28.5 C
Chennai
Monday, May 19, 2025
t 14
Other News

சுவையான இறால் முட்டை பொடிமாஸ்

தேவையான பொருட்கள்

இறால் – 100 கிராம்

முட்டை – 2
மிளகு தூள் – சிறிதளவு
உப்பு – அரை ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
மிளகாய் தூள் – சிறிதளவு
வெங்காயம் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
வெங்காயத்தாள் – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துசுமார் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அதனை தோசை கல்லையில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும். அடுத்ததாக அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.

முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கிய இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறலாம்.

இப்போது சுவையான இறால் முட்டை பொடிமாஸ் ரெடி.

Courtesy: MalaiMalar

Related posts

நடிகை ரேகா நாயர் வெளிப்படை!அட்ஜஸ்ட்மென்ட்.. சொகுசா வாழலாம்.. புடிச்சா பண்ணுவேன்

nathan

மெட்டி ஒலியில் நடித்ததற்கு ஒருநாள் சம்பளம்

nathan

சனி வக்ர பெயர்ச்சி 2025:ராஜயோகம் தேடி வரும்

nathan

ரஜினியை சந்திக்க 55 நாட்கள் நடந்தே இமயமலைக்கு சென்ற ரசிகர்

nathan

என்ன கண்றாவி இதெல்லாம்…? படுக்கையறையில் தோழியுடன் கேவளமாக நடந்து கொண்ட பிக்பாஸ் ஷெரின்.. வைரலாகும் வீடியோ..

nathan

விடியற்காலையில், டீ அருந்துவது நல்லதா காபி அருந்துவது நல்லதா?

nathan

விஜயகாந்த் உடல் எப்போது தகனம்?முக்கிய விவரம்!

nathan

கல்யாணத்தை வெறுக்க இதுதான் காரணம்.. அனுயா ஓபன் டாக்..!

nathan

கலக்கும் பேச்சுலர் பட நாயகி திவ்ய பாரதி

nathan