28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
coversevenweirdthings
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…மன அழுத்தம் மூலமாக உங்கள் உடலில் ஏற்படும் விசித்திர மாற்றங்கள்!!!

இந்த அதிநவீன வாழ்வியல் முறையில் “நாளை” என்ற நாள் நடுத்தர மனிதனையும், “டார்கெட்” என்ற சொல் உயர்தர மனிதனையும். மன அழுத்தம் என்ற பரிசினை கொடுத்து அலைய வைக்கிறது. மன அழுத்தம் காரணமாக பலருக்கும் பல விதமான உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மன அழுத்தம் அதிகரிப்பதால் உடற்திறன் குறைவதே இதற்கான காரணம் என கூறப்படுகிறது.

 

விசித்திர மாற்றங்கள் என்றவுடன் பயப்படும் அளவு பெரிதாய் ஏதும் இல்லை. எனினும், அந்நியன் ரேஞ்சில் “இப்படி எல்லாமா நடக்கும்…” என்பது போல உங்கள் உடல்நலத்தில் சில மாற்றங்கள் ஏற்பட தான் செய்கிறது. “அட, போங்கய்யா.. உங்களுக்கு வேற வேலை இல்ல…” என்று நீங்கள் புலம்பினாலும் சரி, திட்டினாலும் சரி. மன அழுத்தம் அதிகமானால் உங்கள் உடலில் இந்த விசித்திர மாற்றங்கள் ஏற்படும் என்பது தான் நிதர்சனம்…

 

மூளையின் செயல் திறன் குறைப்பாடு

அதிகப்படியாக மன அழுத்தம் கொள்வதனால் மூளையில் அட்ரினலின் எனும் ஹார்மோன் சுரப்பி வெளியேற்றப்படுகிறது. இவை மூளையின் எச்சரிக்கை பகுதியை தொந்தரவு செய்கிறது. இதனால், நீங்கள் யோசிக்கவும், திட்டங்கள் இடவும் முடியாது போகும் மற்றும் படைப்பு திறனில் குறைப்பாடு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

“உச்சா” கஷ்டம்
மன அழுத்தம் அதிகரிப்பதனால் அடிக்கடி சிறுநீர் வருமாம். சிலருக்கு வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

பரு அதிகமாகும்

ஸ்ட்ரெஸ் ஹார்மோன் என கூறப்படும் கார்டிசோல் உங்கள் சருமத்தில் இருக்கும் சரும மெழுகு சுரப்பிகளின் தன்மையை சீர் குலைய செய்கிறது (sebaceous glands) இதன் காரணமாய் பரு, சருமம் சிவந்துபோதல், படை நோய் மற்றும் மற்ற சரும நோய் தாக்கங்கள் ஏற்பட காரணமாய் இருக்கிறது.

சளி/கபம்

மன அழுத்தம் அதிகரிப்பதனால் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் சிறு சிறு நோய் கிருமி தொற்றுகள் எளிதாக உங்கள் உடலில் தொற்றிக் கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் சளி, காய்ச்சல், இருமல் போன்ற சிறு சிறு உடல் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.

கூந்தல் உதிர்வு

நாள் பட, நாள் பட உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும் போது, கூந்தல் உதிரவும், உடைதலும் கூட அதிகமாகும். இது குறைந்தது மூன்று மாதம் வரையிலாவது நீடிக்கும். எனவே, வீணாய் மன அழுத்தம் கொள்வதை விட்டு வெளி வாருங்கள்.

மூளையில் சுருக்கம்

மூளையில் சுருக்கமா? என அதிர்ச்சி அடைய வேண்டாம். உங்கள் உடல் கூற்று படி மூளை சுருக்கம் ஏற்படுவது சாதாரணம் தான். ஆனால், உங்கள் மரபணு அந்த சுருக்கம் எற்படாது இருக்க ஒரு இணைப்பை தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கும். நீங்கள் மன அழுத்தம் கொள்ளும் போது, அந்த மரபணு தூண்டுதலில் ஏற்படும் இணைப்பு பகுதி சரியாக உருவாகாமல் போகிறது. இதனால் தான் உங்களது அதிக மன அழுத்தத்தினால் மூளையில் சுருக்கம் ஏற்படும் என கூறப்படுகிறது.

வெளி காயங்கள் ஆராது

மன அழுத்தம் அதிகமாக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் வெளி காயங்கள் அவ்வளவு சீக்கிரம் குணமாகாது. நோய் எதிர்ப்பு மணடலத்தில் ஏற்படும் குறைப்பாடு காரணமாக தான் தோலின் வெளிப்புறம் குணமடைய அதிக நாட்கள் ஏற்படுகிறது.

Related posts

இதெல்லாம் சைவ உணவே கிடையதாமா… இவளோ நாள் உங்கள நல்லா ஏமாத்தியிருக்காங்க!!!

nathan

தெரிந்து கொள்வோமா!மூல நோய் வர காரணம் என்ன? அறிகுறிகள் என்ன?

nathan

நீங்கள் ஃபிட்டா, அன்ஃபிட்டா என்பதை தெரிந்து கொள்வது எப்படி

nathan

மன நோயை குணப்படுத்தும் மீனெண்ணெய் மாத்திரைகள்

nathan

கோடை காலத்தில் எந்த உணவை தவிர்க்கலாம்!….

nathan

சூப்பர் டிப்ஸ்! தைராய்டு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

nathan

கனவுல நாய் உங்கள துரத்துதா? அப்ப அதுக்கு இதுதான் அர்த்தமாம்…

nathan

மட்பாண்டங்களை வைத்து சமைத்து சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டா?

nathan

படுத்ததும் தூக்கம் வரலையா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan