சைவம்

வாழைத்தண்டு சாதம்

என்னென்ன தேவை ?

வாழைத்தண்டு ஒரு துண்டு

அரிசி ஒரு கப்

தேங்காய் ஒரு மூடி (துருவியது)

தேங்காய்ப் பால் ஒரு கப்

பனங்கற்கண்டு (பொடித்தது) – 2 டீஸ்பூன்

மோர், உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

காய்ந்த மிளகாய் 7

கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்

பெருங்காயம் சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

நல்லெண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது ?

வாழைத்தண்டைப் பொடியாக நறுக்கி மோரில் ஊறவையுங்கள். அரிசியைக் கழுவி, அதனுடன் நறுக்கிய வாழைத்தண்டு, ஒரு கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப் பால், பொடித்த பனங்கற்கண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் வேகவையுங்கள். குக்கர் சூடு குறைந்ததும் சாதத்தை ஒரு தாம்பாளத்தில் கொட்டி ஆறவிடுங்கள்.

வாணலியை அடுப்பில் வைத்து துருவிய தேங்காயைப் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டுத் தாளியுங்கள். பிறகு ஆறவைத்துள்ள சாதம், தேங்காய்த் துருவல் இரண்டையும் அதில் கொட்டிக் கிளறி, இறக்கிவையுங்கள்.samayal 002 2962803h

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button