நீளமான, அடர்த்தியான கூந்தலை பெறுவது என்பது இன்றைய காலக்கட்டத்தில் பலரின் கனவாக இருக்கின்றது.
முடி உதிர்தல் மற்றும் கூந்தல் தொடர்புடைய பிரச்சினைகளைத் தடுக்க ஒருவர் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
நாம் சரியான உணவில் கவனம் செலுத்தாத வரை கூந்தலின் வேர்களை வலுவாக்கவும் முடியாது.
அடுத்தக்கட்ட நடவடிக்கையாக முடி வளர்ச்சியை துண்டு இயற்கை எண்ணையை பயன்படுத்துங்கள்.
இன்று நாம் முடி வளர்ச்சியை தூண்டும் எண்ணையை எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
கரு கரு கூந்தலுக்கான இயற்கை எண்ணை
செம்பருத்தி பூ – 10
செம்பருத்தி இலை – 10
தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்
வேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
செய்முறை
10 சிவப்பு செம்பருத்தி பூக்களையும் 10 செம்பருத்தி இலைகளையும் பொடிதாக நறுக்கி மிக்சியில் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
பின்பு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேற்றவும்.
எண்ணெய் சூடேறியதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, அரைத்த கலவையை எண்ணெயில் சேர்க்க வேண்டும். பின்பு அதனுடன் சிறிதளவு வேப்பிலையை சேர்க்கவேண்டும்.
இந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து காலையில் தலைகுளிக்க வேண்டும்.
அல்லது தலை குளிப்பதற்கு முன் இந்த செம்பருத்தி எண்ணெய்யை தலையில் தேய்த்து மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து அதாவது 1/2 மணி நேரம் கழித்து பின்னர் தலை குளிக்கவும்.