வைப்பது எப்படி? தெரிந்துகொள்வோமா?

முட்டை அவிப்பது என்பது ஒரு பெரிய கலை. அதிகம் அவித்தாலும் சுவையிருக்காது, சிறுது நேரத்தில் எடுத்தாலும் பச்சைவாடை போகாது.

அதிகம் அவிப்பதால் சுவையில் வித்தியாசம் வரப்போவதில்லை.

ஆனால் சத்து குறைந்துவிடும். சிலர் அப்படியே பச்சையாகவும் சாப்பிடுவார்கள்.

அது அனைவருக்கும் பொருந்தாது. இன்று எப்படி சரியான முறையில் முட்டையை வேக வைப்பது என்று பார்க்கலாம்.

 

செய்முறை
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் முட்டையை போட்டு அவிக்க வேண்டும். (முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தால், அறை வெப்பத்திற்கு வந்த பின்னர் தான் அவிக்க வேண்டும். )
நீர் கொதிக்க தொடங்கியதும், அரை அவியலாக வேண்டும் எனில் 3 நிமிடங்களிலும், நன்றாக அவிய வேண்டும் எனில் 9 நிமிடங்களிலும் எடுக்கலாம்.

அரை அவியல் எனில், 3 நிமிடத்தில் வெளியே எடுத்து வைக்கவும்.

மேலிருக்கும் முட்டை ஓட்டை மெதுவாக உடைத்தெடுக்கவும்.

 

அதில் உப்புடன் மிளகுதூள் சேர்த்து சாப்பிடலாம். நன்றாக அவித்த முட்டை எனில், 9 நிமிடங்களில் வெளியே எடுத்ததும், வெந்நீரை வெளியே கொட்டிவிட்டு, புதிய நீர் சேருங்கள். 2 நிமிடத்தில் ஓட்டை உடைக்கலாம்.

முட்டையை வேக வைக்கும் போது தண்ணீரில் ஒரு தேக்கரண்டி வினிகரை விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் உள்ளே இருப்பவை வெளியில் வராது.

Related posts

முருங்கைக்காய் சாம்பார்

nathan

கிளப் சாண்ட்விச் பரோட்டா சாப்பிட்டதுண்டா? இன்றே செய்து சாப்பிட்டு பாருங்கள்…

sangika

சுவையான முட்டை ஆப்பம் செய்வது எப்படி?

nathan

முருங்கைக்கீரை முட்டை பொரியல்….! பத்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்

nathan

மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பது நல்லதா? கெட்டதா? என்று தெரியுமா?

nathan

சைவ மீன் குழம்பு எப்படி செய்வது…?

nathan

சுவையான ஆப்பம்… இப்படி அரிசி அரைச்சு சுடுங்க!

nathan

சாதம் மீதி இருக்கா? சூப்பரா கட்லெட் செய்யலாம்!

nathan

ருசியான முட்டை சப்பாத்தி எப்படி செய்வது?…

sangika