27 C
Chennai
Thursday, Nov 14, 2024
25 kadappa sambar
சமையல் குறிப்புகள்

சூப்பரான கும்பகோணம் கடப்பா சாம்பார்

தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் மிகவும் பிரபலமானது தான் கடப்பா சாம்பார். இந்த சாம்பாரை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். நீங்கள் இந்த கடப்பா சாம்பாரை சுவைத்ததுண்டா? இல்லாவிட்டால், தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் இங்கு கும்பகோணம் கடப்பா சாம்பாரை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். இந்த கடப்பா சாம்பாரானது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, இதன் சுவை வித்தியாசமாக இருக்கும். சரி, இப்போது கும்பகோணம் கடப்பா சாம்பாரின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Kumbakonam Kadappa Sambar
தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – 1/4 கப்
உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்தது)
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

துருவிய தேங்காய் – 1/4 கப்
பூண்டு – 4 பற்கள்
பச்சை மிளகாய் -1
சோம்பு – 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
பட்டை – 1/4 இன்ச்
கிராம்பு – 2
பிரியாணி இலை – 1
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, மண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை கழுவிப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கி மசித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு பிரட்டி விட வேண்டும்.

பச்சை வாசனையானது போனதும், அதில் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி 5-7 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், கும்பகோணம் கடப்பா சாம்பார் ரெடி!!!

Related posts

புளி சேர்க்காத இந்த ரசமும், பருப்புத் துவையலும் நல்ல காம்பினேஷன்….

sangika

சுவையான காளான் குருமா

nathan

சுவையான செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல்

nathan

சுவையான மஞ்ச பூசணி சாம்பார்

nathan

சுவையான வெங்காய சட்னி

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு பொடிமாஸ்!….

sangika

காளான் பிரியாணி

nathan

சுவையான சீஸ் ஆலு பன்ச் ரெடி..

sangika

தோசை மீந்து விட்டதா… கவலைய விடுங்க..

nathan