25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
jaggery 1
ஆரோக்கிய உணவு

வெள்ளை சர்க்கரையை விட நாட்டு சர்க்கரை உடலுக்கு ரொம்ப நல்லது!

சர்க்கரை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு வரை நம் உணவில் வெல்லம் தான் மிக முக்கிய இனிப்பு பொருளாக பயன்படுத்தப்பட்டது.

வெயில் நாட்களில் கூட வெல்லத்தை தண்ணீரில் கரைத்து அதோடு கொஞ்சம் ஏலக்காய் தட்டிப்போட்டு மணக்க மணக்க குடிப்பார்கள். சரி வாங்க வெல்லத்தை தினமும் எடுத்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..

நன்மைகள்:-

வெல்லம் இரும்பு சத்து நிறைந்ததால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இரத்தத்தையும் சுத்திகரிப்புச் செய்வதால் நோய் பாதிப்புகளும் வராது. மேலும் இதில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் அமிலத்தின் அளவை பராமரித்து இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.
இரவு உணவு உண்ட பின் ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுவதால் செரிமாண சக்தி அதிகரிக்கும். அதுமட்டுமன்றி நம் விருந்து பழக்கத்திலும் இலையில் முதலில் கொஞ்சம் வெல்லம் வைப்பார்கள். அது போல மற்ற நேரங்களில் குடிக்கும் தண்ணீரிலும் ஒரு கட்டி வெல்லம் கலந்து குடித்தாலும் செரிமானத்திற்கு நல்லது.

வெல்லம் உடலை குளுர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். அதனால்தான் வெயில் நாட்களில் பானகம் என்ற பெயரில் வெல்லம் கலந்த நீர் குடிப்பார்கள்.

கல்லீரலின் வேலை உடலின் பிரதானமானது. அதுதான் உடலை சுத்தப்படுத்துதல், உறுப்புகளுக்கு தேவையான கெமிக்கல், ஊட்டச்சத்துகளை பிரித்து அனுப்பும் வேலையைச் செய்கிறது. எனவே அந்த கல்லீரலை சுத்தமாகவும், பாதுகாப்பானதாகவும் வைத்துக்கொள்ள வெல்லம் உதவுகிறது.

Related posts

ரத்தசோகை தீர்க்கும் பசலைக்கீரை!

nathan

குழந்தையின்மையை போக்கும் ஆவாரபஞ்சாங்கம்.!

nathan

பாடி பில்டர் போன்ற உடற்கட்டு பெற எப்படி உணவுப் பழக்கம் பின்பற்ற வேண்டும்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா எல்லா நேரத்திலும் நெய் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு தான்..!!

nathan

அள்ள அள்ள ஆரோக்கியம்… அசத்தல் கேழ்வரகு! நலம் நல்லது !!

nathan

சமைக்கலாம் வாங்க! கொண்டைக்கடலை கீரை சுண்டல்

nathan

சுவையான கேரளா ஸ்பெஷல் ஆப்பம் : மிருதுவாக இருக்க உதவும் சில டிப்ஸ்!!!

nathan

ஏன் தெரியுமா? கர்ப்ப காலத்தில் பெண்கள் கொய்யா சாப்பிட வேண்டும்

nathan

இதை முயன்று பாருங்கள் பன்னீர் பிரைடு ரைஸ்

nathan