25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
24 masala bread upma
ஆரோக்கிய உணவு

சுவையான மசாலா பிரட் உப்புமா

தற்போது பெரும்பாலானோர் வீடுகளில் பிரட் கொண்டு செய்யப்படும் சாண்ட்விச் தான் காலை உணவாகவும், ஸ்நாக்ஸாகவும் உள்ளது. அப்படி எப்போது பார்த்தாலும் சாண்ட்விச் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக, பிரட் கொண்டு உப்புமா செய்தால், நன்றாக இருக்கும். மேலும் இது ஒரு சிறப்பான காலை உணவாகவும், ஸ்நாஸாகவும் இருக்கும்.

குறிப்பாக மசாலா பிரட் உப்புமாவானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். அதிலும் மழைக்காலத்தில் சாப்பிட ஏற்றதாக இருக்கும். சரி, இப்போது மசாலா பிரட் உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Masala Bread Upma
தேவையான பொருட்கள்:

பிரட் – 3-4 துண்டுகள் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் (விருப்பமிருந்தால்)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ‘தாளிப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

தக்காளியானது நன்கு மென்மையானதும், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து மசாலாக்கள் அனைத்தும் ஒன்று சேரும் வரை வதக்கி விட வேண்டும்.

பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் அதில் பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், மசாலா பிரட் உப்புமா ரெடி!!!

Related posts

உங்களுக்கு தெரியுமா ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் 12 அற்புத காய்கனிகள் இதுவே..!

nathan

சற்றுமுன் பிரபல நடிகர் திடீர் மரணம்… இரங்கல் தெரிவித்து வரும் பிரபலங்கள்

nathan

ஜங்க் உணவுகள் உட்கொள்வது கருத்தரிப்பை பாதிக்குமா?

nathan

வாழைத்தண்டு மோர்–அல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்!

nathan

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சோயா பாலை அருந்துவதால் அவர்கள் இரத்த அழுத்தம் சீராகிறது. இதனால் இது இதய ஆரோக்கியத்தை சீராக்குகிறது.

nathan

அடிக்கடி நண்டு உணவுகள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

இம்யூனிட்டிக்கான சிறந்த உணவுகளை தெரிவு செய்து உண்பது அவசியம் நம்மை பாதுகாப்பது இன்றியமையாக ஒன்றாக உள்ளது.

nathan

உங்களுக்கு சாப்பிட்டதும் வயிறு பலுன் போல ஊதி விடுகிறதா?

nathan

சுவையான கோதுமை மசாலா தோசை

nathan